வேலவனே உனக்கு வேலை என்னவோ சொல்லு
இன்று கிருத்திகை திருநாள்.குமரனுக்கு உகந்த நாள். இப்போது நாங்கள் இருக்கும் சிங்கையில் வீட்டுக்கு அருகில் ஒரு முருகன் கோவில். செங்காங் முருகன் கோவில். கோவிலின் தோற்றம் கீழே இருந்து பார்த்தால் இப்படி இருக்கிறது.
இசை உலகில் முடி சூடா மன்னர்களாக இருந்த மூன்று எழுத்து மன்னர்கள் மூன்று பேர்கள். அவர்கள் தான் ""ஜிஎன்பி"" (ஜி என் பாலசுப்ரமனியன்) எம்டிஆர்(எம்.டி.ராமனதன்)எம்.எல்.வி(எம் எல் வசந்தகுமாரி) இப்பொழுதான் அன்னையின் பெயரை பெயருக்கு முன்னால் இனிஷியிலாக போட்டுக் கொள்ளலாம் என்று சட்டம் வந்து இருக்கிறது. ஆனால் 80 ஆண்டுகளுக்கு முன்னாலேயே மெட்றாஸ். லலிதாங்கி. வசந்தகுமாரி என்று தாயரின் பெயரை தன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்ட புரட்சி தலைவி.
அதுபோல எம்டிஆர் என்றாலே ஒரு தனிகூட்டத்தையே கட்டி ஆண்டவர்தான் எம். டி ராமனாதன் என்ற கலாஷேத்திரம் கண்ட கலைமாமணி.அவரது பாடல்களை ரசிக்க வேண்டுமென்றால் ஒருவர் சங்கீதம் கேட்பதில் பிஹெச்டி பட்டம் வாங்கியிருக்க வேண்டும்.எந்தபாட்டக இருந்தாலும் ஆரம்பம் முதல் கடைசிவரை எங்கு கேட்டாலும் ராக பாவம் ததும்பும்.கேரளாவில் பிறந்தாலும் அவர் தமிழில் பாடல்கள் இயற்றி மெட்டமைத்து பாடியுள்ளார்.
சஞ்சை சுப்ரமணியன் அவரது பரம ரஸிகன். அவரது பாடலை அவரைப்போலவே பாடியுள்ளார்.அதுவும் சஹாணா ராகத்தில் முருகன்மேல் அமைந்த பாடல். வேலவனே உனக்கு வேலை என்ன. ஜாலங்கள் செய்வதா. வள்ளியை காந்தர்வ திருமண முடித்ததா,அப்பன்மீது கோபம் கொண்டு மயில் மீது ஏறிக்கொண்டு மூன்று உலகங்களையும் சுற்றுவதா.அல்லது அவருக்கு பிரணவ உபதேசம் செய்ததா, மலைகளின் மீதெல்லாம் சென்று ஆட்டம் போட்டதா
குமாரவடிவேலனே அதைவிட முக்கியமான வேலை என்னைக் காப்பாற்றுவது இல்லையா? எனக்கு நல்லது ஒன்றும் தெரியாதே இருந்தாலும் என்னைக் காப்பாற்று என்று அருமையாக நையாண்டித்தனமாக சாடுகிறார் பாடுகிறார் . பார்த்து கேட்டுத்தான் பாருங்களேன்
ராகம்: சஹாணா தாளம் : ஆதி
பல்லவி
வேலவனே உனக்கு வேலை என்னவோ சொல்லு
ஜாலங்கள் செய்யாதே சிங்கார வடி வேலவனே.....(வேலவனே)
அனுபல்லவி
பாலசுப்ரமண்யா பார்வதி பாலனே
பரமேசன் தனக்கு உபதேசம் செய்தானே......(வேலவனே)
சரணம்
அன்று ஒரு குறத்தியை மணந்தாயே- நீயும்
முன்று லோகங்களுக்கும் மயில் மீது சென்றாயே
குன்றுதோறும் சென்று குழைவாக ஆடினாயே
சான்றொன்றும் தெரியேனே ஷண்முகத்தேவனே.....(வேலவனே)
-
9 comments:
நல்ல கேள்விகள் தான் தி.ரா.ச. நம்மைக் காப்பதை விட அவனுக்கு வேறென்ன வேலை? சொத்தைக் காப்பாற்றுவது சொத்தை உடையவனுடைய வேலை.
