சீர்காழி - தங்க மயம் முருகன் சன்னிதானம்!
இந்தச் செவ்வாயில், வெங்கலக் குரலில்...அதிகம் அறிந்திராத பாடல் ஒன்னு!
முருகனின் உடம்பில் என்னென்ன இருக்கு? = ஒவ்வொருவரும் ஒன்னொன்னு சொல்வாங்க! திருநீறு, சிவப்பு, அழகு, இளமை, நகை, மாலை, அலங்காரம்-ன்னு!
ஆனால்....ஆனால்...ஆனால்.....அதெல்லாம் அப்புறம் தான்!
என் முருகனின் உடம்பெங்கும் கொட்டிக் கிடப்பது....நான் தான்!
அவனை அணு அணுவாக....
* மனத்தாலும்
* கையாலும்
* கண்ணாலும்
* மூக்காலும்
* இதழாலும் ஏந்தி ஏந்தி, ஏங்கி ஏங்கி....
அவன் திருமேனித் தீண்டல் என்பதே வாழ்வாகிப் போனதோ! அவன் தோல் என்பதே நானாகிப் போனதோ!
அவன் தோளில் வேல் இருக்க, என் தோளில் ஏன் ஏதோ உரசுகிறது? அவன் அபிஷேகத்தில் கரைய, எனக்கு ஏன் குளிர்கிறது?
அவன் சிலிர்க்கும் போது, எனக்கு ஏன் கூச்செறிகிறது? அவன் முந்துகையில் எனக்கு ஏன் வியர்க்கிறது?
ஓ....என் உடலே அவன் சன்னிதானம் ஆகிப் போனதோ!!
தங்க மயம் முருகன் சன்னிதானம்!
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்!
சீர்காழிக்கே உரிய முருகக் குரலில்...பாட்டைக் கேட்டுக்கிட்டே படிங்க!
தங்க மயம் முருகன் சன்னிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்!
அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்
அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்!!
(தங்க மயம் முருகன்)
எங்கும் மனம் பரப்பும் மாலைகளே!
அவன் ஈராறு கைகளாம் தாமரையே!
திங்கள் முகம் அரும்பும் புன்னகையே!
குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே!
(தங்க மயம் முருகன்)
கருணை மழை பொழியும் கருவிழிகள் - அந்தக்
காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்!
அமுதம் ஊறி வரும் திருவடிகள் - அவை
அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்!
(தங்க மயம் முருகன்)
அவன் தேகத்தில்...
முதல் பத்தியில் மாணிக்கம், புஷ்பராகம்-ன்னு மணிகளைச் சொன்னார்! - இதைக் காசு கொடுத்து வாங்கிடலாம்!
அடுத்த பத்தியில் தாமரை, மாலை-ன்னு மலர்களைச் சொன்னார்! - இவை இன்றிருக்கும், நாளை வாடி விடும்!
அதனால் தான், அடுத்து....இதெல்லாம் சொல்லாது,
அவன் உடல் உறுப்"பூ"க்களைச் சொன்னார்!!!
அந்த உறுப்"பூ"க்கள் வாடுமோ? என்னைக் கூடுமோ? நம் உறவைப் பாடுமோ? மனம் அவனையே நாடுமோ?
கருணை மழை பொழியும் கரு விழிகள் - அந்தக்
காட்சியில் தோன்றுவதோ பெரு வழிகள்!
தங்க மயம் முருகன் சன்னிதானம்!
அவன் மேனியே என் சன்னிதானம்!
அவன் கரு விழியே, என் பெரு வழி!
அவன் உறுப்"பூ"வே, நான் சூடும் பூ!
உன் நுனி விரல் கொண்டு ஒரு முறை தீண்ட, முருகா...நூறு முறை பூத்திருப்பேன்!
31 comments:
/கருணை மழை பொழியும் கருவிழிகள் - அந்தக்
காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்!
அமுதம் ஊறி வரும் திருவடிகள் - அவை
அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்!
/
என்னுள்ளே அவன் வந்து வாழ வேண்டும்!
என் சிந்தையெல்லாம் அவனே ஆள வேண்டும்!
என் மூச்சும், என் பேச்சும் அவன் ஆக மாற வேண்டும்!
என்னுடனே அவன் இருந்து அருள வேண்டும்!
