தளிர்போலே நடைநடந்து...
முருகனருளில் இடமளித்த ச்செல்லக் குழந்தைக்கும், குழுவினருக்கும், மனமார்ந்த நன்றிகளுடன்...
தளிர்போலே நடைநடந்து கந்தனவன் வருவான்
குளிர்பொழியும் நிலவணிந்த அன்னைமடி அமர்வான்
வேலெடுத்து வினையறுத்து வேதனைகள் களைவான்
கால்பிடித்த பக்தர்களைக் காக்கஓடி வருவான்
ஆடும்மயில் மீதினிலே தானுமாடி வருவான்
பாடுங்குயில் போலடியார் போற்றுவதில் மகிழ்வான்
சந்தமுடன் செந்தமிழைப் பாடிடவே அருள்வான்
சந்ததமும் பணிந்திருந்தால் சக்திவேலன் மகிழ்வான்
தந்தைக்கு உபதேசம் செய்வித்தான் அவனே
சிந்தைக்குள் ஒளியானான் ஆடல்சிவன் மகனே
அவன்பேரைச் சொல்லிடுவோம் அன்புடனே தினமே
அவனடிகள் நினைவொன்றே தரும்நமக்கு பலமே!
--கவிநயா
9 comments:
:)
வருக கவிநயா வருக!
முருக கவிகளைத் தருக!
- அவன் சார்பாக, இவன்
(அப்படியே அக்காவைப் பேரு சொல்லிக் கூப்பிட்டாப் போலவும் ஆச்சு! :)))
அக்காவைப் பேர் சொல்லிக் கூப்பிட அம்புட்டு ஆசையா? :) நல்லா கூப்பிடலாம், தப்பே இல்லை!
//முருக கவிகளைத் தருக!//
அவன் தந்தால் நானும் தரேன்!
நன்றி கண்ணா :)
பக்தி கவிதை மிக அருமை.... அதுவும் வரிகளின் கடைசி (இயைபு) சந்தம் மிக அருமை.... பாராட்டுக்கள்.
:-)
ரசித்தமைக்கு மிக்க நன்றிங்க சி.கருணாகரசு.
புன்னகைக்கென்ன பொருள் குமரா? :)
//ஆடும்மயில் மீதினிலே தானுமாடி வருவான்
பாடுங்குயில் போலடியார் போற்றுவதில் மகிழ்வான்
சந்தமுடன் செந்தமிழைப் பாடிடவே அருள்வான்
சந்ததமும் பணிந்திருந்தால் சக்திவேலன் மகிழ்வான்
///
M<<<<<<<<<<<<<<<<<<<<<<
அழகான பாடல் கவிநயா.
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
:)
வருக கவிநயா வருக!
முருக கவிகளைத் தருக!
- அவன் சார்பாக, இவன்
(அப்படியே அக்காவைப் பேரு சொல்லிக் கூப்பிட்டாப் போலவும் ஆச்சு! :)))
January 06, 2011 11:26 PM
//////
நானும் என் முருகனுக்கு ஒரு பாடல் இடலாமா தம்பி அவர்களே?:)
நன்றி அக்கா!
/நானும் என் முருகனுக்கு ஒரு பாடல் இடலாமா தம்பி அவர்களே?:)
/
என்ன இப்படியொரு கேள்வி! முருகனடியார்களின் பக்திப் பாடல்களுக்காகத்தான் இத்தளமே!
தாராளமா பாடுங்க ஷைலஜா அக்கா!
Post a Comment