What more can I ask My Dear Muruga!!!
Thanks: myrachi, Youtube
பாடல் வரிகள் தேடிடும் முருகன் அன்பர்க்கும்,
தமிழ் வரிகள் நாடிடும் தமிழ் அன்பர்க்கும்,
அன்பு உதவியாக... அவனருளால்!
Thanks: myrachi, Youtube
Posted by குமரன் (Kumaran) at 5/24/2008 06:49:00 AM 3 comments
"ஜி.ரா.வின் காவடிச் சிந்து"
நண்பர் 'ஜி.ரா.' எழுதிய காவடிச் சிந்தை இங்கு பாடியிருக்கிறேன்!
எப்படி இருக்குன்னு சொல்லுங்க மக்களே!
|
Posted by VSK at 5/22/2008 10:48:00 PM 14 comments
Labels: vsk, அன்பர் கவிதை
வைகாசி பொறந்தாச்சு! மணம் பேசி முடிச்சாச்சு! வைகாசி-ன்னாலே கல்யாணங்கள் மட்டும் தானா?
இன்று வைகாசி விசாகம் (May 19, 2008)
அப்படி என்ன விசேடம், இந்த வைகாசி விசாகத்துக்கு? - சைவக் கொழுந்து பிறந்ததும் இன்று தான்! வைணவக் கொழுந்து பிறந்ததும் இன்று தான்! இப்படி ஒரு இனிய சைவ-வைணவ ஒற்றுமை!
வேதம் தமிழ் செய்தான் - மாறன் சடகோபன் - என்னும் நம்மாழ்வார் அவதரித்த திருநாள்! இறைவன் திருவடிகளின் அம்சமாக அவனியில் வந்தவர் அவர்! அது மட்டுமா?
விசாக நட்சத்திரத்தில் தோன்றினான் இன்னொரு அழகன். அவனுக்கு விசாகத்தான் என்ற பெயரும் உண்டு!
(அதுக்காக விசாகத்துல பொறந்தவங்க எல்லாருமே அழகா இருப்பாங்களா-ன்னு கேக்கறீங்களா? ஜோதிட விற்பன்னர்கள் யாராச்சும் சொல்லுங்கப்பா!)
இன்சொல் விசாகா கிருபாகர
செந்திலில் வாழ்வாகியே, அடியேன் தனை
ஈடேற வாழ்வு அருள் பெருமாளே!
என்று அருணகிரியும் இவனை "விசாகன்" என்றே கொண்டாடுகிறார்! அவன் தான் விசாகன் என்னும் முருகன்! அந்த விசாகன் தோன்றிய தினமும் இந்த வைகாசி விசாகம் தான்!
So....
Happy Birthday, Dear Muruga! :-)
முருகா, உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்என்று முருகனுக்கு பிறப்பிறப்புகள் கிடையாது என்று சொல்லுவார்கள்!
பொதுவாகவே கந்தக் கடவுளுக்கு மட்டுமில்லை, எந்தக் கடவுளுக்குமே பிறப்பிறப்புகள் கிடையாது! - இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுவது எல்லாம் மனிதனாய் கீழறங்கி வரும் அவதாரங்களுக்கு மட்டுமே! கிறிஸ்துமஸும் அப்படியே! மத்தபடி ஆதியும் அந்தமும் இல்லா இறைவனுக்கு ஏது பிறப்பும் இறப்பும்?
பிறவான்-னு என்ன தான் அருணகிரியார் சொன்னாலும், நாம அன்பா Happy Birthday-ன்னு முருகனுக்குச் சொல்லுறதை அவரும் தடுப்பாரா என்ன?
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்! அதனால் பிறந்தநாள் பரிசு வைத்தேன்! :-)
Posted by Kannabiran, Ravi Shankar (KRS) at 5/18/2008 11:31:00 PM 19 comments
Labels: *ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ, cinema, krs, கே.வி.மகாதேவன், சூலமங்கலம்
எந்தவேளையும் கந்தவேளைத் தொழுவோர்க்கும் சொந்தவேளை என்ற ஒன்றே இல்லாதவர்க்கும் நாளும் கிழமையும் ஒன்றே. அப்படியிருப்பினும் ஒருவேளையாவது இறைவனின் திருவேளை என்றுண்ணி வாழ்கின்ற பேர்களுக்கு அவ்வேளையும் செவ்வேளையாக வாழ்த்துவோமாக. அவ்வகையில் வைகாசி விசாகத் திருநாளாகிய இன்று தமிழ்வேளைத் தொழுது இவ்வேளையைத் தமிழ் வேளை என்று ஆக்கும் பெருமையை வேண்டுவதே சிறப்பாகும்.
