ஓமென்று நினைத்தாலே போதும்.....!
முருகா குமரா என்ற பெயர் கேட்டாலே
எங்கிருந்தாலும் ஓடி வரும் நம்ம ஜீராவைப் போலத்தான் குமரனும்!
ஓம் என்று நினைத்தாலே போதும், நம்மைத் தேடி வருவான் கந்தன்
என்று சூலமங்களம் சகோதரிகள் பாடும்
இந்தப் பாட்டை கேட்டு இன்புறுங்கள்.
(ஜீரா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்)
ஓமென்று நினைத்தாலே போதும்
முருகன் வேல் வந்து அருள் தந்து
நம் நெஞ்சை ஆளும்
ஓம் ஓம் ஓம்
ஓமென்று நினைத்தாலே போதும்
முருகன் வேல் வந்து அருள் தந்து
நம் நெஞ்சை ஆளும்
ஓம் ஓம் ஓம்
சிவ பெருமான் விழியின் சுடரானவன்
சரவணத் திருப்பொய்கை மலரானவன்
சிவ பெருமான் விழியின் சுடரானவன்
சரவணத் திருப்பொய்கை மலரானவன்
தவ மங்கை இருவருக்கும் உயிரானவன்
தவ மங்கை இருவருக்கும் உயிரானவன்
தினம் துதி பாடும் உலகினுக்கு ஒளியானவன்
ஓமென்று நினைத்தாலே போதும்
முருகன் வேல் வந்து அருள் தந்து
நம் நெஞ்சை ஆளும்
ஓம் ஓம் ஓம்
திருநீறை அணிவோரின் குறை கேட்பவன்
நலம் நாடி வருவோரின் பிணி தீர்ப்பவன்
திருநீறை அணிவோரின் குறை கேட்பவன்
நலம் நாடி வருவோரின் பிணி தீர்ப்பவன்
மறவாமல் தொழுவோரின் நலம் காப்பவன்
வண்ண மயில் மீது வளம் வந்து அருள் சேர்ப்பவன்
ஓமென்று நினைத்தாலே போதும்
முருகன் வேல் வந்து அருள் தந்து
நம் நெஞ்சை ஆளும்
ஓம் ஓம் ஓம்
பால் ஓடும் முகம் காட்டிச் சிரிக்கின்றவன்
பழம் என்னும் அருள் ஊட்டிக் களிக்கின்றவன்
வேல் ஆடும் கரம் நீட்டி அணைக்கின்றவன்
இன்ப நினைவாகி மனமெங்கும் இனிக்கின்றவன்
ஓமென்று நினைத்தாலே போதும்
முருகன் வேல் வந்து அருள் தந்து
நம் நெஞ்சை ஆளும்
ஓம் ஓம் ஓம்
7 comments:
வந்தேன்! :)
//ஓமென்று நினைத்தாலே போதும்
முருகன் வேல் வந்து//
என்ன விஷயம் அருணையடி? எதற்கு என்னைக் கூப்பிட்டாய்? அதான் பாட்டு வரியைக் கேட்டு முன்னமே அனுப்பி விட்டாயே! :)
வரி கேட்டாலும்
வாரி கொடுப்பதுவே
வடி வேல் வழக்கம்!
-இப்படிக்கு
திருக் கை வேல்
kumaranukku mattumalla!
kumaranadigalukkum Kurumbu undu!
:))
வண்ண மயில் மீது வலம் வந்து அருள் சேர்ப்பவன் தாளை வணங்குவோம்! ஓம் ஓம் ஓம்!
பகிர்விற்கு நன்றி. பிரணவ மந்திரத்தை நினைக்கும்போதே பிரணவ மந்திரத்தின் பொருளுரைத்தவனை அனிச்சையாகவே மனம் நினைக்கிறது.
நல்ல பாடல் பகிர்வுக்கு நன்றி.
// வாரிக்கொடுப்பான் வடிவேலன்...//
அழகு.
சுப்பு ரத்தினம்.
Tq
Post a Comment