மனமிரங்கு மயில் வாகனா பன்னிரண்டு கண்களில் ஒரு கண்ணின் கடைக்கண் வையப்பா
இன்று கிருத்திகை. ஆனால் மனம் மிக கனத்துடன் இருப்பதால் பதிவை விரிவாக போட முடியவில்லை. என் அண்ணன் மகளின் கணவர் நுரையீரல் வலுவிழந்து மூச்சுவிடமுடியாமல் அப்போல்லோ மருத்துவ மனையில் தீவிர சிகித்ஸை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். வயது 40தான் ஆகிறது. அவருக்காக அவர் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப முருகனிடம் பிரார்த்தனை செய்யுமாறு நல்ல உள்ளங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
-
23 comments:
நேற்று கேள்விப்பட்டதிலிருந்தே, மனம் சஞ்சலமாயிற்று. விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல அன்னையை வேண்டுகிறேன்.
என்னுடைய வேண்டுதல்கள் திராச.
கந்தன் மனசு வைத்தால் நடக்காததா. தி.ரா.ச.
நம்பிக்கையோடு இருங்கள்.
நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம்.
அவர் சீக்கிரமே நல்லபடியாக குணமடைய பிராத்திக்கிறேன்
முருகன் மயில்வாகணன் தான். தமிழ் கடவுளுக்கு ‘ஹ’ எதற்கு?
பன்னீர் இலை விபூதி மாமருத்துவனாம் செந்திலாண்டாவன் மருந்தளித்து பிணி நீக்குவான்!
அடியேனின் வேண்டுதல்கள் திராச ஐயா!
அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
அஞ்சேல் அஞ்சேல் என வேல் தோன்றும்! அஞ்சேல்!
தமிழ்க்கடவுள் என்பதற்கு இலக்கணம் என்ன திரு.அன்புச்செல்வன் (=பிரேம்குமார்)?
மகன் என்பதற்கு மஹன் என்று சொல்வது எப்படி அபத்தமாக இருக்குமோ அப்படித்தான் மயில்வாகனன் என்பதை மயில்வாஹனா என்பதும் உறுத்துவதாக இருக்கிறது.
(முதல் பின்னூட்டத்தில் மயில்வாகனன் என்பதற்கு தவறாக ’ண’ இட்டுவிட்டேன்)
அப்புறம், என் பெயரை மொழிபெயர்த்து சொன்னதற்கு நன்றி
காதற்குமரன்,
நான் கேட்ட கேள்விக்கு விடை சொல்லாமல் விட்டீர்களே?!
மகன் என்ற தமிழ்ச்சொல்லை மஹன் என்று சொன்னால் அபத்தம் தான். மஹான் என்ற வடசொல்லை மஹான் என்றும் சொல்லலாம்; மகான் என்றும் சொல்லலாம்; பெரியார் என்றும் சொல்லலாம். அதே போல் வாஹன என்ற வடசொல்லை வாஹன என்றும் சொல்லலாம்; வாகன என்றும் சொல்லலாம்; ஊர்தி என்றும் சொல்லலாம். அவற்றில் எந்த அபத்தமும் இல்லை. அவரவர் மொழிப்பழக்கத்தின் படி மற்றவர் எழுதுவது அபத்தமாகத் தோன்றுவது தான் அபத்தம். ஆமாம் அபத்தம் என்பது எந்த மொழி? வடமொழிச் சொல்லா தமிழ்ச்சொல்லா? அறிவீர்களா? அதையறியாமல் புழங்கியிருக்கிறீர்களே? அது தமிழ்ச்சொல் இல்லையென்றால் அதனை நீங்கள் புழங்குவது அபத்தமன்றோ? :-)
தமிழ் கடவுளுக்கான இலக்கணக்கங்கள் பற்றி நானறியேன். நானொன்றும் தமிழ் புலவன் அல்ல. இங்கே எனது தமிழ் புலமையை நிரூபிக்கவும் பின்னூட்டமிடவில்லை. இருப்பினும் ‘மயில்வாஹானா’ என்பது நெருடலாக இருப்பதாக தொன்றியது. குறிப்பிட்டேன். முடிந்தால் மாற்றுங்கள். இல்லாவிடில் விட்டிவிடுங்கள்
பிரேம்குமார்.
நீங்கள் தமிழ்ப்புலவர் இல்லை என்பதும் தமிழ்க்கடவுள் என்பதன் இலக்கணம் அறியாதவர் என்றும் எவை தமிழ்ச்சொற்கள் எவை பிறமொழிச் சொற்கள் என்பதை அறியாதவர் என்றும் வடசொற்களைத் தமிழில் எழுத தமிழ் இலக்கணம் என்ன என்ன வழிகள் சொல்லியிருக்கின்றன என்பதை அறியாதவர் என்றும் கிரந்தம் இருந்தால் அச்சொற்கள் நெருடலாகவும் கிரந்தம் இல்லாமல் இருந்தால் தன் பெயரே வடமொழிப் பெயர் என்று தெரிந்தோ தெரியாமலோ நெருடலின்றி இருக்கவும் கற்றவர் என்றும் நான் சொல்ல விரும்பவில்லை. இவற்றில் எவை உண்மை என்று உங்களுக்கே தெரிந்திருக்கும்.
