திருமுருகன் மேல் ஒரு சௌராஷ்ட்ரப் பாடல்
முருகப்பெருமான் மீது இயற்றப்பட்டுள்ள சௌராஷ்ட்ர மொழிப் பாடல்களைப் பற்றி வெகு நாட்களுக்கு முன்னர் நண்பர் சிவமுருகனிடம் கேட்டிருந்தேன். அப்போது அவரிடம் இந்தப் பொத்தகம் இல்லாததால் உடனே தர இயலவில்லை. எப்போதோ கேட்டதை நினைவில் நிறுத்திக் கொண்டு இப்போது இந்தப் பாடலை அவர் அனுப்பியிருக்கிறார். சிவமுருகனுக்கு மிக்க நன்றி.
கீ3த்: ஸோ ஸிரஸ் ஸேஸ்தெ தே3வுக் நமஸ்காரு
ஒத்3தி3து : கஸின் ஆனந்த3ம்
பஸ்தவ் : கஸின் ஆனந்த3ம் கீ3துன் (பை2ல நிம்பி3னி)
ஒர்ஸு: ஸௌராஷ்ட்ர விஜயாப்தம் : 678(1990)
பாடல்: ஆறுமுகம் கொண்ட தெய்வத்திற்கு வணக்கம்
இயற்றியவர்: காசி. ஆனந்தம்
பொத்தகம்: காசி. ஆனந்தம் பாடல்கள் (முதல் பதிப்பு)
வருடம்: சௌராஷ்ட்ரர் வருகையாண்டு 678 (ஆங்கில ஆண்டு: 1990)
ஸோ ஸிரஸ் ஸேஸ்தெ தே3வுக் நமஸ்காரு
சொண்டிபதி பை4கு நமஸ்காரு
ஸோ - ஆறு
ஸிரஸ் ஸேஸ்தெ – முகம் கொண்ட
தே3வுக் - தெய்வத்திற்கு
நமஸ்காரு - வணக்கம்
சொண்டிபதி பை4கு - தும்பிக்கையானின் உடன்பிறந்தானுக்கு
நமஸ்காரு – வணக்கம்
ஆறுமுகம் கொண்ட தெய்வத்திற்கு வணக்கம்
தும்பிக்கையானின் உடன்பிறந்தானுக்கு வணக்கம்
பொள்ளொ பஜெ மெனி பு4லோக் சுட்டு பி2ரெ
பொளனி தே3வுகு நமஸ்காரு
பொள்ளொ - (ஞானப்)பழம்
பஜெ மெனி - வேண்டுமென
பு4லோக் - உலகை
சுட்டு பி2ரெ - வலம் வந்த
பொளனி தே3வுகு - பழனி ஆண்டவனுக்கு
நமஸ்காரு – வணக்கம்
பழம் வேண்டுமென உலகை வலம் வந்த
பழனி ஆண்டவனுக்கு வணக்கம்
ஓம் மெனஸ்தெ அட்சரும் ஹிப்3பி3ரெஸ் தெனொ
உமாபதிகு உபதே3ஸ் கெரஸ் தெனொ
அருணகிரிகு அமர்த்து தமிழ் தி3யேஸ் தெனொ
அம்ர ஜிவ்னமு ஜீவாமிர்த்து ஹொயெஸ் தெனொ
ஓம் மெனஸ்தெ - ஓம் என்ற
அட்சரும் - எழுத்தில்
ஹிப்3பி3ரெஸ் தெனொ - நிற்பவன் அவன்
உமாபதிகு - உமாபதி மஹேஸ்வரனுக்கு
உபதே3ஸ் கெரஸ் தெனொ - உபதேசம் செய்தவன் அவன்
அருணகிரிகு - அருணகிரிக்கு
அமர்த்து தமிழ் - அமுதத் தமிழ்
தி3யேஸ் தெனொ – தந்தவன் அவன்
அம்ர ஜிவ்னமு - நம் வாழ்வுக்கு
ஜீவாமிர்த்து ஹொயெஸ் தெனொ - உயிரமுதம் ஆனவன் அவன்
ஓம் என்ற எழுத்தில் நிற்பவன் அவன்
உமாபதிக்கு உபதேசம் செய்தவன் அவன்
அருணகிரிக்கு அமுதத் தமிழ் தந்தவன் அவன்
நம் வாழ்வுக்கு உயிரமுதம் ஆனவன் அவன்
கொரி தபஸ் கெரெ
கொப்பான் சமியாருகு
கௌ2னஸ் போகும் வாட் ஸங்கெ3
கௌ3ரி பெ3டாகு நமஸ்காரு
கொரி - உருகி
தபஸ் கெரெ – தவம் செய்த
கொப்பான் சமியாருகு - நாயகி சுவாமிகளுக்கு
கௌ2னஸ் போகும் - கிழக்குத் திசையில்
வாட் ஸங்கெ3 - வழி காட்டிய
கௌ3ரி பெ3டாகு - கௌரி மகனுக்கு
நமஸ்காரு – வணக்கம்
உருகி தவம் செய்த
நாயகி சுவாமிகளுக்கு
கிழக்குத் திசையில் வழி காட்டிய
