சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!
விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
முருகன் விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
மயில்மீது மன்னனை இருக்கவைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
மயில்மீது மன்னனை இருக்கவைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!
திரைப்படம் - கந்தரலங்காரம்
இசை - குன்னக்குடி வைத்தியநாதன்
14 comments:
///சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!...
////
ஓ.. சாமி பாட்டா.. நான் ஏதோ போயஸ் கார்டனிலிருந்து வர்ற வைத்தியர் பாடுற பாட்டோன்னு நினைச்சுட்டேன்... :-))))
ராம்கி
பாடல் நல்லாருக்கு. படத்தில் வரும் முருகன் கொள்ளை அழகு :) ரொம்ப நன்றிங்க சிபி.
என்னுடைய நின்குழல் பாட்டு வரிசையில் (Youtube Playlist) இந்தப் பாட்டும் இருக்கு சிபி. நல்ல பாட்டு. நாலு நாளைக்கு ஒரு தடவையாவது இந்தப் பாட்டைக் கேட்டுக்கிட்டு இருக்கேன். :-)
தேன்கிண்ணம் கொடுத்த முருகனே, ஆயிரம் நன்றிகள் உனக்கு. :-)
இங்கு இந்த பாடலைப் பதிவிட்டவுடன் காணாம போயிருந்த தேன்கிண்ணம் பிளாக் திரும்ப கிடைச்சிடுச்சு!
:)
மாற்றங்கள் நன்றாக உள்ளன சிபியாரே!
முருகனருள் உங்களுக்கு முன்நிற்கும்!
//நாமக்கல் சிபி..
இங்கு இந்த பாடலைப் பதிவிட்டவுடன் காணாம போயிருந்த தேன்கிண்ணம் பிளாக் திரும்ப கிடைச்சிடுச்சு//
அதான் "முருகனருள்" அண்ணே! :)
சந்தனம் மணக்குது
கற்பூரம் ஜொலிக்குது
தேன் கிண்ணம் கிடைக்குது...
கந்தகிரி கோவில் = ?
எங்கே இருக்கு சிபி அண்ணே?
மாற்றத்தினால் வந்த தோற்றத்தினால் எழுந்த புதுமைக்கு நன்றி சிபி.
பாட்டும் ஜோர். அழகனுக்கு அழகு செய்த சிபி வாழ்க.
முருகனருள் என்றும்கிடைக்கட்டும்.//சித்ரம்
/கந்தகிரி கோவில் = ?
எங்கே இருக்கு சிபி அண்ணே?
/
கொங்குவள நாட்டிலே குன்றுதோறும் குடிகொண்டவனே!சீலமான சேலத்திலே கன்னிமார் ஓடையிலே கந்தகிரியிலே கந்தாச்ரமத்திலே ஞான ஸ்கந்தஸத்குருவான ஜோதியே
மிக்க நன்றி. முருகனருள் பரிபூரணமாக உங்களுக்குக் கிடைக்க வாழ்த்துக்கள். ஆர்வி.
Body language of Thangavelu sir super in front of Lord Muruga.
Vetri veludan seval kodi eatri vaithu....,indha rajathi rajanuku mudi soottuvam... Muruga🙏🙏🙏I'm recently addict this song ❣️💜
My favorite 😍 Murugan 🔥 ❤️ song 🎵
Post a Comment