சரவணப் பொய்கையில் நீராடி...முருகப் பாவை நோன்பு!
மார்கழி மாதத்தை "நீராடல்" மாதமாகவே சொல்வது வழக்கம்!
இந்த மார்கழி-க்கு மாதவிப் பந்தலில், மார்கழிப் பதிவுகள் ஏதுமில்லை! என்றாலும் முருகனருளில் ஒரு மார்கழிப் பாட்டு - "நீராடல்" பாட்டு, இதோ அளிக்கிறேன்!
இது பலரும் அறிந்த பாட்டு! ஆனால் முருகனருளில் இது வரை வராதது வியப்பிலும் வியப்பே! சிபி அண்ணா, இராகவன் போன்ற முருக அன்பர்கள் இங்கே கோலாச்சிய காலத்தில் கூட, இந்தப் பாட்டு எப்படி மிஸ் ஆனது-ன்னு தான் தெரியலை! :)
அதனால் என்ன? இப்போது குமரன் அண்ணா கோலோச்சும் காலத்தில் வந்ததாக இருக்கட்டும்! :)
இந்தப் பாடல் ஒரு அதிகாலைப் பாடல்!
அதுவும் சுசீலாம்மா-வின் Humming-ஓடு தொடங்கும் அழகிய பாடல்!
அப்படியே நியூயார்க்கில் உள்ள முருகனின் காதலி...தன் மனசில் உள்ளதையெல்லாம், இதமாகப் பதமாகக் கொட்டுவது போலவே இருக்கும்! :)
சரவணப் பொய்கையில் நீராடி
"துணை தந்தருள்" என்றேன் முருகனிடம்! = பாவை நோன்பு!
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணனலே தந்து வைத்தான் ஆறுதலை!! = பாவைக்கு அருளல்!
Youtube வீடியோ கிடைக்கவில்லை! என் கிட்ட இருந்த பழைய சிடி-யை, Kates Video Cutter-இல் வெட்டி ஏத்தியுள்ளேன்! தரம் சுமாராத் தான் இருக்கும்! சொல்ப அட்ஜஸ்ட் மாடி! :) கேட்டுக்கிட்டே படிங்க!
சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்!
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்!!
(சரவணப் பொய்கையில் நீராடி)
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை!
இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை
கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை!!
(சரவணப் பொய்கையில் நீராடி)
நல்லவர் என்றும் நல்லவரே!
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே!!
நல்ல இடம் நான் தேடி வந்தேன்
அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்!!
(சரவணப் பொய்கையில் நீராடி)
படம்: இது சத்தியம்
இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடியவர்: பி.சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இதுல ஒரு சிறப்பு என்ன-ன்னா, மருந்துக்குக் கூட முருகன் படமோ, கோயிலோ பாட்டில் தென்படாது!
குளித்துக் கொண்டே பாடுவதோடு சரி! வெறும் உள்ளத்து உணர்ச்சி மட்டுமே! - அதான் எனக்கு மிகவும் பிடிச்சிப் போச்சி!
நீங்களே சொல்லுங்க, காதலி என்னைக்காச்சும் தன் காதலனை ஊர் அறிய புகழ்ந்து எழுதி இருக்காளா? எப்பமே பொறந்த வீட்டுப் பேச்சு தான் ஜாஸ்தியா இருக்கும்!
ஆனா, அவனுக்கு-ன்னு ஒன்னு-ன்னா, அப்போ மட்டும் பதறிப் போய் ஓடியாருவா! மத்தபடி எப்பமே அவனோடு மோதலோடு கூடிய காதல் தான்!
அந்தக் காதலின் ருசியே ருசி! கண்ணாலம் ஆயிருச்சி-ன்னா இப்படியெல்லாம் இருக்க முடியாதே! புகுந்த வீடு வந்துருமே! :))
சரவணப் பொய்கையில் நீராடி
"துணை தந்தருள்" என்றேன் முருகனிடம்!
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணனலே தந்து வைத்தான் ஆறுதலை!!
