இன்று கிருத்திகைத் திருநாள்.முருகனுக்கு உகந்த நாள். போனமாதம் ஊரில் இல்லாததால் விட்டுப்போய் விட்டது. அவன் அருள் இல்லாமல் அவனை வணங்கமுடியுமா என்ன? தமாதம் தகாதைய்யா என்றஒரு அருமையான் தமிழ்ப்பாடல் முருகன் மீது உண்டு. இதனை இயற்றியவர் திரு.லால்குடி ஜெயராமனின் தந்தை திரு. லால்குடி கோபலய்யர் அவர்கள்.இன்று இந்த மோஹன கல்யாணி ராகப் பாடல் திருமதி. மும்பை ஜெயஸ்ரீயின் குரலில் பார்த்து கேட்டு ரசிக்கலாம்.பாடலைக்கேட்கும் /பார்க்கும் போதே முருகனுக்கு நடக்கும் அபிஷேகம், அலங்காரம்,மற்றும் தீபராதனையும் கண்டு வணங்கலாம் வாருங்கள் ராகம் : மோஹன கல்யாணி பல்லவி தாமதம் தகாதைய்யா தயாபரா துணை முருகய்யா (தாமதம்...) அனுபல்லவி தாமச குண தீனனான தமியேனை ஆள தருணமீதைய்யா ( தாமதம்.....) சரணம் மாலும் அயனும் காணா மஹாதேவன்மைந்தா மாது வள்ளி தேவமாது மகிழ் கந்தா வேலும் மயிலும் எந்நாளும் என்னைக் காக்கவே வேவேகமாகவே வரும் வரம் தாரும் (தாமதம்.....)
இந்தப் பாடல் திரைப்படத்தில் வந்த பாடலாம். எழுதியவர் யாரென்று தெரியவில்லை. இசையமைத்தவரும் பாடியவர்களும் நன்கு செய்திருக்கிறார்கள். கேட்டுப் பாருங்கள்.
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை (கண்ட)
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை (கண்ட)
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை நேசமுடன் கலந்த பாசமும் மறையவில்லை கோலக் குமரர் மனக் கோயிலில் நிறைந்துவிட்டார் குறுநகை தனை காட்டி நறுமலர் சூட்டிவிட்டார் (கண்ட)
திரைப்படம்: கண்ட நாள் முதல் வெளிவந்த வருடம்: 2005 பாடியவர்கள்: பூஜா, சுபிக்ஷா இசை: யுவன் சங்கர் ராஜா
நேற்றைய வாழ்வு அலங்கோலம் அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம் நேற்றைய வாழ்வு அலங்கோலம் அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம் வரும் காற்றில் அணையாச் சுடர்போலும் அருள் கந்தன் தருவான் எதிர்காலம் கந்தன் தருவான் எதிர்காலம்
எனக்கும் இடம் உண்டு
ஆடும் மயிலே என் மேனி - அதில் அழகிய தோகை என் உள்ளம் ஆடும் மயிலே என் மேனி - அதில் அழகிய தோகை என் உள்ளம் நான் உள்ளம் என்னும் தோகையினால் கந்தன் உறவு கண்டேன் ஆகையினால் உறவு கண்டேன் ஆகையினால்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் - நீ கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே அருமறை தேடிடும் கருணை என் கடலே அருமறை தேடிடும் கருணை என் கடலே - கற்பனை என்றாலும்