ஆனால் உங்களுக்குத் தெரியாத ஒன்றில் வடசொல் என்று தெரியாமலேயே கிரந்தம் எதற்கு என்றும் உறுத்தல் என்றும் அபத்தம் என்றும் நெருடல் என்றும் சொல்பவர் நீங்கள் தான். சொல்லும் முறைப்படி சொல்லியிருந்தால் இடுகையை இட்டவர் மாற்றியிருக்கலாம். தமிழ்க்கடவுள் பதிவில் கிரந்தம் வேண்டாம்; அது உறுத்தல்; நெருடல் என்றெல்லாம் சொல்லிவிட்டு 'முடிந்தால் மாற்றுங்கள்' என்றிருக்கிறீர்கள். அதற்குத் தகுந்த மாதிரி 'தமிழ்ப் பதிவு எழுதும் நீங்கள், தமிழின் மேல் உண்மையான ஆர்வம் கொண்ட நீங்கள் வடமொழிப் பெயருடன் இருப்பது உறுத்தலாக இருக்கிறது; அது அபத்தம்; நெருடலாக இருக்கிறது. முடிந்தால் மாற்றுங்கள்' என்று சொல்லலாம்; அப்படிச் சொல்ல விரும்பேன். ஏனெனில் அது உங்கள் 'உரிமை' என்று அறிவேன்.
இயன்றால் எனது 'கூடல்' பதிவில் இருக்கும் 'சொல் ஒரு சொல்' வகையினைப் படித்துப் பாருங்கள்.
நன்றி.
பிரார்த்தனை செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
பிராத்தனை செய்ய வேண்டிய இடத்தில் ஒரு பிரச்சனையை வளர்த்ததற்கு முதலில் வருந்துகிறேன்.
குமரன், எத்தனை நீளமான பதில். (யாராவது அவருக்கு சோடா வாங்கி குடுங்கப்பா). உங்கள் கேள்விக்கான விடைகளும் விளக்கங்களும் ஒரு பின்னூட்டத்தில் அடங்கா. ஒரு பதிவு தான் எழுத வேண்டும். அதை செய்து முடித்து உங்களுக்கு தெரிவிக்கிறேன். நன்றி
சொல்லும் முறைப்படி சொல்லியிருந்தால் இடுகையை இட்டவர் மாற்றியிருக்கலாம்.
//முருகன் மயில்வாகனன் தான். தமிழ் கடவுளுக்கு ‘ஹ’ எதற்கு?//
அட, நான் சொல்லிய விதம் தான் தவறாகிவிட்டதா? எழுதிய விதம் தவறாக புரிந்து கொள்ள வைத்திருந்தாலோ, அல்லது அதிகாரத்தோரனையோடு தெரிந்தாலோ அது என் பிழையே. வருந்துகிறேன்.
பிரேம்குமாரும் முதலில் அவருடைய பிரார்த்தனையைச் சொல்லி விட்டு அப்புறம் தான் இப்படி வினா எழுப்பி விட்டார்! அவர் தொனித்த விதம் பற்றி அவரே வருத்தம் தெரிவித்துவிட்டதால், இதை இத்துடன் விடுவோம்!
பிரார்த்தனைப் பதிவில் விளக்கங்களைக் காட்டிலும் வேண்டுதலே சிறப்பு!
க்ருபை செய்குவாய் மயில் வாஹனா!
மனமிரங்கு மயில் வாகனா!
தி.ரா.ச, நான் மதத்தை விடவும், மொழியை விடவும், மனிதத்தையே அதிகம் நேசிப்பவன். முதலில் அந்த அன்பருக்காக பிராத்தனை செய்துவிட்டே என் கேள்வியை எழுப்பினேன். அப்போது இது இத்தகைய நீண்ட விவாதமாக மாறும் என்று எண்ணவில்லை.
இங்கே மீண்டும் என் வருத்தத்தையும் என் பிரார்த்த்னைகளையும் பதிவு செய்து கொள்கிறேன்.
முருகனருள் முன்னின்று காக்கும். அடியேனும் பிரார்த்தனையில் கலந்து கொள்கிறேன்.
பிரார்த்தனை செய்த நல்ல உள்ளங்களுக்கு மிகவும் நன்றி. ஆனால் அவருடைய சாமவேதத்தை விரும்பி கேட்பதற்காக முருகன் அவரை தன்னிடமே நேற்று மதியம் 1 30 மணிக்கு அழைத்துக்கொண்டு விட்டான்.பிரார்த்தனை இப்பொழுது அவர் ஆன்மா சாந்தி அடைவதற்கும் அவரைப் பிரிந்து வாடும் என் அண்ணன் மகளுக்கும் 10 வயது 14 வயது நிரம்பிய 2 மகள்கள் நல்வாழ்வுக்கும்
மிகவும் வருத்தம் தரும் செய்தி தி.ரா.ச. ஐயா. அன்னாருடைய ஆத்ம சாந்திக்கும் உறவினர்களின் மன அமைதிக்கும் வேண்டிக் கொள்கிறேன்.
வருத்தமான செய்தி திராச ஐயா!
சதுர்த்தி விரத நாள் அன்று, அவர் முருகப்பெருமான் திருவடி நிழலில் கலாப மயிலாய் கண் துஞ்ச அடியேன் பிரார்த்தனைகள்!
தங்கள் அண்ணன் மகளுக்கும், அந்த இளங் குழந்தைகளுக்கும் கண்ணன் காப்பும் அருளும் கிடைத்து அமைதி பெற அடியேன் வேண்டுதல்கள்!
AVAR IRUKA BAYAM ENN?
(YAAM IRUKKA BAYAM ENN?)enbathin thaluvale.
NAANUM MURUGANIDAM IRANJUGIREN...thanggal ennan magalin udal nalathukkaaga!
Thank you Govind TRC
Post a Comment