அருமையான இடுகை..முருகனை இந்தளவுக்கு என் மனதில் இருத்தி இரசித்ததில்லையே :(
@ KRS : உங்களை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது...
என் முருகன் மீது உங்களுக்கு ஏன் இதனை கூடல்????????
வரிக்கு வரி எத்தனை கொஞ்சல்.... ( எத்தனை வில்லங்கம்?????????? )
ஒட்டு மொத்தமாக நீங்களே எங்கள் முருகனை கூடி குழைந்து தழுவி அனுபவித்தால் ( அறிவில், மொழியில் ) ஏழை பாழையான
நான் (நாங்கள்) என் செய்வது?????????????
//என் முருகனின் உடம்பெங்கும் கொட்டிக் கிடப்பது....நான் தான்!
அவனை அணு அணுவாக....
* மனத்தாலும், கையாலும், கண்ணாலும், மூக்காலும், இதழாலும் ஏந்தி ஏந்தி, ஏங்கி ஏங்கி....
அவன் திருமேனித் தீண்டல் என்பதே வாழ்வாகிப் போனதோ! அவன் தோல் என்பதே நானாகிப் போனதோ //
முருகாஆஆஆஆஆஅ.... இத கேக்க யாரும் இல்லையாயாயாயாயாயாயா...
@KRS- நீங்க New Yorkல ஊத்தற ஜொள்ளு New Jersey வரையும் வழியுது... நாளுக்கு நாள் ஈரப்பதம் ஏறுது...
இது எல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. சீக்கிரம் அந்த (தும்பையூர் கொண்டி வாங்கியது போன்று) சீட்டு கொடுத்து அனுப்புங்க, நானு எங்க ஊருக்கே (Madras) போறேன் ...
நீங்க பண்ணற அலும்பு தங்க முடியல சாமி.. நானு எங்க ஊருக்கே போறேன் ...
//முருகாஆஆஆஆஆஅ.... இத கேக்க யாரும் இல்லையாயாயாயாயாயாயா...
@KRS- நீங்க New Yorkல ஊத்தற ஜொள்ளு New Jersey வரையும் வழியுது... நாளுக்கு நாள் ஈரப்பதம் ஏறுது...//
:)
முருகா....
என்ன பிரசாத், ஏதாச்சும் தப்பாச் சொல்லிட்டேனா? முருகன் இறைவன் என்பதால் இப்படி எழுதக் கூடாதா?
பொதுவா என் பழைய பதிவெல்லாம் கூட, முருகன்-ன்னா இப்படித் தான் இருக்கும்! பெருமாள்-ன்னாத் தான் இறைவன், ஆலயத்தில் தமிழ் ஏற்றம், மோட்சம்-ன்னு எல்லாம் வரும்!
அங்கே மட்டும் ஒசத்தியா எழுதற, இங்கே அப்படி எழுத மாட்டேங்குற?-ன்னு என் ஆருயிர்த் தோழன் உட்பட என்னிடம் சண்டை பிடித்துள்ளான்! :)
ஆனால் நான் என்ன செய்ய? முருகன்-ன்னு வரும் போது, இறைவன்-ன்னு ஒரு பெருமையே வராமல், வெறும் காதலே, காதலே, காதலே...மிஞ்சுகிறது!
@பிரசாத்
நீங்க NJ-வா? ஒரு மின்னஞ்சல் அனுப்பங்களேன்! முகவரி Profile-இல் உள்ளது!
//வரிக்கு வரி எத்தனை கொஞ்சல்.... ( எத்தனை வில்லங்கம்?????????? )//
வில்லங்கமா?
வேலங்கம்-ன்னு சொல்லுங்க! :)
//ஒட்டு மொத்தமாக நீங்களே எங்கள் முருகனை கூடி குழைந்து தழுவி அனுபவித்தால் ( அறிவில், மொழியில் ) ஏழை பாழையான
நான் (நாங்கள்) என் செய்வது?????????????//
:)
முருகனை அனுபவிக்க அறிவும் மொழியும் கூடத் தேவையில்லை!
அவனே அவனே அவனே என்றே கூடத் தேவை!
