ஆதிமூலன் மருகா! முருகா! ஆறுமுகக் குமரா!
ஆதிமூலன் மருகா முருகா
ஆறுமுகக் குமரா
பாதயாத்திரைக்குத் துணையாய்
பாதை காட்ட வா வா (ஆதிமூலன்)
பூரம் பூரம் பூரம் போகும்
பாதை தூரம் தூரம்
சோரும் கால்கள் சோரும் சமயம்
தோன்றும் உனது கோலம் (ஆதிமூலன்)
நோகும் பாதம் நோகும் உன்னை
நோக்க விழிகள் ஏங்கும்
வேகும் வெய்யில் கூட வழியில்
விசிறிவிட்டுப் போகும் (ஆதிமுலன்)
பச்சை மயிலும் உனக்கு ஒரு
வாகனத்தின் கணக்கு
பச்சை மலையும் உனக்கு படை
வீடு என்று வழக்கு (ஆதிமூலன்)
பச்சை இளம் புள்ள நீயோ
எங்க மனசுக்குள்ள
இச்சையோடு இருக்க அதை
ஏதுமில்ல தடுக்க (ஆதிமூலன்)
பச்சை வேட்டி கட்டி உன்னைப்
பாடி ஆடி வாறோம்
பழசும் புதுசுமாக பாட்டு
படிச்சு நடிச்சு வாறோம் (ஆதிமூலன்)
காவி வேட்டி கட்டி உன்னைக்
கருத்தில் வச்சு வாறோம்
கண்ணில் உன்னை வச்சு அருளை
இருப்பில் வச்சு வாறோம் (ஆதிமூலன்)
வீடு வீடு என்று படை
வீடு ஆறு உண்டு
நாடு முழுதும் அஞ்சா படை
வீடு இங்கு உண்டு (ஆதிமூலன்)
கூடும் கூட்டம் ஆகி உன்
கோலம் காண வாறோம்
வீடு மறந்து வாறோம் கடும்
விரதம் இருந்து வாறோம் (ஆதிமூலன்)
வண்டி கட்டி வாறோம் பெரும்
வாஞ்சையோடு வாறோம்
தண்டபாணி நாதா நீயும்
தயவு காட்ட வா வா (ஆதிமூலன்)
உன்னை நம்பி வாறோம் ரொம்ப
உறுதியோடு வாறோம்
கண்ணைத் தொறந்து பார்ப்போம் சாமி
உன்னை காண வாறோம்
வேல் வேல் முருகா வா வா முருகா
வா வா முருகா வேல் வேல் முருகா
பாடியவர்: வீரமணிதாசன்.
இயற்றியவர்: தெரியவில்லை.
7 comments:
அருமையான தேரோட்ட மற்றும் உற்சவ ஒளிப்படம்!
பாட்டு பாடுவோர், எழுதியவர் குறிப்பு கொடுங்க குமரன்!
நடுநடுவே குழந்தைகளைத் தேருக்குத் தூக்கி விபூதி வைத்து விடுவது மிகவும் அருமை! சின்ன வயசில் முருகனும் நானும் ஒரே தேர்-ல உலா வந்தது ஞாபகம் வந்துருச்சி பார்த்தவுடனேயே! :)
திருவண்ணாமலைச் சப்பரத் தேரு தான்!
//பச்சை மலையும் உனக்கு படை
வீடு என்று வழக்கு//
?
எந்த மலையைச் சொல்றாரு?
//ஆதிமூலன் மருகா//
:)))
ஓ! ஆதி மூலமானவனுக்கு மருகனா? சரி சரி!
பாடியவர் வீரமணிதாசன். இயற்றியவர் யார் என்று தெரியவில்லை இரவி.
நான் இனி மேல் தான் முழுவதுமாகப் பார்க்க வேண்டும். பாட்டை எழுதுவதில் கவனத்தைச் செலுத்தியதால் முழுவதுமாகப் பார்க்கவில்லை. பார்த்தவரையில் இந்தப் படம் மலேசியக் கோவில் திருவிழாவைக் காட்டுவதாகத் தோன்றுகிறது.
பச்சைமலைன்னு தேடிப் பார்த்தேன். கோபிசெட்டிப்பாளையம் அருகில் இருக்கிறது போல. கூகிளார் அப்படித் தான் சொல்கிறார்.
ஆமாம். ஆதிமூலம் என்று அன்று யானை அழைத்த போது வந்தவனின் மருகன் இவன் - அநாதிநாதன்.
//பாடியவர் வீரமணிதாசன்//
ஆகா! வீரமணி கண்டன் ஞாபகத்துக்கு வந்துட்டான்! அவன் பேர்ல தான் இன்னும் பாட்டு வலைப்பூ ஒன்னு கூட யாரும் தொடங்கலை! :(
//இந்தப் படம் மலேசியக் கோவில் திருவிழாவைக் காட்டுவதாகத் தோன்றுகிறது//
ஆமா, சிங்கை மாரியம்மன் கோயில்ல காவடி பூசை எல்லாம் நடக்குதே!
காவடி-ல நாமம் போடுற நல்ல பழக்கம் மலேசியாவில் கண்டேன்! :)
//அநாதிநாதன்//
ஆதி - அநாதி விளக்கம் வேணும் குமரன்!
கேட்கும்போது வைத்தீஸ்வரன் கோவில் பாதயாத்திரை நினைவு வந்துருச்சு. பாதயாத்திரைகளில் பாட நல்ல பாடல். நன்றி குமரா.
ஆதி - முதல்
அநாதி - முதலற்றவன்
சரி தானா இரவி? மேல் விளக்கம் உங்கள் குருநாதரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். :-)
நன்றி கவிநயா அக்கா.
Post a Comment