என்னவா முருகா, அப்பா பெருமாளே
பணிவே உடலான இந்த "மெல்-இசையை",
உன் பத மலர் நீழலில் ஆழ்த்தி, அமைதியும்+அன்பும் கொடு!
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் MSV புகழ் பாடுங்களே!
தேவனை, இவரைப் பாருங்கள்; இவர் இசை தன்னை வாங்கிக் கொள்ளுங்கள்!
--
தமிழ்த் தாய்க்கு இசை தந்த மெல்லிசை மன்னவா,
தமிழ்த் தாய் வாழ்த்து உள்ளளவும்..
எழாதாரும், உன் இசைக்கு எழுந்து நிற்கத் தான் வேண்டும்!
அழிவு உன்னை அண்டாது! வாழி நீ..
கையில் Drips கட்டி உள்ளதால், ஒரு கையால் அதிகம் எழுத முடியலை.. மன்னிக்கவும்! பிறிதொரு நாள், MSV-முருகன் பாடல்களை இங்கு கிழமை தோறும் இடுகிறேன்;
இப்போதைக்கு.. இந்தப் பாடல் = வருவான் வடிவேலன்; வரிகள்: http://muruganarul.blogspot.com/2013/07/varuvaanvadivelan.html
MSV-யை இழந்து வாடும், அவர் மகன்களுக்கும்/மகள்களுக்கும்
மூன்று தலைமுறை மெல்லிசை ரசிகர்களுக்கும்
முக்குயில்கள், சுசீலாம்மா + ஜானகி + வாணி ஜெயராமுக்கும்
என் தனிப்பட்ட அளவில்.. தோழன் இராகவனுக்கும், நண்பர் இராம் அவர்களுக்கும் (MSV Times நெறியாளர்).. நெஞ்சார்ந்த இரங்கல்!
முருகா,
நீயும் ஒரு முறை, எங்கள் MSV-யைப் பணிந்து, வணங்கிக் கொள்!
இசைத்திரு MSV, இன்று.. தெய்வத்திரு MSV ஆகிவிட்டது..
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே!
--
முருக அன்பர்களுக்குக் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
Merry Merry Christmas, Happy Happy New Year!
இயேசு நாதப் பெருமான்
(எ) இனிய குழந்தை மூலமாக..
எங்கும் நிறைந்தவரான கர்த்தரே = உமக்கு ஸ்தோத்திரம்!
திசை மாறிய பறவைகள் படத்திலிருந்து..
ஒரு கிறிஸ்துவக் கன்னி, முருகன் மேல் பாடும் பாடல்!
(கர்த்தர் மேல பாட வேண்டியவளைக்,
கந்தன் மேல பாடச் சொல்றேன்-ன்னு
தப்பா நினைக்காதே-ம்மா என்ற முன்னுரையோடு காட்சி துவங்கும்)
(நீராடிப் பட்டுடுத்தி நின்றவர்கள் யாவர்க்கும் சீரான வாழ்வு தரும் செல்வத் திருக் குமரா மாறாத செல்வமுடன் வாழத் துணை புரிவாய் சூரனையே வென்ற தூயவனே, செந்தூரா)
உள்ளம் உருகாதா? - எந்தன் ஊனும் உருகாதா? அன்னை அழைத்தால் அருகில் வருவாய் பேரன்பு குருநாதா முருகா
(உள்ளம் உருகாதா)
தங்கரதம் போல் மயில் வாகனத்தில் கந்தன் வந்தால் கவலைகள் தீரும் அங்கம் முழுதும் திருநீறு அணியும் அன்னை முகத்தில் ஆனந்தம் மலரும் கந்தா.... அழகுத் திருக்குமரா செந்தில்.... அமுத வடிவழகா
(உள்ளம் உருகாதா)
நல்லவர் எல்லாம் கேட்டதைக் கொடுக்கும் அல்லல் தீர்க்கும் கந்தனின் வேதம் எந்த நோயும் அணுக விடாதே என்றும் காக்கும் வைத்திய நாதன் வேலா.... கருணை மழை முகிலே பாலா.... பழநி மலை அரசே
---------
திரையில்: சுமலதா, சரத்பாபு
குரல்: வாணி ஜெயராம்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
இசை: திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.வி
படம்: திசை மாறிய பறவைகள்
வருவான் வடிவேலன் -ங்கிற படம்!