கண்டோரும் விண்டோரும் சொல்லில் பொருளில் இறைவனைப் பாடிய வேளையில் அன்புண்டோரும் பாடலாம். இறைவன் அருளினைக் கூடலாம் என்ற கருத்தினை ஒப்புக் கொண்டு செம்மொழியும் நல்லன்பும் மட்டுமே உளத்தில் நிறுத்தி முருகன் அருளால் செய்த பாடல் இது. காவடிச் சிந்து மெட்டில். பாவை அறியாப் பாலகன் பாலை அகல எண்ணிச் செய்த இந்த விளையாட்டுச் சிந்தினைச் செந்திலை நினைத்துப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வள்ளியைத் தொட்டுக் கரமிட்டக் காதலன்
வேலவன் வடிவேலவன் - அந்தக்
கள்ளியின் சேல் கண்டு கால் தொட்டுக் காத்திடும்
காவலன் நம்காவலன்
புள்ளியைக் கொண்ட மயில் விட்டு வேகமாய்
ஏகினான் நமைச் சாகினான் - நாளும்
எள்ளியே துன்பத்தை நம்மினும் தூரமிட்
டோட்டினான் வழி காட்டினான்
பள்ளியைத் தந்து மெய்யறி வூட்டிடும்
போதகன் தமிழ்ப் போதகன் - மலர்
அள்ளியே தூவியே பாடிடும் கூட்டத்தில்
நாயகன் அருள் தாயகன்
இந்தப் பாடலை அன்பர்களோ நண்பர்களோ பாடித் தந்தால் மிகவும் மகிழ்வேன்.
அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்
Posted by G.Ragavan at 5/18/2008 04:18:00 PM 21 comments
Labels: folk music, gira, அன்பர் கவிதை, காவடிச் சிந்து, வள்ளி
Posted by குமரன் (Kumaran) at 5/16/2008 05:58:00 PM 15 comments
Labels: *சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும், குமரன்
கிருத்திகை முருகனுக்கு உகந்தநாள்.அதுவும் முருகனுக்குரிய செவ்வாயன்று வரும் சிறப்புநாள் முருகனை பணிந்து அவன் பாடலைக் கேட்டு பார்த்து ரசிப்போம். அலுவல் நிமித்தமாக சுற்றுபயணத்தில் இருப்பதால் இருக்கும் வசதியைக் கொண்டு இடப்பட்ட பதிவு.குறை பொறுத்து நிறையை மட்டும் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ராகம்:- கல்யாணி தாளம்:- ஆதி
பல்லவி
எனது உயிர் நீ முருகாஏழைக்கருள் செய்ய வா
அனுபல்லவி
இணையடி வேண்டி தினம் தொழும் அடிமை நான்
சரணம்
அழகு வடியும் ஆறுமுகனே
அன்னை உமையவளின் அருமை மகனே
கழனி மலர்காசுல் கந்த மறைஒதும்
பழனிமலை மீதமர் கந்தா பரிசோதனை போதும்
இந்தப்பாடல் மறைந்த பாடகர் திரு. கல்யாணராமன் இயற்றி மெட்டமைத்து பாடியது
Posted by தி. ரா. ச.(T.R.C.) at 5/05/2008 09:11:00 PM 11 comments
Labels: *எனது உயிர் நீ முருகா, திராச
அம்மையார் பாடப் பாடக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அதுவும் முன்னும் பின்னும் பொருத்தமான சொற்களைக் கூட்டிக் குறைத்துப் பாடும் போது 'ஆகா. அது தரும் ஆனந்தமே ஆனந்தம்'. இந்தப் பாடலும் அப்படியே. அம்மையார் கே.பி.சுந்தராம்பாள் பாடுவதைக் கேட்டுப் பாருங்கள்.
கந்தா உன்னை நான் வந்தடைந்தேன் - என்னைக்
காப்பதுன் கடமையையா பழனிக் (கந்தா)
சிந்தையில் விளையாடும் தேவாதிதேவனே
இந்தா என்று நல்வரம் ஈந்தருளும் கருணைக் (கந்தா)
பந்த பாசங்களில் என் சிந்தனை செல்லாமல்
பக்குவ நிலை அருள் சொக்கநாதன் மகனே
சந்தோசம் தந்திடும் சண்முகனே குகனே
தந்தைக்குபதேசம் செய்த சுவாமிநாதனே (கந்தா)
Posted by குமரன் (Kumaran) at 5/01/2008 04:36:00 PM 18 comments
Labels: *கந்தா உன்னை நான் வந்தடைந்தேன், semi classical, குமரன், கே.பி.சுந்தராம்பாள்
© Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008
Back to TOP