திருப்பரங்குன்றத்திலே ஜிரா - with ரவி & சிலுக்கு:)
திருப்பரங்குன்றத்திலே முருகன் தானே? சிலுக்கு எப்படி?
ஈசருகி பாக மொழி செப்பின மோமு ஒக்கடே!"
ஈசருடன் ஞான மொழி பேசு முகம் ஒன்றே!
பாடல் வரிகள் தேடிடும் முருகன் அன்பர்க்கும்,
தமிழ் வரிகள் நாடிடும் தமிழ் அன்பர்க்கும்,
அன்பு உதவியாக... அவனருளால்!
திருப்பரங்குன்றத்திலே முருகன் தானே? சிலுக்கு எப்படி?
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 5/27/2009 12:18:00 AM

Posted by குமரன் (Kumaran) at 5/09/2009 04:07:00 PM 13 comments
Labels: *ஷண்முக நாயகன் தோன்றிடுவான், semi classical, அகத்தியர், குமரன்
இன்று கிருத்திகை. ஆனால் மனம் மிக கனத்துடன் இருப்பதால் பதிவை விரிவாக போட முடியவில்லை. என் அண்ணன் மகளின் கணவர் நுரையீரல் வலுவிழந்து மூச்சுவிடமுடியாமல் அப்போல்லோ மருத்துவ மனையில் தீவிர சிகித்ஸை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். வயது 40தான் ஆகிறது. அவருக்காக அவர் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப முருகனிடம் பிரார்த்தனை செய்யுமாறு நல்ல உள்ளங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
-
Posted by தி. ரா. ச.(T.R.C.) at 4/26/2009 11:46:00 AM 23 comments
Labels: *மனமிரங்கு மயில்வாகனா, திராச
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!
விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
முருகன் விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
மயில்மீது மன்னனை இருக்கவைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
மயில்மீது மன்னனை இருக்கவைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!
திரைப்படம் - கந்தரலங்காரம்
இசை - குன்னக்குடி வைத்தியநாதன்
Posted by நாமக்கல் சிபி at 3/31/2009 02:47:00 PM 17 comments
Labels: *சந்தனம் மணக்குது, semi classical, குன்னக்குடி, சிபி, டி.எல்.மஹாராஜன்
Posted by தி. ரா. ச.(T.R.C.) at 3/29/2009 01:50:00 PM 9 comments
Labels: *மாலைப் பொழுதினிலே ஒருநாள், classical, MS Subbulakshmi, கல்கி, திராச
முருகப்பெருமான் மீது இயற்றப்பட்டுள்ள சௌராஷ்ட்ர மொழிப் பாடல்களைப் பற்றி வெகு நாட்களுக்கு முன்னர் நண்பர் சிவமுருகனிடம் கேட்டிருந்தேன். அப்போது அவரிடம் இந்தப் பொத்தகம் இல்லாததால் உடனே தர இயலவில்லை. எப்போதோ கேட்டதை நினைவில் நிறுத்திக் கொண்டு இப்போது இந்தப் பாடலை அவர் அனுப்பியிருக்கிறார். சிவமுருகனுக்கு மிக்க நன்றி.




Posted by குமரன் (Kumaran) at 3/25/2009 07:09:00 PM 12 comments
Labels: classical, Saurashtra, காசி.ஆனந்தம், குமரன், சௌராஷ்ட்ரம்
இன்று கிருத்திகை திருநாள்.குமரனுக்கு உகந்த நாள். இப்போது நாங்கள் இருக்கும் சிங்கையில் வீட்டுக்கு அருகில் ஒரு முருகன் கோவில். செங்காங் முருகன் கோவில். கோவிலின் தோற்றம் கீழே இருந்து பார்த்தால் இப்படி இருக்கிறது.
முருகன் கோவில் பதிவு நாளை பார்க்கலாம் Posted by தி. ரா. ச.(T.R.C.) at 3/03/2009 05:43:00 AM 9 comments
Labels: *வேலவனே உனக்கு, திராச
அன்பர்கள் அனைவர்க்கும் தைப்பூச வாழ்த்துக்கள்! வடலூர் வள்ளல்பிரான் இராமலிங்கப் பெருமகனுக்குத் தைப்பூச ஜோதி தரிசனம்! பழனியில் பாத யாத்திரை! மலேசிய பத்துமலை மற்றும் நாகை-சிக்கலில் திருவிழா! இப்படிப் பல சிறப்புகள்!