ஈழம், சிங்கை, மலேசியா, பெனாங்கு -ன்னு பல நாடுகளில் போய்ப் படம் புடிச்சாங்க! பல நல்ல பாடல்கள்...
TMS, சுசீலாம்மா, சீர்காழி, வாணி ஜெயராம், LR ஈஸ்வரி, LR அஞ்சலி -ன்னு ஒரு இசைப் பட்டாளமே பட்டாசு கெளப்பிய படம்!
அதில் இந்தப் பாட்டும் ஒன்னு; படத்தின் ஆரம்பப் பாட்டே இதான்!
திருத்தணி மண்டபத்தில்... இந்தக் காட்சி!
என்னடா இது, கடந்த சில பதிவுகள்-ல்லாம் ஒரே திருத்தணியா வருதே-ன்னு பாக்காதீக:)
பாட்டின் இரண்டாம் பத்தியைக் கவனிங்க.. சிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன் அவள் செங்கனி வாய் இதழை நனைக்கின்றவன்
"வாய் இதழை நனைத்தல்" -ன்னா என்னடா முருகா? கொஞ்சம் சொல்லேன், தெரிஞ்சிக்குறேன்:)
வருவான் வடிவேலன் - தணிகை வள்ளல் அவன் - அழகு மன்னன் அவன் - நினைத்தால் வருவான் வடிவேலன்!
சிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன் அவள் செங்கனி வாய் இதழை நனைக்கின்றவன் இடையினில் கை கொடுத்து வளைக்கின்றவன் அள்ளி இடுகின்றவன் சொர்க்கம் தருகின்றவன்
(வருவான் வடிவேலன்)
அடியவர் கேட்ட வரம் அருள்கின்றவன் - என்றும் அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன் கொடியவர் பகை தீர்த்து முடிக்கின்றவன் - சேவல் கொடியன் அவன் நமக்கு இனியன் அவன்
(வருவான் வடிவேலன்)
திருமுருகாற்றுப்படை நான் பாடவா - இல்லை திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா - கந்தர் சட்டிக் கவசக் கதை பாடவா - அவன் முன் கையேந்தவா வெற்றிக் கடல் நீந்தவா?
(வருவான் வடிவேலன்)
தணிகை = வள்ளி-முருகன் திருமணத் தலம்!
அதனாலேயே, என் மனசுக்கு மிகவும் பிடிச்ச தலம்!
வெறும் வாய்-இதழை மட்டும் நனைக்கவில்லை முருகன்!
வள்ளியின் காலையே, இங்கு பிடிச்சானாம்! = குறமகள் பாதம் வருடிய மணவாளா
தனக்காகவே, காத்துக் கெடந்து, கால் போன போக்கில் நடையா நடந்தவ = அவ மன வலிக்கு/ கால் வலிக்கு - பாதம் வருடிய மணவாளா! ------
வருவான் வடிவேலன் = இந்தப் படத்தில், ஒரு பெண்ணை அவள் காதல் கணவன் தள்ளி வைக்கிறான்;
காரணம்: தன் கருத்தை / தொழிலை முன்பு எதிர்த்தவள்... என்பதால்!
Former Competitor; So show love 1st & then completely destroy her life:)
ஆனால், அவளோ, "அவனே" -ன்னு வாழ்கிறாள்;
அவன் மூலமாவே ஒரு பால முருகனைப் பெத்துக்குவேன் -ங்கிற நிலையில் நிக்குறா!
