Happy New Year! சிந்தனை செய் மனமே!
அனைவருக்கும் & முருகனருள் வலைப்பூ நேயர்களுக்கும்...,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)
Wish You All A Very Happy New Year-2011புத்தாண்டில், "நிம்மதியான சந்தோஷங்கள்", உங்களைப் பூப்போலச் சூழட்டுமென என் முருகனிடம் சொல்லிக் கொள்கிறேன்! :)
அது என்ன "நிம்மதியான" சந்தோஷம்? :)
மனசுக்கு நிம்மதி இருந்தாலே, பாதி சந்தோஷம் வந்துரும்! மீதி சந்தோஷம், நாம் தேடி அடைஞ்சிக்குவோம்! என்ன சொல்றீங்க? :)
சந்தோஷம்-மகழ்ச்சி என்பதால், புத்தாண்டு அன்று ஒரு மகிழ்வான பாடலைப் பார்ப்போமா? அம்பிகாபதி லவ் ஸ்டோரி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்! இன்னிக்கி அந்தப் படத்தில் இருந்து அருமையான ஒரு முருகன் பாட்டு, மருகனருள் வலைப்பூவில்! - சிந்தனை செய் மனமே!
ஒருத்தர் சும்மா ஏதாச்சும் நம்மளைக் கேட்டுக்கிட்டே இருந்தா, சும்மா "னை-னை" ங்காதே என்று சொல்லுவோம்ல? இந்தப் பாட்டில் பாருங்கள், "னை-னை" என்றே வருகின்றது! ஆனால் மிகவும் அழகாக!
செந்தமிழ் தரும் ஞான தேசிக-னை,
செந்தில் கந்த-னை,
வானவர் காவல-னை,
குக-னை, சிந்த-னை......
செய் மனமே!
படம்: அம்பிகாபதி
குரல்: டி எம் எஸ்
இசை: ஜி ரா (அட நம்ம ஜிரா இல்லீங்க, இவர் ஜி.ராமநாதன்)
வரிகள்: KD சந்தானம்
ராகம்: கல்யாணி
பாடலை இங்கு கேளுங்கள்!
சிந்தனை செய் மனமே, தினமே
சிந்தனை செய் மனமே!
சிந்தனை செய் மனமே, செய்தால்
தீவினை அகன்றிடுமே!
சிவகாமி மகனை, சண்முகனை
சிந்தனை செய் மனமே!
செந்தமிழ் தரும் ஞான தேசிகனை,
செந்தில் கந்தனை, வானவர் காவலனை, குகனை
சிந்தனை செய் மனமே!
சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை!
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை!
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை?
ஆதலினால் இன்றே...
அருமறை பரவிய
சரவண பவ குகனை
சிந்தனை செய் மனமே!
திருத்தணியில் தான் ஆங்கிலப் புத்தாண்டுப் படி உற்சவம் பிரபலமானது! எல்லாரும் ஆங்கில மோகம் கொண்டு அலைகிறார்களே என்று பார்த்த வள்ளிமலை சுவாமிகள், சரியாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று, தமிழ்க் கடவுளுக்குப் படி உற்சவம் நடத்தி மாற்றி விட்டார்! :)
மகரந்தம் மணக்க...
மலர்கள் பூத்துக் குலுங்க...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)
4 comments:
//சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை!
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை!
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை?
ஆதலினால் இன்றே...//
அழகான பாடல். எனக்குப் பிடிச்ச முருகன் படம். நன்றி கண்ணா!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்-க்கா!
புத்தாண்டு அதுவுமா கண்ணன் பாட்டில் மட்டும் ஒரே கோலாகலமா இருந்துச்சி!
என் முருகனருள் பூவில் வேலாகலமா இருக்க வேண்டாமா? அதான் இந்த மீள்பதிவு-பாடல்! :)
Lyrics are by K D Santhaanqam.Pl note and not Pabanasam Sivan as mentioned.Pl correct Mistake.
dank u for the correction, sir!
Post a Comment