பாவனை அதனைக் கூடில்
அவனையும் கூட லாமே (மாறன் என்னும் நம்மாழ்வார்)
//அருமையான இடுகை..முருகனை இந்தளவுக்கு என் மனதில் இருத்தி இரசித்ததில்லையே :(//
இனியவள் புனிதா, நீங்களுமா பிரசாத் கட்சி? :)
//என் மூச்சும், என் பேச்சும் அவன் ஆக மாற வேண்டும்!//
எதிர்ப்பாட்டு, எசப்பாட்டு சூப்பர் சிபி அண்ணா!
உம்....நான் தான் கொஞ்சம் வேற மாதிரி யோசிச்சிடறேன் போல!
என் மூச்சாய் அவன் மாறணுமா? ஐய்யோ வேணாம்! என் மூச்சு நின்னுடிச்சின்னா? அப்போ அவன் கதி?
அவன் மூச்சாய் நான் மாறி விடுகிறேன்!
நிமிடத்துக்கு இருபது முறை அவன், என்னை இழுத்தும் இட்டும்,
அவனுக்குள் நான் ஏறியும் இறங்கியும்,
அவன் உடம்பு முழுக்கக் காற்றாய், இரத்தமாய் ஓடி ஓடி..அவனுக்குள்ளேயே அவனைத் தேடித் தேடி...ஏய் முருகா, முருகாஆஆஆ!
@ KRS இந்த பதிவை படிச்சதிலிருந்து எனக்கு எந்த வேலையும் ஓடலை
உங்க மன (Bhavam ) பாவத்தை நினைக்கும் போது முருகன் என்னை காரி காரி துப்புற மாதிரி இருக்குது
முடியலை.. வலிக்குது... அழுதுடுவேன்...
/என் மூச்சு நின்னுடிச்சின்னா? அப்போ அவன் கதி?/
என் கதி, உன் கதி, நம் கதி அனைத்தும்
அவன் வகுக்கும் விதி!
அப்படியிடுக்க அவன் கதி என்னவென்று நாம் கவலை கொள்வதா?
நம் கதியே அவனென்று சரணாகதி அடைந்திடவல்லவா வேண்டும்!
//உங்க மன (Bhavam ) பாவத்தை நினைக்கும் போது முருகன் என்னை காரி காரி துப்புற மாதிரி இருக்குது
முடியலை.. வலிக்குது... அழுதுடுவேன்...//
ஹைய்யய்யோ...Sorry Prasad, Sorry!
முருகன் காரி எல்லாம் துப்பவே மாட்டான்! ஆசையா, வெற்றிலை மென்னு, பாதி கடித்து மீதி தருவான்! சேயோன் கடித்துத் தந்ததால் இன்னும் சிவப்பாகும்! Enjoy! :) வலிக்கவே வலிக்காது! :)
அருணையடிகள் ஒரு வழியா மெளனம் கலைச்சாரு! :)
//அப்படியிடுக்க அவன் கதி என்னவென்று நாம் கவலை கொள்வதா?//
ஆமாம் சிபி-ண்ணா! அவனைப் பற்றிக் கவலைப்படவும் ஒரு ஜீவன் வேணும்-ல்ல?
பாவம், எல்லாரும் அவனிடம் போய் கதியா நின்னா, எத்தனை-ன்னு தான் என்னவனும் சுமப்பான்? அதான்! அவனுக்கும் ஒரு மெல்லிய தென்றலாய், வருடிக் கொடுக்க...
என் மூச்சு நாளைக்கு கூட நின்னு போகும்! அப்போ என்னவன் கதி?
அவனை அம்போ-ன்னு எல்லாம் விட்டுவிட மனசே வராது! அதான் உவமையில் கூட, அவன் என் மூச்சாய் இல்லாமல், நானே அவன் மூச்சாய் மாறி விட்டால், மூச்சு நிற்கும் பிரச்சனையே இல்லை பாருங்க! :)
Muruga...I cannot afford to lose u at any cost! Even If I am lost, I will NOT lose you! :)
KRS அவர்களே! மன்னிக்கவும். உணர்ச்சிவயப்பட்டு பின்னோட்டத்தில் அவை அடக்கம் மீறி எழுதிவிட்டான்..