கௌரி மகனுக்கு வணக்கம்
(ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் திருப்பரங்குன்றத்தில் 12 வருடங்கள் கடும் தவம் இயற்றி வந்தார். குன்றத்துக் கிழவோன் உருவிலி வாக்காக (அசரீரி வாக்காக) மதுரைக்குக் கிழக்கே இருக்கும் பரமகுடியில் வாழ்ந்த ஸ்ரீ நாகலிங்க அடிகளாரைக் குருவாக அடையுமாறு அருளினான். அடிகளாரிடம் நாயகி சுவாமிகள் அட்டாங்க யோகம் பயின்று பல ஆண்டுகளில் கற்றுத் தேற வேண்டியவற்றைப் பதினெட்டே நாட்களில் தேர்ந்து சித்தி பெற்று அடிகளாரின் திருவாக்கினால் 'சதானந்த சித்தர்' என்ற திருப்பெயர் பெற்றார்)
தமிழ் இலக்கணப்படி எதுகை மோனைகளுடன் இப்பாடல் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். நாயகி சுவாமிகளின் பாடல்களும் பெரும்பாலும் எதுகை மோனைகளுடன் அமைந்திருக்கும்.
12 comments:
பகிர்தலுக்கு நன்றி குமரா. தமிழாக்கமும் அழகா இருக்கு :)
நன்றி அக்கா.
பிசி பெடுக்கி பிசா பெடுக்கா.....என்னன்னு தெரியுமா?
k.pathi
karaikal
pathiplans@sify.com
பொளனி தேவுகு அடியேன் நமஸ்காரு :)
//அருணகிரிகு அமர்த்து தமிழ் தி3யேஸ் தெனொ//
செளராஷ்ட்ரத்தில் தமிழை "தமிழ்" என்றே தான் சொல்வீர்களா? மிக்க மகிழ்ச்சி! திராவிட, திரமிட என்றெல்லாம் சொல்லாமல் தமிழாகவே அமைந்ததற்கு! :)
நடனகோபால நாயகி சுவாமிகளை எம்பெருமானார் தர்சனத்திற்கு வழி காட்டியது என் முருகப் பெருமானா? வாவ்! குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
//பிசி பெடுக்கி பிசா பெடுக்கா.....என்னன்னு தெரியுமா?//
தெரியும் பதி. எதற்கு கேட்கிறீர்கள்?
சௌராஷ்ட்ரத்தில் இப்போது புழங்கும் சொற்கள் பாதிக்கும் மேல் வேறு மொழிச் சொற்கள் தான் இரவி. அதனால் முந்தையக் காலத்தில் தமிழ்மொழிக்கு என்ன பெயர் சொல்லி அழைத்தார்கள் என்று தெரியாது. இப்போது தமிழ்நாட்டில் இருப்பதால் 'தமிழ்' என்று தான் சொல்கிறோம்.
நாகலிங்க அடிகளார் வைணவர் என்று எங்கேனும் சொன்னேனா? எப்படி அப்படி ஒரு தவறான புரிதல் ஏற்பட்டது? நாகலிங்க அடிகளாரும் வைணவர் இல்லை; சதானந்த சித்தராக இருக்கும் போது நாயகி சுவாமிகளும் வைணவர் இல்லை. பின்பு தான் அவர் நடனகோபாலர் ஆனார்; அதற்குப் பின்னர் நடனகோபால நாயகி ஆனார். மதுரையின் ஜோதி பதிவில் இருக்கும் தொடக்கக் கால இடுகைகளைப் பாருங்கள். :-)
நாயகி சுவாமிகளின் சரிதத்தை 'மதுரையின் ஜோதி' பதிவில் எழுதியதாக நினைத்திருந்தேன். இப்போது பார்த்தால் முழுவதுமாக எழுதவில்லை என்று தெரிகிறது. அவருடைய சரிதத்தை http://www.srimannayagi.org/history.htm பக்கத்தில் படிக்கலாம்.
அண்ணா,
பாடலை பத்திதமைக்கு மிக்க நன்றி.