தைப்பூசம்-ன்னா என்னாங்க? எதுக்குத் தைப்பூசம்?
முருகன் அன்னையிடம் வேல் வாங்கிய நாள் தான் தைப்பூசம்!
தாராகாசுரனை மலையில் வேலெறிந்து வீழ்த்திய நாள் என்றும் சிலர் சொல்வார்கள்!
தைப்பூசமான இன்று (Feb-8-2009) மேல் மருவத்தூரிலும் பெருவிழா! மதுரையம்பதியில் அன்னை மீனாட்சியும் அப்பன் சொக்கனும், வண்டியூர் மாரியம்மன் குளத்துக்கு வந்து தெப்பம் காண்பார்கள்! அது வரை மதுரை ஆலயத்தில் பூசைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்-ன்னு கேள்விப்பட்டிருக்கேன்!
இன்னிக்கு-ன்னு பார்த்து, ஒப்பிலியப்பன் கோயில் குடமுழுக்கும் (சம்ப்ரோக்ஷணம்) நடைபெறுகிறது இன்னொரு சிறப்பு! இதோ சுட்டி!
முருகனருள் வலைப்பூவில், இந்தச் சிறப்பு நாளில், ஒரு சிறப்புப் பாட்டைப் பார்க்கலாமா? கிளிக் கண்ணி+காவடிச் சிந்து! = வள்ளிக் கணவன் பேரை, வழிப் போக்கர் சொன்னாலும்-என்ற பாட்டு!

Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 2/07/2009 08:38:00 PM 12 comments
Labels: *வள்ளிக் கணவன் பேரை, krs, semi classical, கிளிக்கண்ணி, சுதா ரகுநாதன், நித்ய ஸ்ரீ
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - ஒரு
மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் - கருங்
கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் - பசும்
புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்
(மண்ணானாலும்)
பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன் ஆவேன் - பனிப்
பூவானாலும் சரவணப் பொய்கை பூ ஆவேன் - தமிழ்ப்
பேச்சானாலும் திருப்புகழ் பேச்சாவேன் - மனம்
பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்
(மண்ணானாலும்)
சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன் - பழச்
சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன் - அருள்
உண்டானாலும் வீடும் பேறும் உண்டாவேன் - தனி
உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்
(மண்ணானாலும்)
முருகா முருகா முருகா முருகா
***
சிறு வயதில் இருந்தே இந்தப் பாடலும் இதோடு இசைக்கப்படும் மற்ற முருகன் பாடல்களும் மிகவும் பிடிக்கும். அடிக்கடி கேட்டுக் கேட்டுப் பொருள் புரியாமலேயே மனப்பாடம் ஆன பாடல்கள் இவை. அதிலும் இந்தப் பாட்டில் 'ஆவேன் ஆவேன்' என்று வரும் போது திருச்செந்தூரில் கடற்கரை இருப்பதால் கடற்கரை மண் ஆவேன் என்பது புரிந்தது; மற்றவை புரியவில்லை. நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொன்றாகப் புரியத் தொடங்கியது.
குலசேகர ஆழ்வார் பத்து பாசுரங்களில் 'மீன் ஆவேன்; பறவை ஆவேன்; படி ஆவேன்; எம்பெருமான் திருமலையில் ஏதேனும் ஆவேனே' என்று பாடுவார். அப்பாசுரங்கள் இந்தப் பாடலை எழுதியவருக்குத் தூண்டுகோலாக இருந்தது போலும்.
சில வரிகளில் அந்த இடத்தில் / தலத்தில் எது சிறந்ததோ (திருச்செந்தூர்/மண்) அதுவாக ஆவேன் என்கிறார் பாடலாசிரியர். சில வரிகளில் பொதுவாக பொருட்களைக் கூறி அவற்றில் சிறப்பாகவும் விதப்பாகவும் இருப்பதாக (புல்/பூ) ஆவேன் என்கிறார்.