(புலமபிவிட்டேன் )
இது வரை பக்தி இலக்கியத்தை படிக்கும்போதும்; பாடும்போதும்; கட்டுரை வாசிக்கும்போதும்
வியந்து இருக்கிறேன்,
உருகி இருக்கிறேன்,
அழுது இருக்கிறேன்,
ஆடி இருக்கிறேன்
ஆனால் இன்று தான் முதல் முதலில் என்னை மீறி பொறாமை பட்டு இருக்கிறேன்!!!!!
//என் முருகனின் உடம்பெங்கும் கொட்டிக் கிடப்பது....நான் தான்!//
//அவன் திருமேனித் தீண்டல் என்பதே வாழ்வாகிப் போனதோ! அவன் தோல் என்பதே நானாகிப் போனதோ!//
(நல்ல வேலை நீங்கள் அருகில் இல்லை. இன்று மட்டும் நீங்கள் என் அருகில் இருந்திருந்தால் சக்காளத்தி சண்டையே போட்டிருப்பேன் :-) )
//அவன் தோளில் வேல் இருக்க, என் தோளில் ஏன் ஏதோ உரசுகிறது?//
//அவன் மேனியே என் சன்னிதானம்!
அவன் உறுப்"பூ"வே, நான் சூடும் பூ!//
உங்களை போல் இறைவனை அனுபவிக்க நான் எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ?????
எத்தனை யுகங்கள் ஆகுமோ ? நான் அறியேன் ???????????
நீவீர் நீடூழி வாழிய!
நின் பக்தி ஓங்குக !
பிரசாத்!
/உங்களை போல் இறைவனை அனுபவிக்க நான் எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ?????
எத்தனை யுகங்கள் ஆகுமோ ? நான் அறியேன் ???????????
/
கந்தன் எல்லோருக்கும்
சொந்தமானவன்! கிட்டே போக முடியுமோன்னு நினைச்சி சில பேர் தூர இருந்து ரசிக்கிறோம்! சில பேரு தழுவி ரசிக்கிறார்கள்! நாம எடுத்துக்குற உரிமையைப் பொறுத்தது அது!
"அள்ளி அணைத்திடவே ஆசை பெருகுதைய்யா!" ன்னு! ஆசைப் படும் அனைவரையும் அவனே வந்து தழுவிக் கொள்வான்! உங்களையும்தான்!
(என்ன கே.ஆர்.எஸ் சரிதானே! )
//(என்ன கே.ஆர்.எஸ் சரிதானே! )//
அருணையடிகள் சொன்னா அருணையே சொன்னாப் போல! :)
//Prasad said..
KRS அவர்களே! மன்னிக்கவும். உணர்ச்சிவயப்பட்டு பின்னோட்டத்தில் அவை அடக்கம் மீறி எழுதிவிட்டான்..
(புலமபிவிட்டேன் )//
என்ன பிரசாத், கொஞ்சம் கூட மரியாதையே இல்லாமல் "அவர்களே"-ன்னு எல்லாம் சொல்றீங்க! ஒழுங்கு மரியாதையா, டேய் ரவி or krs-ன்னே கூப்புடுங்க! :)
மன்னிப்பா? உங்க பின்னூட்டத்தில் தான் எத்தனை சுவை? சக்களத்திச் சண்டையா? ஹா ஹா ஹா! பார்த்தீங்களா? நீங்களும் அனுபவித்து, பாவனையோடு தான் இருக்கீங்க! அதான் என் கூடச் சண்டை போடுவேன்-ன்னு சொல்லி இருக்கீங்க! :)
//உங்களை போல் இறைவனை அனுபவிக்க நான் எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ?????//
:)
அதெல்லாம் ஒன்னுமே இல்லை!
நீங்க சொல்லித் தான், நான் அவனை அனுபவிக்கிறேன்-ன்னே எனக்கே தெரிய வருது! நான் ஏதோ, என் இயல்பு-ன்னு தான் இப்படியெல்லாம் எழுதுகிறேன்! இயல்பான ஒன்னை அப்படியே தானே எழுத முடியும்! அதான்! வீட்டில் பார்த்தால் தெரியும், முருகன் சிலை பூசையறையில் இருக்காது, என் கூடவே இருக்கும்! :)
முன்பே சொன்னது தான்...
என் பழைய பதிவெல்லாம் கூட, முருகன்-ன்னா இப்படித் தான் "சாதாரணமா"த் தான் இருக்கும்! பெருமாள்-ன்னாத் தான் இறைவன், மோட்சம்-ன்னு எல்லாம் வரும்!
