பிறந்தநாள்: திருத்தணி முருகா, தென்னவர் தலைவா!
எனக்கு ரொம்ப நாளா ஓர் ஆசை, லூசுத்தனமான ஆசை தான்:)
முருகன்!
=அவனை, ஆளுயரம் செஞ்சி,
=எனக்கு இணையா, துணையா
=உயிருள்ள உறவு போல், வீட்டிலேயே வச்சிக்கடணும்-ன்னு ஆசை:)
என்னை விடக் கூடுதல் உயரம்
என்னை விடக் கூடுதல் அழகு
என்னை விடக் கூடதல் ஆண்மை
என்னை விடக் கூடுதல் ஆசை
என்னை விடக் கூடுதல் அன்பு
என்னை விடக் கூடுதல் கூடல்
*நம்ம உயரமே இருக்குறதால.. அவன் தோள் மேல கை போட்டுக்கலாம்!:)
*தலை சீவி விடலாம், Shave பண்ணி விடலாம்..
*அவனுக்கு Tie கட்டி விடலாம்:)
*எச்சி தோசை, கடிச்சிக் கடிச்சிச் சேர்ந்து சாப்பிடலாம்..
*போர்த்திக்கிட்டு கதகத-ன்னு தூங்கலாம்
இன்னும் என்னென்னமோ.. :)
இப்படி, "நம் உயர" முருகன் திருமேனி..
(சிலை-ன்னு சொல்ல எனக்கு வாய் வரலை)
சில சினிமாப் படங்களில், எப்பவாச்சும் வரும்; அதைப் பார்த்தாலே, என் கற்பனை துள்ளிக்கிட்டுப் பறக்கும்!
கீழ்வானம் சிவக்கும் படத்தில்,
வீட்டின் தோட்டத்தில் முருகன் இருப்பான்;
சிவாஜியும் சரிதாவும், அவனைச் சுத்தித் தான் சண்டை போட்டுக்குவாங்க:)
ஆனா அவன் கொஞ்சம் சிறுசு; பொடியன்!
பெரியவனா, ஆண் மகனா, உற்ற தோழனா
என் உசரத்துக்கே இருக்கும் ஒரு முருகன்!
படம்: நீலகிரி எக்ஸ்பிரஸ்
Video வில் நீங்களே பாருங்க : எம்புட்டு துணைவனா எனக்கு இருப்பான்-ன்னு:)
பாடல்: திருத்தணி முருகா, தென்னவர் தலைவா!
வரி: கண்ணதாசன்
குரல்: பி. சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி
இசை: MSV
இன்று (May 27): இந்த முருகனருள் வலைப்பூவின் முன்னோடியான,
தோழன் இராகவன் (ஜிரா) பிறந்தநாள்
அவன் நினைவாக, இந்தப் பாடலை, இங்கே இட்டு, ஆசி வேண்டுகிறேன்!
Happy Birthday Ragava
மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
*நல்ல உணவும், நளி மிகு உடையும்,
*இசை தவழும் உறையுளும்,
*வெற்றி மிகு பணியும்
*மாறிலா உறவும், திருப் புகழும்
உன்னைச் சேர்ந்தேலோர் எம் பாவாய்!
நடனப் பாடல்: ஆடுறது யாரு? -ன்னு நல்லாக் கவனிச்சிப் பாருங்க:)
கேள்வியின் நாயகனே, என்றன் கேள்விக்குப் பதில் ஏதய்யா?:)
தாம் தித் தாம் - தை தித் தை
தாம் தித் தாம் - தை தித் தை
திருத்தணி முருகா தென்னவர் தலைவா
சேவலும் மயிலும் காவலில் வருமா
(திருத்தணி)
தேன் பரங்குன்றம் செந்தூர் மன்றம்
செந்தமிழ்ச் சங்கம் திருநாள் எங்கும்
வடிவேல் சேவை நினைந்தாள் பாவை
காணும் - கண்ணில் எங்கும் - கண்டாள் உந்தன் தேவை
(திருத்தணி)
கந்த வேளை எந்த வேளும்
வெல்லுவதில்லை!
உந்தன் பேரை அன்றி வேறு
சொல்லுவதில்லை!
உன்னை எண்ணும் உள்ளம் ஏதும்
கொள்ளுவதில்லை!
இன்று நாளை என்றும் துன்பம்
அண்டுவதில்லை!
மலையும் நீயே, கடலும் நீயே
வானும் நீயே, நிலமும் நீயே
பஞ்ச பூதம் - ஒன்று கூடும் மன்றம்
வந்த பேர்க்கு - வாழ்வு நல்கும் குன்றம்
மங்கல குங்குமம் - கிண்கிணி மங்கலம்
ஓம் எனும் மந்திரம் - யாவையும் சங்கமம்
ஆதியாகி அந்தமாகி நீதியாகி நெஞ்சமாகி
அலைகள் கலகலென
இலைகள் சலசலென
மலைகள் மடமடென
உலகம் இசை பொழிய
வரு முருகா! ஒரு முருகா! திரு முருகா!
திருத்தணி = வள்ளிக்கும் முருகனுக்கும் திருமணம் நிகழ்ந்த ஊர்!
(அருகிலேயே தான் சொந்த ஊரு, வள்ளிமலை)
முருகனுக்குக் காமம் தணிந்த இடம் = தணிகை:)
கோபம் தணிந்த இடம், போட்டியில் தோற்றான் = சும்மா புராணக் கற்பனை!
அசுரர் குடி கெடுத்த ஐயா = முருகனுக்கு யார் குடியும் கெடுக்கத் தெரியாது!
* முருகன் = தமிழ் நிலத்தின் மூத்த குடி! முன்னோர் நடுகல்!
* வள்ளி = அவனேயே வாழ்வில் சுற்றிக் கொண்ட காதல் துணைவி!
= இவர்கள் இருவரின் காதலும்/காமமும் தணிந்தவொரு தணிகை
கொடிநிலை கந்தழி வள்ளி - என்னும் தொல்காப்பியம்!
குறிஞ்சி நிலத் தமிழ் தொன்மங்களாய்.. குடி காத்த முருகன்!
நம்மையும் காக்கட்டும்!
பிறந்த நாள் பையன் இராகவனையும் காக்கட்டும்! பல்லாண்டு பல்லாண்டு!