Wednesday, May 27, 2026

ஸ்ரீபிரியாவின் முதல் படம் - Happy Birthday தெய்வபாலா!

இன்று தோழன், கோ. இராகவன் (எனும்) ஜி.ரா. அவர்களின் பிறந்தநாள்.
வழமை போல், ஒவ்வொரு May 27 அன்றும், இந்த முருகனருள் வலைப்பூவில்..
பிறந்தநாள் பாடலாக ஒரு வாழ்த்துப் பாடல் ஈட்டம்; முருகன் சினிமாப் பாடல்.

மகிழ் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், இராகவா.
Happy Birthday Ragava. Many Happy Returns of your day.

இந்தத் தமிழ்ப் பாடலிலும், ஆங்கில வாழ்த்தாக..
"Happy Birthday" என்று முருகனை நோக்கி வருகிறது, மழலை மொழியாக!




1970-80 -களின் நடிகர் AVM ராஜன், ஒரு கட்டத்தில்..
பல முருகன் படங்களில் தோன்றி நடித்துள்ளார்.
(துணைவன், தெய்வம், திருவருள், முருகன் அடிமை, முருகன் காட்டிய வழி..)

இவரது இயற்பெயர் சண்முக சுந்தரம், 'ராஜா' என்று அறிமுகம் ஆகி,
'நானும் ஒரு பெண்' எனும் AVM தயாரிப்பில் வெளியான படத்தின் மூலம்
AVM ராஜன் என்று புகழ் பெற்றார். 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில்,
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு இணையாக
தானும் அவருடன் நாதசுரம் வாசிக்கும் கதைமாந்தராகத் தோன்றினார்.


நடிகை புஷ்பலதா அவர்களைக் காதலித்து மணந்து கொண்ட பின்,
பல காலம் (25 ஆண்டுகள்) கழித்து, மனைவியின் சமயத்தை ஏற்று,
இந்த முருக பக்தர், முழு நேரக் கிறித்துவப் போதகராக மாறினார்.
இன்றும், குடும்பத்தினர் விவிலிய நற்செய்திப் போதகர்களாக உள்ளனர்.


ஆயினும், இவரது முருகன் படங்கள் மிகப் பரவலாக வெளிவந்தன.
முருகன் மீதான அச் சினிமாப் பாடல்களும், மிக்க புகழ் பெற்றன.

*மருதமலை மாமணியே முருகய்யா
*திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
*குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்
*மருதமலை மீதிலே / பழனிமலை மீதிலே
*கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது?
*மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க
*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
*கந்தன் காலடியை வணங்கினால்

என்று பல முருகன் திரைப் பாடல்கள், இவர் திரைத்தோற்றத்தில் வந்தன.
அதில் பல பாடல்களை, முருகனருள் வலைப்பூவில் முன்பே இட்டுள்ளோம்.
இன்று, 'முருகன் காட்டிய வழி' எனும் படத்திலிருந்து, மற்றுமொரு பாடல்.

இந்தப் படம், நடிகை ஸ்ரீபிரியா அவர்களின் முதல் படமும் கூட!
பின்பு, பல வெற்றிப் படங்களில் நடித்து, திரையில் தனியிடம் பெற்றார்.



படம்: முருகன் காட்டிய வழி
குரல்: S. ஜானகி
இசை: G.K. வெங்கடேஷ்
வரி: கவிஞர் கண்ணதாசன்

இயக்கம்: P. மாதவன்
நடிகர்கள்: AVM ராஜன், விதுபாலா, ஸ்ரீ பிரியா (அறிமுகம்)
------------------------------------------------------------------------------------------

முருகா வடிவேலா,
உன்னை அறிவேன் தெய்வபாலா.
சேவல் கொடியைக் கண்டேன்;
உன் தோகை மயிலைக் கண்டேன்;
நான் ஏவல் செய்ய வந்தேன்.

(Chorus: Happy Birthday Muruga
Happy Birthday to you)

(முருகா வடிவேலா)

பன்னிரண்டு கைகள் அங்கே,
பலகோடி கைகள் இங்கே.
ஈராறு கண்கள் அங்கே,
நீரோடும் கண்கள் இங்கே.
நீ உலகம் பார்த்த பிள்ளை,
நான் உன்னைத் தேடும் கிள்ளை.

(Chorus: கந்தன் பேரைச் சொல்லு
காரியங்கள் ஆகும்
வேலன் பேரைச் சொல்லு
வேதனைகள் தீரும்)

(முருகா வடிவேலா)

(Chorus: Happy Birthday Muruga
Happy Birthday to you)

பல தேவர் கண்ட துன்பம்,
பனி போல அன்று நீங்க,
விளையாட வந்த வேலா,
கடலாடும் செந்தில் நாதா!

நான் தீபம் ஏற்றுகின்றேன்,
அதில் உன்னைக் காணுகின்றேன்.

(Chorus: கந்தன் பேரைச் சொல்லு
காரியங்கள் ஆகும்
வேலன் பேரைச் சொல்லு
வேதனைகள் தீரும்)

(முருகா வடிவேலா)

(Chorus: Happy Birthday Muruga
Happy Birthday to you)




0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP