வேலன்-tines Day!
சும்மா கிண்டலுக்குத் தான்...
Valentines Day, தமிழில் எழுதும் போது வேலன்-டைன்ஸ் என்று ஆவதால்..
வேலன் யாரு? = என்-"அவன்" தானே!
அதான், என்னவனுக்கே, இந்தக் காதல் வாழ்த்தும் சொல்லீடறேன்:)
Happy Valentines Day, Muruga! Love u Honey:)
Kisses to u all over | முத்தத் திருமுழுக்கு
சிலப்பதிகாரத்தில், பெண்கள் விரும்பும் காதல்-முருகன் காட்டப் பெறுவான்;
எங்கே?
கோவலன் அறிமுகமாகும் கல்யாணப் பந்தலில்!
ஆயத்தில், கோவலன் நுழையும் போது, பெண்கள் பலரும், பண் தேய்த்த மொழியில் அவனைப் பாராட்டுறாங்க!
பார்த்தவுடனே வணங்கவல்ல முருகன் போல் இருக்கானே! நல்ல மாப்பிள்ளை-ன்னு பாராட்டு பெறும் கோவலன்!
மண் தேய்த்த புகழினான் மதிமுக மடவார் தம்
பண் தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்தும் செவ்வேள் என்று இசைபோக்கிக் காதலால்
கொண்டேத்தும் கிழமையான் கோவலன் என்பான் மன்னோ?
(சிலப்பதிகாரம் - புகார்க்காண்டம் - மங்கல வாழ்த்து)
கண்டேத்தும் செவ்வேள்
= கண்ட மாத்திரத்தில் தானாய்க் கை குவியும், மனங் குவியும் செவ்வேள்!
அதனால், "வேலன்"-டைன்ஸ் நாள் அன்று, நாம் வேலன் பாட்டு ஒன்னைப் பார்ப்போமா?
சினிமாப் பாட்டு தான்! அசூயை வேணாம்!:)
சினிமாவா இருந்தாலும், அந்த மொழியில் சிரிப்பவனும் அவனே தான்!
In Ilayaraja's husky voice & percussion of tabla rocking throughout the song!
படம்: தெய்வ வாக்கு
குரல்: இளையராஜா, ஜானகி
வரி: வாலி
இசை: இளையராஜா
வள்ளி வள்ளி என வந்தான்
வடி "வேலன்" தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான்
புதுக் கோலம் தான்
சொல்லித் தரச் சொல்லி கேட்டு - தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்ப வல்லி என்று - தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
(வள்ளி வள்ளி..)
-----------
சொல்லால் சொல்லாதது..
காதல் சுகம் சொல்லில் நில்லாதது
கண்ணால் உண்டானது..
கைகள் தொட இந்நாள் ஒன்றானது
வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய்வெடித்த வாசப்பூ
அன்புத்தேன் இன்பத்தேன் கொட்டுமா?
இந்தப்பூ சின்னப்பூ கண்ணிப்போகும் கன்னிப்பூ
வண்டுதான் வந்துதான் தட்டுமா?
என்னை மீண்டும்
கொஞ்சத் தூண்டும்
நாணல் போல தேகம் தன்னில் - நாணம் என்னம்மா?
(வள்ளி வள்ளி..)
-----------
வாங்கி அதை ஏந்தும் மன்னன் விரல்
மன்னன் சொல்லும் கவி
மங்கைக்கு அது காதல் நீலாம்பரி
அம்மம்மா அப்பப்பா இன்பம் தரும் பானங்கள்
எத்திக்கும் என்றைக்கும் தித்திக்கும்
மங்கை நீ கங்கை நீ வெண்ணிலவின் தங்கை நீ
உன்னைத் தான் என் கண்கள் சந்திக்கும்
எந்தன் ஜீவன்
கொஞ்சும் தேவன்
உன்னையன்றி வேறு, இங்கு யாரும் இல்லையே!
(வள்ளி வள்ளி..)
மண வாழ்க்கை = ஒரு "மாதுர்யமான" (மதுரமான) பயணம்!
அந்தப் பயணம் செய்யப் படித்துறையில் காத்திருக்கும்..
நல்ல பெண்களுக்கும்
கையசைத்து வழியனுப்பக் காத்திருக்கும் அம்மா-அப்பாவுக்கும்..
இந்த வேலன்-tines day, ஒரு புதுப்பக்கத்தைத் திருப்பட்டும்!
வரட்டும் வேலன்!
வள்ளி வள்ளி என வந்தான்
வடி "வேலன்" தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான்
புதுக் கோலம் தான்