நடக்கக் கூடிய காரியமா இது?
அவன் வெறுப்பெங்கே? இவள் விருப்பெங்கே?
நடந்ததா? படத்தில் பாத்துக்கோங்க!:) = வருவான் வடிவேலன்!
(நீராடிப் பட்டுடுத்தி நின்றவர்கள் யாவர்க்கும் சீரான வாழ்வு தரும் செல்வத் திருக் குமரா மாறாத செல்வமுடன் வாழத் துணை புரிவாய் சூரனையே வென்ற தூயவனே, செந்தூரா)
உள்ளம் உருகாதா? - எந்தன் ஊனும் உருகாதா? அன்னை அழைத்தால் அருகில் வருவாய் பேரன்பு குருநாதா முருகா
(உள்ளம் உருகாதா)
தங்கரதம் போல் மயில் வாகனத்தில் கந்தன் வந்தால் கவலைகள் தீரும் அங்கம் முழுதும் திருநீறு அணியும் அன்னை முகத்தில் ஆனந்தம் மலரும் கந்தா.... அழகுத் திருக்குமரா செந்தில்.... அமுத வடிவழகா
(உள்ளம் உருகாதா)
நல்லவர் எல்லாம் கேட்டதைக் கொடுக்கும் அல்லல் தீர்க்கும் கந்தனின் வேதம் எந்த நோயும் அணுக விடாதே என்றும் காக்கும் வைத்திய நாதன் வேலா.... கருணை மழை முகிலே பாலா.... பழநி மலை அரசே
(கர்த்தர் மேல பாட வேண்டியவளை, கந்தன் மேல பாடச் சொல்றேன்-ன்னு தப்பா நினைக்காதே-ம்மா;
= வீணாப் போனவள் வீணை ஏந்தினாலும், வாரானோ அந்த வயலூரான்!)
---------
திரையில்: சுமலதா, சரத்பாபு
குரல்: வாணி ஜெயராம்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
இசை: திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.வி
படம்: திசை மாறிய பறவைகள்
இதோ....இனிய தீபாவளியும், நோன்பும் முடிஞ்சி, கந்த சஷ்டி துவங்கி விட்டது! (Nov-6-21010)!
ச"ஷ்"டி என்று இருப்பதால், இது பகல் பத்து/இராப் பத்து போல் தமிழ் விழாவாக இல்லாமல் இருக்கலாம்!
ஆனால் "கந்த" என்று இருப்பதால், என் முருகனின் விழாவே தான்! முருகன் இருப்பதால் தமிழும் கூடவே இருக்கும் தான்!
பதிவு எழுதத் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் முருகனருளில் சஷ்டிப் பதிவுகளைத் தவற விட்டதில்லை!
சில காரணங்களினால், இந்த ஆண்டு தவற விட்டு விடுவேனோ-ன்னு ஒரு அச்சம்! அஞ்சு முகம் தோன்றில்??
மருத்துவ மனையிலும் மயிலான் தோன்றி விட்டான்!
அவனைத் தவிர ஒன்றை விட முடியும்.... அவனைத் தவற விட முடியுமோ?
சஷ்டிப் பதிவுகள் - வெறும் பாட்டாக மட்டும் கொடுக்காமல், ஒவ்வொரு நாளும் ஒரு படைவீடு-ஒரு பாடல் என்றெல்லாம் முன்பு கொடுத்திருந்தோம்!
இந்த ஆண்டு என்ன செய்யலாம்? திருப்புகழைத் தரலாமா? அதுவும் ஜனரஞ்சகமாக! சினிமாவில் வந்த சில திருப்புகழை?
சில திரையிசைத் திருப்புகழும், சில திரையிசை முருகன் பாட்டுமாய்...
கதம்பமாய்க் கடம்பனுக்கு...இந்த ஆண்டும், இதோ....சஷ்டிப் பதிவுகள்!
திருப்புகழைச் சுவைக்கலாமா? அது என்ன அவ்வளவு சுவையாகவா இருக்கும்?