திருச்செந்தூர் என்றவுடனே பலருக்கும் அங்கே அலை வீசி நிற்கும் கடலும் கோவிலுக்கு நேரே நெடுக விரிந்திருக்கும் கடற்கரை மணல்வெளியும் தான் நினைவிற்கு வரும். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்களே; திருச்செந்தூரில் எங்கே குன்று என்றும் சிலர் கேட்கலாம். திருச்செந்தூரும் ஒரு குன்றின் மேல் தான் இருக்கின்றது. கடல்நுரைகளால் ஆன சிறு குன்றில் தான் கோவில் கட்டப்பட்டிருக்கிறது; கோவிலுக்குள்ளே ஆங்காங்கே அந்தக் குன்று வெளிப்படுவதைக் காணலாம். வள்ளி குகையையும் பலர் பார்த்திருப்பீர்கள். இப்படி தேடிப் பிடித்துத் தான் திருச்செந்தூரில் குன்றைக் காணவேண்டும். ஆனால் பரந்து விரிந்த மணல்பரப்பு அப்படி இல்லை. எல்லா அடியார்களும் ஓடி ஆடி நடந்து இளைப்பாறிக் கிடக்கும் வெளி அது. அடியார் பெருமை சொல்லவும் பெரிதே என்றாளே ஒளவைக்கிழவி. அந்த அடியார்களின் திருவடிகள் படும் இடத்தில் அறிவே இல்லாத பொருளாக மாறி இருக்கவும் அருளாளர்கள் விரும்புகிறார்களே. அந்த மரபை ஒட்டி இந்தப் பாடலை எழுதியவரும் திருச்செந்தூரில் அடியார்கள் திருவடி படும் இடமான மணல் வெளியில் ஒரு மண்ணாக இருப்பேன் என்கிறார் போலும்.
இறைவன் கட்டளைப்படி மண் ஆகும் வாய்ப்பு கிடைத்தால் திருச்செந்தூரில் மண் ஆவேன் என்றார். இறைவன் 'நீ மரமாக ஆவாய்' என்றால் அப்போது பழமுதிர்ச்சோலையில் அந்த மரம் ஆவேன் என்கிறார் பாடலாசிரியர். பழமுதிர்ச்சோலை என்றாலே அங்கே பலவிதமான மரங்கள் தானே இருக்கும். வெயிலுக்கு இதமாக அடியார்கள் அமர்ந்து இளைப்பாற நிழல் தந்து உதவும் அம்மரங்கள். அப்படிப்பட்ட மரத்தின் கீழ் தான் அடியாரான ஒளவைப் பாட்டியும் அமர்ந்து இளைப்பாறினார். அவள் அங்கே இளைப்பாறியதால் குமரனும் அம்மரத்தின் மேல் அமர்ந்து சுட்ட பழம் உதிர்த்தான். அப்படி அடியார்கள் நிழலில் அமர்ந்து இளைப்பாறவும் குமரன் கோல் ஏந்தி வீற்றிருக்கவும் உதவும் ஒரு மரமாக ஆவேன் என்கிறார் பாவலர்.
மண்ணும் இல்லை மரமும் இல்லை கல்லாக ஆவாய் என்பது இறைவன் கட்டளையானால் அப்போது திருத்தணிகை மலை கல்லாக ஆவேன் என்கிறார். அங்கே தானே படிகளெல்லாம் இறைவன் திருப்புகழ் பாடும். அங்கே தானே மலையேறி வந்த களைப்பு தீர அங்கிருக்கும் கல்லின் மேல் அமர்ந்து அடியார்கள் இளைப்பாறுவார்கள். அப்படிப்பட்ட கல்லாக, திருப்புகழ் பாடும் படிக்கல்லாக ஆவேன் என்கிறார் புலவர்.
புல்லாக பிறவி பெறுவாய் என்றான் புவனசுந்தரன் எனில் அவன் அருளாலே அப்புல்லே பூசைக்குப் பயன்படும் பூவாக மாறுவது போல் அறுகம் புல்லாக ஆவேன் என்கிறாரோ? இருக்கலாம். இல்லையேல் செடி கொடி என்றிவற்றில் பூக்காமல் புல்லில் பூக்கும் சிறு பூவாக மாறி அவன் முற்றம் முழுக்க நிறைந்து அவன் திருப்பாதங்களுக்கும் அவன் அடியார்கள் திருப்பாதங்களுக்கும் மெத்தையாக அமைவேன் என்கிறார் போலும்.
பொன்னாக மாறுவாய் என்று கூறினான் எனில் அப்பொன்னும் மக்கள் அணியும் அணிகலனாக மாறாமல் அவன் அழகுக்கு அழகு சேர்க்கும் சக்தி வடிவேல் செய்யும் பசும்பொன்னாக ஆவேன் என்கிறார். சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல் என்று அவன் அடியார் இடர் கடியும் அணிகலன் இச்சுடர்வேல் தானே. அவன் பணியைப் போல் அடியார் பணியும் செய்யும் அணிவேலாக ஆவேன் என்கிறார்.