அங்கே மட்டும் ஒசத்தியா எழுதற, இங்கே அப்படி எழுத மாட்டேங்குற?-ன்னு என் ஆருயிர்த் தோழன் என்னிடம் வாய்ச்சண்டை/கைச்சண்டையே பிடித்துள்ளான்! :)
ஆனால் என்ன செய்ய? என் இயல்பு, முருகனையும் இறைவனாக ஆக்காமல், என் இயல்பாகவே ஆக்கி விட்டது!
எந்தக் காதலி/மனைவியாவது காதலனை ஊரறியப் புகழ்வாளா? போடா பொற்க்கி-ன்னு சிணுங்குவா! அதான்! :))
http://iniyathu.blogspot.com/2010/08/muruga-vaaranam-aayiram.html
//வியந்து இருக்கிறேன்,
உருகி இருக்கிறேன்,
அழுது இருக்கிறேன்,
ஆடி இருக்கிறேன்
ஆனால் இன்று தான் முதல் முதலில் என்னை மீறி பொறாமை பட்டு இருக்கிறேன்!!!!!//
I like this very much! :)
Confession of Prasad! :)
டேய் முருகா...பாவம் பிரசாத்
அடியவர் இச்சையில் எவை எவை உற்றன
அவை தருவித்தருள் பெருமாளே!
/பாவம், எல்லாரும் அவனிடம் போய் கதியா நின்னா, எத்தனை-ன்னு தான் என்னவனும் சுமப்பான்? அதான்! அவனுக்கும் ஒரு மெல்லிய தென்றலாய், வருடிக் கொடுக்க/
கண்ணனை ஈன்ற யசோதையின் பரிவைப் பார்க்கிறேன் உங்க உருவத்தில்!
@KRS வெட்கத்தை விட்டு சீர்மல்கும் சென்னை பேச்சுத்தமிழில் பச்சையாக சொல்வதானால்
உங்களுடைய பதிவு, நான் ஓரமா நின்னு sight அடிச்சிட்டு இருக்குற super figureஐ, நீங்க வந்து மடக்கி தள்ளிட்டு போரா மாதிரி இருந்துது....
இன்னும் கொஞ்சம் நாகரீகமா சொல்லனும்னா
"அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்ஞ்ஞ்சரத கேட்டேளா? ன்னு முருகன்
என்னை பாத்து வெடுக்கிட்டு கேக்குரா மாதிரி இருந்துது....
அதான் Overஆ புலமபிவிட்டேன்.
நல்லா மனசை பிழியராமதிரி எழுதுறீங்க நீங்க ... Hats off.
ஒரு வேண்டுகோள் நீங்கள் திருமுருகாற்று படையை தொடர் பதிவாய் போடவேண்டும்
ஆனால் ஒன்று இந்த பதிவில் நீங்கள் உங்கள் முழு உயரத்தையும் (5.11 Feet) கொண்டு முருகன் முன்னாள் நின்று மறைக்கக்கூடாது
"கூகூகூடிடிடி" இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் மாதிரி எங்களுக்கு முருகனை காட்ட வேண்டும்.
(இன்னும் பொறாமை குணம் எனக்கு போகலை )
என்னவாச்சு அருணையடிக்கு? முதல் பின்னூட்டத்தில் ஒரு Profile Pic...இப்போ வேற ஒரு Profile Picஆ மாறிடுச்சே! :)
/என்னவாச்சு அருணையடிக்கு? முதல் பின்னூட்டத்தில் ஒரு Profile Pic...இப்போ வேற ஒரு Profile Picஆ மாறிடுச்சே! :)
/
:))
என்ன ஆச்சு சிபி அண்ணாவுக்கு? ஒத்தைச் சிரிப்பு? முன்ன இப்படித் தான் என் ஏதோவொரு பதிவில் அருணையடி-ன்னு பேரே மாறிச்சி! இப்போ போட்டோவும் மாறிச்சி! எனக்கு பயமா இருக்கு! :)
// Prasad said...