அவன் இதழ்ச் சுவை தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்! :)
ஆனால் அதை விடவும் அதிக சுவை ஒன்னு இருக்கு! ஆகா....என்னாது அது?
உனக்குப் பிடிச்ச பெருமாள் கோயில் பொங்கலா? லட்டா? அதிரசமா?
திருக்கண் அமுதா? சாற்றமுதா? அக்கார அடிசிலா? சுகியமா?
ததியோதனமா? தேன் குழலா? திருப்பாவாடைச் சோற்றமுதா? ஹிஹி!
என் முருகனின் இதழைக் காட்டிலும் சுவையானது = தமிழ்ச் சுவை! கனியிடை ஏறிய சுளையும், முற்றல் கழையிடை ஏறிய சாறும் இனியன என்பேன் எனினும், தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!
வெறும் தமிழுக்கே இவ்வளவு சுவையென்றால், வேலன் தமிழுக்கு?
இனியனின் இதழ்ச் சுவையோடு கூடிய இன்-தமிழ்ச் சுவை = இனியது கேட்கின், இனியது சுவைக்கின்! இந்த ஆண்டு சஷ்டிப் பதிவுகளின் மையப்பொருள்(Theme) = தமிழ்ச் சினிமாவில் திருப்புகழ்!
யாமிருக்க பயம் ஏன்? என்றொரு தமிழ்ப் படம்! எம்.எஸ்.வி-வாலி கூட்டு!
ஜெய்கணேஷ், கே.ஆர்.விஜயா, ஃபடாபட் ஜெயலட்சுமி, ராஜேஷ், மனோரமா என்று பலரும் நடித்த படம்!
"யாமிருக்க பயமேன்" என்றே சுசீலாம்மாவும் தன் தேன் குரலால் பாடி இருப்பாங்க! "திரை அருட் செல்வர்" கே.சங்கர் அவர்கள் இயக்கிய படம்!
இந்தப் படத்தில் திருப்புகழா? அதுவும் ஒரு சூப்பர் பெண் குரலில்?
திருப்புகழ்-ன்னாலே அவ்வளவு சீக்கிரம் புரியாதே, செந்தமிழில்-ன்னா இருக்கும்? சந்தம் வேறு "தொம் தொம்" என்று வந்து, நம் தமிழ் உச்சரிப்பையே சோதித்துப் பார்க்குமே!
ஆனால் இந்தப் பாடல் அப்படி அல்ல! மிகவும் எளிமையான-அழகான திருப்புகழ்! சினிமாவுக்கேற்ற திருப்புகழ்! :) அறுபடை வீடுகளில் எனக்கு மிகவும் பிடிச்சவன் - இதழ்க் கோட்டோரம் கள்ளச் சிரிப்பழகன் - சுவாமி மலை முருகன் - அவன் மீதான திருப்புகழ்!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி-யின் கை வண்ணத்தில், வாணி ஜெயராம் குரலில்,
அருணகிரியின் தமிழ் எப்படி ஒரு நதி போல நெளிகிறது? பார்க்கலாமா - பாதி மதி நதி!
பாதி மதி நதி போது மணி சடை நாதர் அருளிய குமரேசா! பாகு கனி மொழி மாது குற மகள் பாதம் வருடிய மணவாளா!
பாதி மதியும், கங்கை நதியும் சடையில் சூடிய ஈசன்! அவன் அருளிய குமரேசா!
பாகு+கனி இரண்டின் இனிமையும் கொண்ட ஒரு பேதைப் பெண்!
முருகன் தன்னை ஏற்றுக் கொள்வானா என்று கூடத் தெரியாது, தன் வாழ்வாக ஏற்றுக் கொண்ட ஒரு பேதை! அவளின் பாதம் வருடியவா! என் மணவாள முருகா!
அவள் பாதங்களை எதுக்கு முருகன் பிடிச்சி விடணும்?