சிங்கைக் கிருத்திகைப் பதிவுகளுக்கு நன்றி திராச ஐயா!
ஜாலங்கள் செய்யாதே வேலையத்தவனே-ன்னு நல்லாவே திட்டுறாரு என் முருகனை! ஐ லைக் இட்! :))
ஆனால் இறுதியில் அழகாகச் சரணாகதி செய்து விடுகிறார்! அந்த ஒத்தை வரி! "சான்றொன்றும் தெரியேனே"!
அதுல அப்படிச் சொல்லி இருக்கு! இதுல இப்படிச் சொல்லி இருக்கு-ன்னு எல்லாம் அடுக்காமல், சான்று ஒன்றும் எனக்குத் தெரியாதுப்பா! சரணம் சரணம் சண்முகா சரணம்!
நல்ல பாடல் திரச....இன்றுதான் இடுகையை கவனித்தேன்.
குமரன் சொன்னது போல சொத்தோ, இல்லை என்னைப் போன்ற சொத்தையோ காப்பது அவன் கடமை. :-)
வாங்க குமரன். கேள்வியின் நாயகனே குமரன் தான். இல்லாமயா பிரும்மாவிடமே மற்றும் சொந்த அப்பனிடமே பிரணவத்துக்குப் பொருள் என்ன என்ற கேள்வியைக் கேட்டான்.
ஜாலங்கள் செய்யாதே வேலையத்தவனே-ன்னு நல்லாவே திட்டுறாரு என் முருகனை! ஐ லைக் இட்! :))
வாருங்கள் கேஆர்ஸ். கொஞ்சம் ஸவுண்ட் உட்டாத்தான் ஆண்டவனே உடனே ஓடியாராரு!நிந்தா ஸ்துதிக்கு கிடைக்கும் மரியாதை பக்தி ஸ்துதிக்கு கிடைப்பதில்லையே! சிசுபாலன் 100 தடவை திட்டினத்துக்கே கிருஷ்ணன் அவனுக்கு மோக்ஷம் கொடுத்தார். ஆனால் எபொழுதும் கிருஷ்ணனையே நினைத்துக்கொண்டு இருந்த பீஷ்மருக்கு 1008 தடவை விஷ்ணு ஸ்துதிக்கு அப்பறம்தான் மோக்ஷம்.
குமரன் சொன்னது போல சொத்தோ, இல்லை என்னைப் போன்ற சொத்தையோ காப்பது அவன் கடமை. :-)
வாங்க மௌலி சார்.சொத்தையா? அவன் படைப்பில் சொத்தையே கிடையாது எல்லாமே சத்துதான். சரணகதி அடைந்து விட்டால் சத்துவ குணம் வந்துவிடும். அது வந்து விட்டால் சொத்தைஎன்ற எண்ணமே வராது.
ஐயா,
செங்காங்'லே முருகன் கோவில் இருக்கா?? இந்த வாரம் போயிறேன்.. :) யூசூன்'லே இருக்கிற முருகன் கோவிலுக்குதான் அடிக்கடி போயிட்டு வருவேன்... :)
செங்காங்'லே முருகன் கோவில் இருக்கா?? இந்த வாரம் போயிறேன்
வாங்க ராம். நானும் யசூன்லே இருந்தவரை அங்கேதான் பொனேன். இப்போ பூங்கோல் வந்த பிறகு இந்த முருகன் கோவில்தான். நம்மவேடும் பக்கத்திலேதான் வாங்க இரண்டு பேரும் சேர்ந்து போகலாம்
//சொத்தைக் காப்பாற்றுவது சொத்தை உடையவனுடைய வேலை.//
குமரன் சொன்னதை ஆமோதிக்கிறேன் :)
வேலேந்தும் வேலவனுக்கு வேறென்ன வேலை? நல்ல பாடல் தி.ரா.ச. ஐயா. நன்றி.
Post a Comment