திரு முருகா!
திரு முருகா, அருள் தரும் முருகா
அருள் முருகா, திரு மால் மருகா
(திரு முருகா)
நீல மயில் மீதில் ஏறி வரும் முருகா
வேலைக் கையில் ஏந்திப் பகை அறு
முருகா
(திரு முருகா)
ஆறு மலர் மீதினிலே தவழ் முருகா
ஆறு முக மாகி வந்து அருள் முருகா
ஆறெ ழுத்து மந்தி ரத்தில் உறை
முருகா
ஓமெ ழுத்தின் உட் பொருளை உரை
முருகா
(திரு முருகா)
--கவிநயா