முத்தமிழ் முருகா!
தைப்பூசத்திற்காக... தாமதத்திற்கு மன்னிச்சுக்கோடா முருகா...
முத்தமிழ் முருகா! சக்திவேல் குமரா!
சித்தத்தில் நின்றாடும் செந்தில்
வடிவேலவா!
(முத்தமிழ்)
ஓங்காரத் தத்துவத்தின் உட்பொருள்
உரைத்தாய்!
சிங்காரத் தமிழினைச் செப்புவித்தாய்!
(முத்தமிழ்)
எந்தை சிவன் ஈன்ற விந்தை மைந்தனே!
தொந்திக் கணபதியின் சோதரனே!
வந்தேன் என முன்னே வந்தருள் புரிபவனே!
சொந்தம் உனையன்றி யார் குகனே!
(முத்தமிழ்)
--கவிநயா