நீரில் மலரும் பூவாக ஆவாய் எனில் திருக்குமரன் சிறு குழந்தையாகப் பிறக்கும் சரவணப்பொய்கைப் பூவாக ஆவேன் என்கிறார். அப்பொய்கையில் அடியார் இறங்கிக் குடைந்து நீராடும் போது அவர்களின் திருமேனிக்கு மணம் சேர்க்கும் பனிப்பூவாக ஆவேன் என்கிறார்.
எத்தனையோ பேசுகிறோம்; அப்பேச்செல்லாம் பேச்சா? சில நேரங்களில் அவை ஏச்சாகவும் போகின்றன. செந்தமிழால் வைவோரையும் வாழவைப்பான் வேலவன். அதே செந்தமிழால் அவன் திருப்புகழ் பாடினால்? அவனது திருவுள்ளமும் அவன் அடியார் திருவுள்ளமும் மகிழும் படி திருப்புகழ் விளக்கப் பேச்சாவேன் என்கிறார் புலவர்.
அதெல்லாம் கிடையாது; நீ பித்தனாகத் தான் திரிவாய் என்று திருமுருகன் திருவுள்ளாம் வைத்தானாகில் அப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை; அவன் மேலேயே பித்தாகி 'முருகன் மேல் பித்தி இவனுக்கு முத்திப் போச்சு' என்னும் படி திரிவேன் என்கிறார் புலவர். சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம் இரு செவி மீதிலும் பகரும் குருநாதனின் திருப்புகழ் பாடி அடியார் மனம் குளிரச் செய்யும் முத்தனாவேன் என்கிறார்.
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே; அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்றான் இன்னொரு புலவன். அச்சொற்களிலேயே ஒற்றை எழுத்துச் சொல்லான ஓம் என்ற சொல்லின் பொருள் உணர்ந்து சொன்னால் இன்னும் பயன் உண்டு. சிவனார் மனம் குளிர சொல்லப்பட்டது அம்மந்திரம் தானே. தமிழ்ப்பேச்சாக கூட இல்லை; ஒற்றைச் சொல்லாக மாறுவாய் என்றால் அந்த ஒற்றைச் சொல்லும் ஓம்காரம் என்னும் சொல்லாக மாறுவேன் என்கிறார் புலவர்.
அடியாருக்கும் அண்ணலுக்கும் பிடித்தது அவன் திருமேனி தீண்டிய பஞ்சாமிருதம் தானே. அப்பஞ்சாமிருதத்தில் ஒரு பழமாக ஆவேன் என்கிறார் புலவர்.
அவன் அருள் இருந்தால் தானே எனக்கு வீடுபேறு கிட்டும்; என் முயற்சியால் இனி ஆவதொன்று இல்லை; எல்லாம் அவன் அருளாலே நிகழ்வது என்று நினைந்திருந்து ஆன்மிகப்பயிராக அவன் அருளால் ஆவேன் என்று நிறைக்கிறார் ஆசிரியர்.
Posted by குமரன் (Kumaran) at 1/17/2009 03:58:00 AM 19 comments
Labels: *மண்ணானாலும் திருச்செந்தூரில், semi classical, TMS, குமரன், தமிழ்நம்பி
இன்று கிருத்திகைத் திருநாள். முருகனை வணங்க வாய்ப்பளித்த முருகனுக்கு நன்றி. திரு. பாபநாசம் சிவனின் முத்தான ஒரு பாடல்.வசந்தா ராகத்தில் அமைந்தது . வசந்தாவின் ஜீவா-ஸ்வரமான மா தா என்ற ஸ்வரங்களை வைத்து விளையாடி இருக்கிறார் . இதற்குத்தான் _ச்வராக்ஷரம் என்று பெயர். -ஸ்வரங்களே வார்த்தைகளாக வரும். Posted by தி. ரா. ச.(T.R.C.) at 1/07/2009 06:24:00 AM 4 comments
Labels: *மாதயை நிதியெனும், classical, திராச, பாபநாசம் சிவன்
Posted by தி. ரா. ச.(T.R.C.) at 12/11/2008 07:10:00 AM 4 comments
Labels: *வேல்முருகா வெற்றி வேல்முருகா, திராச

ஆதிமூலன் மருகா முருகா
ஆறுமுகக் குமரா
பாதயாத்திரைக்குத் துணையாய்
பாதை காட்ட வா வா (ஆதிமூலன்)
பூரம் பூரம் பூரம் போகும்
பாதை தூரம் தூரம்