முருகா - இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்!!
என் கொங்கை நின் அன்பர் அல்லால் தோள் சேரற்க!!
9 comments:
அழகான பாடல்...இனிமையான சுசீலாவின் குரல்! இதைப்
பாவை நோன்புப்பாடலாய் ரவி சிந்தித்து எழுதியதும் அருமைதான்!
இந்த பாட்டு ஏற்கனவே இங்கே இருக்கிறது என்று நினைத்தேனே.
கோலோச்சுதல்ன்னா என்ன இரவி? இந்த பக்கமே திரும்பிப் பார்க்காம இருக்கிறதா? :-)
ஆமாம் குமரன்! :)
திரும்பி எதுக்குப் பாக்கணும்? நேராவே பார்க்கவல்ல இந்தச் சபையில் நீங்க தானே மன்னவன்? :) ஏன்னா உங்க ஒருத்தருக்குத் தான் இங்கன முருகன் பேரு! ஸோ, நீங்களே கோலோச்சறீங்க! :)
மத்தவங்க எல்லாம் இராகவ, கண்ண-ன்னு மாற்றார்கள்!
நீங்கள் ஒருவரே மண்ணின் மைந்தன்! :)
ஓச்சுதல்-ன்னா என்ன குமரன்?
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி-ன்னு கோதை சொல்லுவா!
நீங்க கோல்-ஓச்சினீர்களா, கால்-ஓச்சினீர்களா? :)
//குமரன் (Kumaran) said...
இந்த பாட்டு ஏற்கனவே இங்கே இருக்கிறது என்று நினைத்தேனே//
நானும் அப்படித் தான் நினைச்சி தேடிப் பார்த்தேன்! "gira"-ன்னு லேபிள்-ல்ல கூட கிடைக்கலை! சரி http://youtube.com/gragavan ல்ல போய்ப் பார்த்தா, அங்கேயும் இந்தப் பாட்டு இல்ல! ஒரே வியப்பு! ஒரே வழி, என் கிட்ட இருக்கும் சிடியில் இருந்து வலையேத்துவது தான்-ன்னு ஏத்திட்டேன்! பாவை நோன்பு-க்குப் போட்டே ஆகணும்-ன்னு என் கவலை எனக்கு! :)
//ஷைலஜா said...
இதைப் பாவை நோன்புப்பாடலாய் ரவி சிந்தித்து எழுதியதும் அருமை தான்!//
என்னக்கா, டகால்ட்டி-ன்னு சொல்லாமச் சொல்லுறீங்களா? :)
ஏன்? என் முருகன் மேல பாவை நோன்பு இருக்கக் கூடாதா என்ன?
//என்னக்கா, டகால்ட்டி-ன்னு சொல்லாமச் சொல்லுறீங்களா? :)//
அடடா, வித்தியாசமா அழகா சிந்திக்கிறீங்கன்னு சொல்றாங்க :) compliment 'பா!
//அழகான பாடல்...இனிமையான சுசீலாவின் குரல்! இதைப்
பாவை நோன்புப்பாடலாய் ரவி சிந்தித்து எழுதியதும் அருமைதான்!//
நானும் அதையே ரிப்பீட்டிக்கிறேன் :)
//கவிநயா said...
//என்னக்கா, டகால்ட்டி-ன்னு சொல்லாமச் சொல்லுறீங்களா? :)//
அடடா, வித்தியாசமா அழகா சிந்திக்கிறீங்கன்னு சொல்றாங்க :) compliment 'பா!
////
தங்கைக்குப்புரிகிறது தம்பிக்குப்புரியல! என்ன செய்றது ?:)
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஓச்சுதல்-ன்னா என்ன குமரன்?
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி-ன்னு கோதை சொல்லுவா!
நீங்க கோல்-ஓச்சினீர்களா, கால்-ஓச்சினீர்களா
//
<<<<>>>>>
கோதையை இங்கயும் விடமாட்டீங்களா?:)
Post a Comment