KRS,
//நடனகோபால நாயகி சுவாமிகளை எம்பெருமானார் தர்சனத்திற்கு வழி காட்டியது என் முருகப் பெருமானா? வாவ்! குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!//
நாகலிங்க அடிகளார் இருக்கும் பகுதிக்கு வழிகாட்டியது இந்த திருமுருகனே! என்ற வழக்கு இன்றும் உள்ளது.
//நாயகி சுவாமிகளின் சரிதத்தை 'மதுரையின் ஜோதி' பதிவில் எழுதியதாக நினைத்திருந்தேன். இப்போது பார்த்தால் முழுவதுமாக எழுதவில்லை என்று தெரிகிறது. அவருடைய சரிதத்தை http://www.srimannayagi.org/history.htm பக்கத்தில் படிக்கலாம்.//
நல்ல வேளை இதை விட்டு விட்டீர்களோ என்று நினைத்தேன். பிறகு இதையும் புராணம் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். :).
நன்றி சிவமுருகன். நீங்கள் புராணத்தைப் பற்றி பேசியது புரியவில்லை. இங்கோ தனிமடலிலோ தெளிவுபடுத்துங்கள்.
//நாகலிங்க அடிகளார் வைணவர் என்று எங்கேனும் சொன்னேனா? எப்படி அப்படி ஒரு தவறான புரிதல் ஏற்பட்டது?//
தவறான புரிதலா?
எம்பெருமானார் தர்சனத்துக்கு முருகப்பெருமான் வழிகாட்டியது - என்று தானே சொல்லி இருந்தேன்? வைணவத்துக்கு நாகலிங்க அடிகளார் வழிகாட்டியது - என்று எங்கும் சொல்ல வில்லையே! எப்படி இப்படி ஒரு தவறான புரிதல் ஏற்பட்டது? :)
இரவி,
நாகலிங்க அடிகளாரிடம் செல்லத் தான் திருமுருகன் வழி காட்டினான். பின்னர் வடபத்ரார்யரிடம் செல்லும் வழியை அவன் காட்டினானா என்று தெரியவில்லை. ஆனால் வைகாசி விசாகத்தில் பிறந்த இன்னொருவர் காட்டினார் போல் தெரிகிறது. யாராயிருந்தால் என்ன 'வைகாசி விசாகத்தில் பிறந்தவர்' வழிகாட்டினால் முருகப்பெருமான் காட்டினான் என்று சொல்வதில் தட்டில்லை தான். :-)
இப்போது முயலுக்கு மூன்று காலா? இரண்டே முக்காலா? :-)
//நாகலிங்க அடிகளாரிடம் செல்லத் தான் திருமுருகன் வழி காட்டினான். பின்னர் வடபத்ரார்யரிடம் செல்லும் வழியை அவன் காட்டினானா என்று தெரியவில்லை//
முருகன் காட்டாமல் யார் காட்டுவது?
பிறந்தது "ராமபத்ரனாக" இருந்தாலும், திருப்பரங்குன்றக் குகையில் அல்லவா காலம் கழித்தார் சுவாமிகள்? அதற்கு கடன்பட்ட முருகன் அல்லவா, அவரைச் சரியான ஃபிளைட்டில் ஏற்றி விட வேண்டும்?
முதலில் சரியான ஊருக்கு ஃபிளைட் ஏற்றி விட்டாலே போதுமானது! ட்ரான்ஸிட்டில் மாறிக் கொள்வது எளிது! :)
முருகன் முதலில் காட்டிய நல்வழியே போதுமானது அல்லவா!
அந்த அஷ்டாங்க யோகம், நாதமுனிகள் யோகம் அல்லவா? அதை நாகலிங்கரிடம் கற்றதனால் அல்லவோ பின்னாளில் தென் குருகூர் யோகியிடம் ஈர்க்கப்பட்டார்? யானையால் யானை யாத்தற்று என்பார்கள்! அது போல் யோகத்தால் யோகம் யாத்தற்று!
இல்லையென்றால் முன்னரே கள்ளழகர், கூடலழகர் என்று அவர் ஈர்க்கப்பட்டிருக்கலாமே?
நாயகி ஆக வேண்டும் என்ற பகவத் சித்தம்! அதுவே பராங்குச நாயகியிடம் சென்று சேர்பித்தது!
அதற்கு அவர் முதலில் கற்ற அந்த யோகமே உதவி அல்லவா?
அதைத் தான் முருகன், தர்சனத்துக்குப் பாதை காட்டினான் என்று குறிப்பிட்டேன்!
அதை மூன்று கால் என்று எடுத்துக் கொண்டால், அடியேன் என்ன செய்ய முடியும்? அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்! மூர்க்கன் அடியேன் பிடித்த முயலுக்கு மூன்று காலே!
Post a Comment