சோரும் கால்கள் சோரும் சமயம்
தோன்றும் உனது கோலம் (ஆதிமூலன்)
நோகும் பாதம் நோகும் உன்னை
நோக்க விழிகள் ஏங்கும்
வேகும் வெய்யில் கூட வழியில்
விசிறிவிட்டுப் போகும் (ஆதிமுலன்)
பச்சை மயிலும் உனக்கு ஒரு
வாகனத்தின் கணக்கு
பச்சை மலையும் உனக்கு படை
வீடு என்று வழக்கு (ஆதிமூலன்)
பச்சை இளம் புள்ள நீயோ
எங்க மனசுக்குள்ள
இச்சையோடு இருக்க அதை
ஏதுமில்ல தடுக்க (ஆதிமூலன்)
பச்சை வேட்டி கட்டி உன்னைப்
பாடி ஆடி வாறோம்
பழசும் புதுசுமாக பாட்டு
படிச்சு நடிச்சு வாறோம் (ஆதிமூலன்)
காவி வேட்டி கட்டி உன்னைக்
கருத்தில் வச்சு வாறோம்
கண்ணில் உன்னை வச்சு அருளை
இருப்பில் வச்சு வாறோம் (ஆதிமூலன்)
வீடு வீடு என்று படை
வீடு ஆறு உண்டு
நாடு முழுதும் அஞ்சா படை
வீடு இங்கு உண்டு (ஆதிமூலன்)
கூடும் கூட்டம் ஆகி உன்
கோலம் காண வாறோம்
வீடு மறந்து வாறோம் கடும்
விரதம் இருந்து வாறோம் (ஆதிமூலன்)
வண்டி கட்டி வாறோம் பெரும்
வாஞ்சையோடு வாறோம்
தண்டபாணி நாதா நீயும்
தயவு காட்ட வா வா (ஆதிமூலன்)
உன்னை நம்பி வாறோம் ரொம்ப
உறுதியோடு வாறோம்
கண்ணைத் தொறந்து பார்ப்போம் சாமி
உன்னை காண வாறோம்
வேல் வேல் முருகா வா வா முருகா
வா வா முருகா வேல் வேல் முருகா
பாடியவர்: வீரமணிதாசன்.
இயற்றியவர்: தெரியவில்லை.
Posted by குமரன் (Kumaran) at 12/05/2008 04:49:00 PM 7 comments
Labels: *ஆதிமூலன் மருகா, குமரன், வீரமணிதாசன்


Posted by VSK at 11/15/2008 04:09:00 PM 2 comments
Labels: vsk, அன்பர் கவிதை



Posted by VSK at 11/14/2008 08:53:00 PM 1 comments
Labels: vsk, அன்பர் கவிதை
மக்கா, கந்த சஷ்டி நேற்றே (திங்கள்) நிறைவுற்றது. எனினும், இதோ விட்டுப் போன ஒரு பதிவு!
பதிவு விட்டாலும் பரங்குன்றான் விடுவானா என்ன?
இன்னிக்கி திருப்பரங்குன்றத்து ரகசியங்கள் மற்றும் பாடல் - "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்"!
* பொதுவாக வள்ளித் திருமணம்= "பேச" மட்டுமே படும் விரிவுரையாளர்களால்
* ஆனால் தேவானைத் திருமணம்? = எல்லா ஆலயங்களிலும் "செய்"விக்கப்படுகிறது!= இது ஏன்?
![]() | ![]() |
* திருப்பரங்குன்றம் குடைவரைக் கோயில். குகைக்குள் தான் கருவறை என்பதால் சுற்றி வர முடியாது. முருகன் திருமணக் கோலத்தில் பீடத்தில் அமர்ந்து இருக்க, கீழே ஒரு புறம் மணப்பெண் தேவயானை அமர்ந்து இருக்கிறாள். மறுபுறம் நாரதர்! (இந்திரன் என்று சொல்வாரும் உண்டு! ஆனால் முனிவர் போல் தாடியும் உண்டு, பின்னாள் "ஒட்டு வேலைகளும்" உண்டு)
![]() | ![]() |
* கதிர்காமத்து முருகன் ஆலயத்திலும் தேவானை அம்மைக்குத் தனியான ஆலயம் பின்னாளில் எழுப்பினார்கள்!Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 11/04/2008 09:00:00 PM 19 comments
Labels: *திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், 2008sashti, cinema, krs, padaiveedu, ஆறுபடைவீடு, குன்னக்குடி, சூலமங்கலம், திருப்பரங்குன்றம், தெய்வயானை, பி.சுசீலா, பூவை செங்குட்டுவன்
மக்களே, இன்று தான் கந்த சஷ்டி (Nov-3)!