இது போல நக்கீரர் முதற்கொண்டு யாருமே சொன்னதில்லையே! அருணகிரி மட்டும் ஏன் இப்படி அடிக்கடி பாடுறாரு?
பொதுவா ஆண்கள் கால்களைப் பெண்கள் தான் பிடிச்சி விடுவாங்க! சினிமாவில் அப்படித் தான் காட்டுவாய்ங்க! ஆண்களோ பெண்ணின் வேறு பாகங்களை அல்லவா வருடுவாங்க? :)
ஏன் முருகன் மட்டும் அங்கெல்லாம் பிடிக்காம, அவ காலை மட்டும் அடிக்கடி தொடுகிறான்?
என் முருகனுக்கு இந்த மேட்டரில் விவரம் போதாதோ? :) நைட் லைஃப்-ன்னா என்னான்னே அவனுக்குத் தெரியாதோ? :) இதோ, அப்பறமா படிச்சிப் பாருங்க, அந்தக் காரணத்தை!
காதும் ஒரு விழி காகம் உற அருள் மாயன் அரி திரு மருகோனே! காலன் எனை அணுகாமல் உனது இரு காலில் வழிபட அருள்வாயே!
பொதுவா பல நேரங்களில், சக தோழிகளிடம் கூட, முகத்தைப் பார்க்காது, "வேறு எங்கோ" பார்த்துப் பேசுவது தான் பலரின் வழக்கம்! :)
ஒரு பெண்ணின் மார்பகத்தைப் பார்ப்பது என்பது முற்றிப் போய்.....தெருவோரக் காமத்தால் (Roadside Romance), அவளைச் சீண்டவே நினைத்தவன் ஒருவன்!
ஆனால் சீண்ட முடியவில்லை! ஏன்-ன்னா கணவனும் அருகில் இருக்கிறான்!
ஆசை துடிக்கிறது! காகமாய் மாறி, ஏதோ பட்சணத்துக்காக "அறியாமல் கொத்துவது" போல், அவள் மார்பை அறிந்தே கொத்துகிறான் அந்த ஆண்மகன்!
யார் இந்த யோக்கிய சீலன்? அசுரனா?? = சேச்சே! தேவன்!
தேவர்களுக்கு எல்லாம் தலைவன் இந்திரனின் சீமந்த புத்திரன் = ஜெயந்தன்!
இதைக் கண்ட இராகவன், வெகுண்டு, புல்லையே பாணமாகக் கிள்ளி எறிய, அதுவே சக்கரமாகச் சுழன்று துரத்த, தப்ப முடியாமல், அவள்-அவன் பாதங்களிலேயே வந்து வீழ்கிறான்!
ஒரு கண்ணை மட்டும் புல்லினால் துளைத்து, காமத்தின் ஊற்றுக் கண்ணைத் துளைக்கிறான் இராகவன்! = காதும் ஒரு விழி, காகம் உற, அருள் மாயன் அரி, திரு மருகோனே!
இதை எதுக்கு இங்கு அருணகிரி குறிப்பிட்டுச் சொல்லணும்? இது என்ன திருப்புகழா? திருமால் புகழா?? :)
* அன்று....அசுர குருவான சுக்கிராச்சாரியாருக்கும் ஒரு விழி போனது!
* இன்று........தேவர்களின் இளவரசன் ஜெயந்தனுக்கும் ஒரு விழி போனது! எம்பெருமானுக்கு தேவ-அசுர பேதங்கள் கிடையாது! எம்பெருமான் அனைவருக்கும் பொது! அவரவர் செயல்களே தேவ-அசுரத்தனத்தை நிர்ணயிக்கின்றன!
* அசுர குலத்தில் பிறந்த பிரகலாதனை, "பிரகாலதாசுரன்" என்று வைணவத்தில் சொல்வதில்லை! = "பிரகலாதாழ்வான்"!