@KRS வெட்கத்தை விட்டு சொல்வதானால்
உங்களுடைய பதிவு, நான் ஓரமா நின்னு sight அடிச்சிட்டு இருக்குற super figureஐ, நீங்க வந்து மடக்கி தள்ளிட்டு போரா மாதிரி இருந்துது...//
:)
முருகா! முருகா! யாருக்கும் இப்படி "பொறாமை" வராமல், அதே சமயம் ஆவிக்கு காப்பாய், ஊழி தோறும் உனக்காகவே, "உன் ஆசை"க்காகவே இந்த ஜீவனை வைத்துக் கொள்!
//உங்கள் முழு உயரத்தையும் (5.11 Feet)//
ஏய்...என் உயரம் உங்களுக்கு எப்படித் தெரியும்? Orkut? நான் இப்பல்லாம் அங்கே போவது கூட இல்லையே!
//ஒரு வேண்டுகோள் நீங்கள் திருமுருகாற்று படையை தொடர் பதிவாய் போடவேண்டும்...
"கூகூகூடிடிடி" இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் மாதிரி எங்களுக்கு முருகனை காட்ட வேண்டும்//
:)
கந்தர் அலங்காரத்தில் அப்படித் தானே இருக்கும்! சக அடியார்களோடே கூடி இருந்து...
எப்பவாச்சும் தான், இப்படி என் குட்டு வெளிப்பட்டுரும்! :)
திருமுருகாற்றுப்படை, என் இன்னுயிர்த் தோழன் இராகவன் எழுதுவதாய் இருந்து, நின்று விட்டது, இனியது கேட்கின் என்னும் வலைப்பூவில்! நானும் அங்கு தான் இருக்கிறேன், தொடர முயல்கிறேன்!
ஆற்றுப்படை என்பதே, சக அடியார்களை அவனிடம் ஆற்றுப்படுத்துவது தானே! பொறாமைப்பட வேண்டாம்! :) நிச்சயம் கூடி இருந்து குளிரும்! :)
//என் உயரம் உங்களுக்கு எப்படித் தெரியும்? Orkut? நான் இப்பல்லாம் அங்கே போவது கூட இல்லையே!//
Orkut எல்லாம் இல்லை. உங்களை மாதிரி தணிக்கையில் இருந்தவன் தான் நான். புள்ளி வெட்சா கோடு என்ன ரோடே போடுவேன் :-)
எனக்கு பிடிச்ச பாடல்! நன்றி கண்ணா.
பின்னூட்டங்கள் எல்லாம் சூப்பர் :) குமரனுக்குத்தான் எத்தனை காதலிகள்! ஆனால் எனக்கு அவன் எப்பவுமே க்குட்டிச் ச்செல்லக் குழந்தைதான்! :)
/Orkut எல்லாம் இல்லை. உங்களை மாதிரி தணிக்கையில் இருந்தவன் தான் நான். புள்ளி வெட்சா கோடு என்ன ரோடே போடுவேன் :-)/
கோடு போட்டுட்டு ரோடு போட்டேன்னு சொல்றவங்களை கண்டு பிடிக்கிறங்களும் தணிக்கையில் இருப்பவர்கள்தான்! :)
//கோடு போட்டுட்டு ரோடு போட்டேன்னு சொல்றவங்களை கண்டு பிடிக்கிறங்களும் தணிக்கையில் இருப்பவர்கள்தான்! :)//
ha ha
This particular comment is from pithaananda and not aruNaiyadi! :)
/நானும் அங்கு தான் இருக்கிறேன்/
அப்பப்போ இங்கயும் வாங்க என்று தணிகையில் இருப்பவன் அழைக்கிறான் போல! :)
@அருணையடிகள்
//அப்பப்போ இங்கயும் வாங்க என்று தணிகையில் இருப்பவன் அழைக்கிறான் போல! :)//
இராகவன் இருக்கும் இடம் தணிகை தான்! அதனால் இனியது கேட்கின் வலைப்பூவே என் தணிகை!
அப்பப்போ இங்கயும் வரவா? ஆகா! முடிந்த வரை ஒவ்வொரு செவ்வாயும், முருகனருளை மிஸ் பண்றதில்லீன்னா! :)
/இராகவன் இருக்கும் இடம் தணிகை தான்! அதனால் இனியது கேட்கின் வலைப்பூவே என் தணிகை/
அப்போ இராகவன் தனி கை இல்லைன்னு சொல்லுங்க! :))
Post a Comment