முருகன் சூரனை வதம் செய்ததாகப் பெரிதும் எண்ணப்படுவது திருச்செந்தூர் கடற்கரை!
ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டியின் போது, செந்தூரில் வெகு விமரிசையாக நடக்கும் சூர சங்கார விழாவும் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது!
ஆனால்...சூர சங்காரம் எங்கு நடந்தது? = தமிழ் ஈழமா? திருச்செந்தூரா?
என்னடா இது, இவன் புதுசாக் கெளப்பறான்-னு பாக்கறீங்களா மக்கா?:) ஹா ஹா ஹா! வாங்க பார்க்கலாம்!
இனி, கீழ் வருபவை... கச்சியப்பரின் கந்த புராணப் போர்க் காட்சிகள்!





Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 11/03/2008 03:53:00 AM 25 comments
Labels: *திருச்செந்தூரின் கடலோரத்தில், 2008sashti, cinema, krs, padaiveedu, TMS, ஆறுபடைவீடு, ஈழம், கண்ணதாசன், குன்னக்குடி, சீர்காழி, திருச்செந்தூர்
மக்கா, இன்னிக்கி கொஞ்சம் ஸ்பெஷல்! பழனி ஸ்பெஷல்! ஆன்மீகக் குத்துப் பாட்டுக்குப் புகழ் பெற்ற ரமணி அம்மாள் பாட்டு!:)) குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் - பாட்டை அறியாதவர்கள் தான் யார்? அது போன்ற உற்சாகப் பாடல்களுக்குச் சொந்தக்காரர் பெங்களூர் ரமணி அம்மாள். சிறந்த முருக பக்தை!
பஜனை என்றாலே அது கண்ணன் பாடல்கள் தான் என்பது போய், அய்யன் முருகன் மேலும் பஜனைப் பாடல்கள் என்று ஒரு தனி இயக்கம் போலவே நடத்திக் காட்டினார் ரமணி அம்மாள்! கே.பி.சுந்தராம்பாள் அவர்களைப் போலவே வெங்கலக் குரல் அம்மாளுக்கு! கூடவே நம்மையும் பாட வைப்பார்!
திரைப்படங்களிலும் எம்.எஸ்.வி,/குன்னக்குடி இசையில் பாடியுள்ளார். வேல் முருகா வேல் முருகா...வேல்ல்ல்ல்ல்ல்-ன்னு இவர் உச்ச கட்டத்தில் பாடும் போது, மைக் செட்டே அதிரும்!
கண்ணனைத் தலைவன்-கடவுளாகவும், முருகனைக் காதலன்-குழந்தையாகவும் அடியேன் காண்பது போல, ரமணி அம்மாள், முருகனைத் தலைவன்-கடவுளாகவும், கண்ணனைக் குழந்தையாகவும் கண்டவர்! அம்மாள், கண்ணன் குழுப் பாடல்கள் (பஜனை) பலவும் பாடியுள்ளார்.
இன்னிக்கி அம்மாளின் சிறப்பான ஒரு காவடிப் பாட்டு! பழனி-ன்னாலே காவடி தானே! அங்கு பிறந்த காவடி தானே, மற்ற படைவீட்டுக்கெல்லாம் பரவி, இன்று சிங்கை, மலேசியா, இலங்கை, பர்மா, பாரீஸ், அமெரிக்கா என்று காவடி பரவியுள்ளது!
ரமணி அம்மாள், பால் காவடி, பன்னீர் காவடி, சர்ப்பக் காவடி என்று அத்தனை காவடிகளையும் பட்டியல் போட்டுச் சொல்கிறார்! நீங்களே கேளுங்கள்! இதோ!
| paal_manakkuthu.mp... |

![]() | ![]() |
![]() | ![]() |

![]() | ![]() |
![]() | ![]() |
பழனியாண்டவர் (மூலவர் ராஜ-அலங்கார ஓவியம்), சின்னக்குமாரர் (உற்சவர் புகைப்படம்)
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 11/02/2008 10:50:00 AM 20 comments
Labels: *பால் மணக்குது, 2008sashti, krs, padaiveedu, semi classical, ஆறுபடைவீடு, பழனி, ரமணி அம்மாள்
© Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008
Back to TOP