இதில், "கந்தன்" என்ற பெயர் மட்டும்.. நடுநாயகமாய்,
இலக்கியத்துக்கு இலக்கியமாகவும், மக்கள் வாழ்வியலுக்கு வாழ்வியலாகவும்,
தமிழ் ஆதிகுடி வரலாறும் + வாழ்வையும் உள்ளடக்கிய பெயர்!
இன்று தமிழில் கிடைக்கும் தொல்பெரும் ஆதிநூலான தொல்காப்பியம்..
கந்தன்/ சேயோன் என்று 2 பெயர்களையுமே காட்டும்! சேயோன் மேய மை வரை உலகமும் கொடிநிலை கந்தழி வள்ளி
கந்து= நடுகல்
முன்னோர் நினைவு போற்றும் நடுகல், தெய்வ நடுகல் மட்டுமே அல்ல!
யானை கட்டும் நடுகல், வேளாண்மை நடுகல்..
எனப் பல வகை "குத்துக்கல்"; ஒரு வகையான பற்றுக்கோடு!
யானை கட்டும் கல்லாய்ப் பயன்படுத்தும் போது
அக் கல்லையும், யானையே சுமந்து செல்லும்!
இளைப்பாறும் இடத்தில், அக்கல்லையே நட்டு, யானையும் கட்டி வைப்பர்;
தன்னைக் கட்டுண்டு வைக்கும் கல்லை, தானே சுமப்பதா? என்று யானை மறுக்குமா?:)
போலவே, நீங்கள் கந்தனைக் கட்டுப்படுத்தினாலும், அதையும் அவனே சுமப்பான்:)
இறை = அன்பு
நன்மை/ தீமை, லாப/ நட்டம், காம/ மோகம் என்ற இரட்டைக்குள் சிக்கிக் கொள்ளாது அன்பு!
ஆளை அடிக்கலாம்/ அணைக்கலாம்; ஆனால் அன்பை?
அன்பின் பயனே, அன்பு தான்!
அன்பு= அழிவிலி; அதான் இறையன்பு.. இறையை= அன்பாக மட்டுமே வைத்தது தமிழ்! பிற பரிகார Shortcutகள் இல்லை, தமிழில்!
தமிழ்க் கந்தன் வேறு! சம்ஸ்கிருத ஸ்கந்தன் வேறு!
*Sanskrit स्कन्द/ ஸ்கந்தன் = 6 முகமும் 1 ஆன Effusion கதை
*தமிழ்க் கந்தன் = "கந்து" எ. பற்றுக்கோட்டு நடுகல்!
ஒன்று போல் ஒலித்தாலும், வேர்ச்சொல் வேறு வேறு என்று அறிக! இன்று May 27 தோழன் இராகவன் பிறந்தநாள்..
மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இராகவா! நலங் கேழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இராகவா! உடல் உள்ள நலங்களொடு, தமிழன்பால்.. இன்னுமொரு நூற்றாண்டு இரு!
இன்றைய பாடலாக, ஒரு "கந்தன்" & "அன்புத்" திருப்புகழ்..
ஆனால் மேற்கு இசையில்!
ஆனால் நம்மவர்களே இசையமைத்து, மேலையர்களோடு பாடுவது! (Shamrockin Records)
Orchestra இசையில், திருப்புகழ்!
Guitar
Ukulele
Violin
Viola
Cello
Double Bass
French Horn
Trombone
Flute
Clarinet
Oboe
Basson
& Percussion
கண்டு கேட்டு, களிக்க!
பிறந்தநாள் வாழ்த்தும், வாழ்த்தி அருளுக!
சந்ததம் பந்தத் தொடராலே சஞ்சலம் துஞ்சித் திரியாதே
கந்தன் என்றென்று உற்று உனைநாளும் கண்டுகொண்டு அன்பு உற்றிடுவேனோ?