* தேவ குலத் தலைவன் மகனை, "ஜெயந்த தேவன்" என்று வைணவத்தில் சொல்வதில்லை! = காகா-அசுரன்!
காலன் வந்த போது தான் ஜெயந்தன் (எ) காகாசுரனுக்குக் காலில் விழத் தோன்றியது!
ஆனால் காலன் எனை அணுகும் முன்பே, காமம் அணுகட்டும்! உன் திருவடிக் காமம் அணுகட்டும்! உனதிரு காலில் வழிபட அருள்வாயே!
பேதையின் காலை வருடிய மணவாளா! உனதிரு காலில் வழிபட அருள்வாயே! ஆதி அயனொடு தேவர் சுரர் உல(கு) ஆளும் வகையுறு சிறை மீளா ஆடும் மயிலினில் ஏறி அமரர்கள் சூழ வர வரும் இளையோனே!
பிரம்மன் முதலான தேவர் கூட்டம் சிறையில் வாடிய போது, அவர்களை சிறை மீட்டு வந்தவனே! என் கந்தவனே!
ஆடும் மயிலில் ஏறி, ஆடாது அசங்காது வா முருகா! அமரர் சூழ வர, வரும் வரதா!
சூதம் மிக வளர் சோலை மருவிடு சுவாமி மலை தனில் உறைவோனே! சூரன் உடல் அற வாரி சுவறிட வேலை விடவல பெருமாளே!!
மணம் மிக்க சோலைகள் மருவிக் கொஞ்சும் காவிரி ஆற்றங்கரையில், சுவாமி மலையில் உறையும் சுவாமியே!
சுவாமிக்கும் நாதனான சுவாமி நாதப் பெருமாளே! ஏரகம் நீங்கா இறைவனே!
அன்று சூரன் உடல் அற இரண்டாக்கி, சேவல்-மயிலாக்கி, மாயத்தால் உண்டான கடலை வற்றச் செய்து,
வேலை விட்டவா! என்னைத் தொட்டவா! உன் திருவடிக் காமத்தை எனக்கு அருள்வாயே!
என்னாங்க எளிமையான திருப்புகழ் தானே? கே.ஆர்.விஜயாவே ஈசியாப் பாடுறாங்க-ல்ல? :)
சினிமாவில் அல்லாமல், பக்தர்கள் குழுவாகப் பாடுவதாகவும் இந்தப் பாட்டு இருக்கு! ஏ.எஸ்.ராகவன் அவர்கள் தலைமையில், திருப்புகழ் அன்பர்கள் சேர்ந்து பஜனை போல் பாடுவது இங்கே:
பாதி மதி நதி போது மணி சடை நாதர் அரு ளிய -ன்னு ஒரு நதி ஓடி வரும் சந்தம் போலவே இருக்கு பாருங்க! பாதி மதி நதி! இதான் நம்ம அருணகிரியின் தமிழ்!
இந்தப் பாட்டு முன்பு இணையத்தில் இல்லை! Youtube-இலும் இல்லை!
அடியார்கள் பொருட்டு, எனக்கு இதை வலையேற்றித் தருமாறு என்னுயிர்த் தோழனைக் கேட்டேன்!
அவனோ, என்னிடம் பதிலுக்கு வேறென்னமோ ஒன்னு குடு-ன்னு கேட்டான்! போடா என்று முட்டிக் கொண்டது :)
இல்லை...முதலில் நீ தான் தர வேண்டும் என்று நான் சொல்ல...
இல்லை...முதலில் நீ தான் தர வேண்டும் என்று அவன் சொல்ல...
அடியார்கள் முதலில், அப்புறம் தான் உன் சொந்த வேலை என்று நான் சொல்ல...
இல்லை...என் சொந்த வேலை தான் முக்கியம் என்று அவன் சொல்ல...
கோ.இராகவனிடம் கோபித்துக் கொண்டே தூங்கி விட்டேன்...
கோ.இராகவனிடம் சிரித்துக் கொண்டே கனவில் கேட்டேன்...
மறுநாள் காலை....விழித்த கணம்....கணினியைத் திறக்க....
Youtube-இல் Youravi-க்கென்றே இந்த பாடல் தரவேறி இருக்கு! :)
சொந்த வேலை முக்கியம் என்று சொன்ன தோழனின்
கந்த வேலை கண்ட களிப்பில்....
மீண்டும் தொலைபேசியில் சீண்டல் தொடங்க...
அதை...இன்று...இந்தத் திருப்புகழில் எண்ணிப் பார்க்கின்றேன்! இரு நிலம் மீதில் எளியனும் வாழ....எனது முன் ஓடி வர வேணும்! எனது முன் ஓடி வர வேணும்! முருகாஆஆஆ!
சிவாஜி படத்தில் முருகன் பாட்டு இருக்கு-ன்னு பலருக்கும் தெரியும்! படம் = கந்தன் கருணை! வெற்றிவேல், வீரவேல்-ன்னு, சிவாஜி வீரவாகு போல் Walking Style காட்டுவாரு! இதோ அந்தப் பதிவு! ஆனால், எம்.ஜி.ஆர் படத்தில்? எம்.ஜி.ஆர், முருகன் பாட்டு பாடி இருக்காரா என்ன? அட, பாட்டு என்ன? எம்.ஜி.ஆர் முருகனாவே வேஷங் கட்டியிருக்காருப்பா! ஒரே ஒரு பாட்டுக்குப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் முருகனாக நடிக்க, ஜெயலலிதா வள்ளியாக நடித்தார்! இதைத் தேர்தல் போஸ்டர்களில் கூடச் சிலர் பார்த்திருக்கலாம்! படம் = தனிப் பிறவி!
இன்னொரு படம் = உழைக்கும் கரங்கள்! நாளை உலகை ஆள வேண்டும், உழைக்கும் கரங்களே-ன்னு பாட்டு வருமே! அந்த எம்.ஜி.ஆர் படம்! அதில் கந்தனுக்கு மாலையிட்டாள்-ன்னு ஒரு முருகன் பாட்டு! அதை வாணி ஜெயராம் மிக நேர்த்தியாகப் பாடி இருப்பாய்ங்க! வீணை இசையோடு காதல் இசை! நடிகை பவானி பரதநாட்டிய நடனக் கலைஞர்! எம்.ஜி.ஆர் மேல் அதீத அன்பும் காதலும் கொள்வார்! எம்.ஜி.ஆரும் அன்பு செலுத்துவது போல் இருக்கும்! ஆனால் அது ஏனோ காதலாக மலராது! அப்புறம் எம்.ஜி.ஆர் லதாவைக் கரம் பிடிப்பார்! எம்.ஜி.ஆரும்-லதாவும், பவானி வீட்டிலேயே அடைக்கலம் கொள்வார்கள்! அன்று முதல் இரவு!
அவர்கள் முதலிரவுக்கு வேண்டிய அனைத்தையும் பவானியே செய்ய வேண்டிய இக்கட்டான நிலைமை! பாவம்...அவள் மனம் பதபதைக்கும்! இருப்பினும் பழைய காதலன் மேல் உள்ள மாறா அன்பால் அதையும் செய்வாள்! தம்பதிகளை முதலிரவு அறைக்கு அனுப்பி விட்டு, இவள் மட்டும் தனி அறையில்...
உள்ளத்தை இழந்தவள், உயிரை இழந்தவள் அல்லவா? இனி ஒன்றுமே இல்லை என்று எல்லாமே இழந்தவளுக்கு... இனி ஏது அடைக்கலம்? = முருகன் மட்டுமே அடைக்கலம்! கந்தனுக்கு மாலையிட்டாள்! கந்தனுக்கு மாலையிட்டாள்!
கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளி மயில் கல்யாண கோலத்திலே கவிதை சொன்னாள் காதல் குயில்!
சொக்கருடன் மீனாட்சி சொக்கி நிக்கும் திருக்காட்சி காண வந்த கண்கள் ரெண்டும் காதலுக்கு ஒரு சாட்சி!
பூவோடு பொட்டும் தந்தேன்! ஒரு பூவைக்கு வாழ்வு தந்தேன் சலங்கை கட்டும் இல்லத்திலே தாலி கட்டும் நடக்க கண்டேன்!
வேலுண்டு வினையில்லை என்ற திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர் இசையில் வாணி ஜெயராம் அவர்கள் பாடிய இந்தப் பாடல் உள்ளத்தை உருக்கும்.
திரைப்படங்களில் எத்தனையோ பாடல்கள் இன்னிசையோடு இறைவனைத் துதித்து வெளி வந்துள்ளன. துன்பப்படும் கதாபாத்திரங்கள் தங்களைக் கடவுளே காக்க வல்லார் என்று அழுது தொழுது பாடுகையில் உள்ளம் உருகும் படி இசையமைத்திருப்பார்கள்.
இதோ பாடலைக் கேளுங்கள். நமது நெஞ்சமே உருகும் பொழுது தமிழ்வேளின் திருவுளம் இழகாதா? உருகாதா?
காற்றின் அணுவை மூச்சாக்கி - என் கந்தா எனக்கு உயிர் கொடுத்தாய்! மூச்சே காற்றாய் முடியும் வரை - உன்னைப் போற்றிப் பாடிடக் குரல் கொடுத்தாய்!
பாலூட்டும் அன்னை இல்லை! தந்தை சீராட்டும் நிலையில் இல்லை! ஊரோடு உறவும் இல்லை! இங்கு உனை அன்றி எதுவும் இல்லை! போராட்டம் ஆகும் வாழ்வில் - உன்னைப் பாராமல் அமைதி இல்லை! வேலோடு மயிலும் நீயும் - என்னை வாழ்நாளில் காக்கும் எல்லை!
வானூரும் வெள்ளி மலையில் - தந்தை தாயோடு வீடும் உண்டு! கணநாதன் அண்ணன் உண்டு! - சபரி மலை மீது தம்பி உண்டு! என் வாழ்வு என்ற ஒன்று, நீ தரும்போது தானே உண்டு? குன்றாடும் குமர வேலே - அருள் கொடுத்தாள வேண்டும் இன்று!
வருவான் வடிவேலன் தணிகை வள்ளலவன் அழகு மன்னனவன் நினைத்தால் வருவான் வடிவேலன் (வருவான்......
சிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன் அவள் செங்கனி வாயிதழை நனைக்கின்றவன் (சிரித்துக்..... இடையினில் கை கொடுத்து வளைக்கின்றவன் அள்ளி இடுகின்றவன் சொர்க்கம் தருகின்றவன் (ஆஆஆஆஆஆ...இடையினில்...
அடியவர் கேட்ட வரம் அருள்கின்றவன் என்றும் அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன் கொடியவர் பகை தீர்த்து முடிக்கின்றவன் சேவல் கொடியனவன் நமக்கு இனியனவன் (கொடியவர்.....
வருவான் வடிவேலன் தணிகை வள்ளலவன் அழகு மன்னனவன் நினைத்தால் வருவான் வடிவேலன்
திருமுருகாற்றுப்படை நான் பாடவா இல்லை திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா திருமுருகாற்றுப்படை நான் பாடவா இல்லை திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா கந்தர் சஷ்டிக் கவசக் கதை பாடவா அவன் முன் கையேந்தவா வெற்றிக் கடல் நீந்தவா (வருவான்.....
பாடியவர் : வாணி ஜெயராம் இயற்றியவர் : கவியரசர் கண்ணதாசன் இசையமைத்தவர் : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் திரைப்படம் : வருவான் வடிவேலன் முருகன் படம் நன்றிwww.murugan.org