கந்த சஷ்டி 1: தமிழ்ச் சினிமாவில் "திருப்புகழ்"!
இதோ....இனிய தீபாவளியும், நோன்பும் முடிஞ்சி, கந்த சஷ்டி துவங்கி விட்டது! (Nov-6-21010)!
ச"ஷ்"டி என்று இருப்பதால், இது பகல் பத்து/இராப் பத்து போல் தமிழ் விழாவாக இல்லாமல் இருக்கலாம்!
ஆனால் "கந்த" என்று இருப்பதால், என் முருகனின் விழாவே தான்! முருகன் இருப்பதால் தமிழும் கூடவே இருக்கும் தான்!
பதிவு எழுதத் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் முருகனருளில் சஷ்டிப் பதிவுகளைத் தவற விட்டதில்லை!
சில காரணங்களினால், இந்த ஆண்டு தவற விட்டு விடுவேனோ-ன்னு ஒரு அச்சம்! அஞ்சு முகம் தோன்றில்??
மருத்துவ மனையிலும் மயிலான் தோன்றி விட்டான்!
அவனைத் தவிர ஒன்றை விட முடியும்....
அவனைத் தவற விட முடியுமோ?
சஷ்டிப் பதிவுகள் - வெறும் பாட்டாக மட்டும் கொடுக்காமல், ஒவ்வொரு நாளும் ஒரு படைவீடு-ஒரு பாடல் என்றெல்லாம் முன்பு கொடுத்திருந்தோம்!
இந்த ஆண்டு என்ன செய்யலாம்? திருப்புகழைத் தரலாமா? அதுவும் ஜனரஞ்சகமாக! சினிமாவில் வந்த சில திருப்புகழை?
சில திரையிசைத் திருப்புகழும், சில திரையிசை முருகன் பாட்டுமாய்...
கதம்பமாய்க் கடம்பனுக்கு...இந்த ஆண்டும், இதோ....சஷ்டிப் பதிவுகள்!
திருப்புகழைச் சுவைக்கலாமா? அது என்ன அவ்வளவு சுவையாகவா இருக்கும்?
அவன் இதழ்ச் சுவை தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்! :)
ஆனால் அதை விடவும் அதிக சுவை ஒன்னு இருக்கு! ஆகா....என்னாது அது?
உனக்குப் பிடிச்ச பெருமாள் கோயில் பொங்கலா? லட்டா? அதிரசமா?
திருக்கண் அமுதா? சாற்றமுதா? அக்கார அடிசிலா? சுகியமா?
ததியோதனமா? தேன் குழலா? திருப்பாவாடைச் சோற்றமுதா? ஹிஹி!
என் முருகனின் இதழைக் காட்டிலும் சுவையானது = தமிழ்ச் சுவை!
கனியிடை ஏறிய சுளையும், முற்றல் கழையிடை ஏறிய சாறும்
இனியன என்பேன் எனினும், தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!
வெறும் தமிழுக்கே இவ்வளவு சுவையென்றால், வேலன் தமிழுக்கு?
இனியனின் இதழ்ச் சுவையோடு கூடிய இன்-தமிழ்ச் சுவை = இனியது கேட்கின், இனியது சுவைக்கின்!
இந்த ஆண்டு சஷ்டிப் பதிவுகளின் மையப்பொருள்(Theme) = தமிழ்ச் சினிமாவில் திருப்புகழ்!
யாமிருக்க பயம் ஏன்? என்றொரு தமிழ்ப் படம்! எம்.எஸ்.வி-வாலி கூட்டு!
ஜெய்கணேஷ், கே.ஆர்.விஜயா, ஃபடாபட் ஜெயலட்சுமி, ராஜேஷ், மனோரமா என்று பலரும் நடித்த படம்!
"யாமிருக்க பயமேன்" என்றே சுசீலாம்மாவும் தன் தேன் குரலால் பாடி இருப்பாங்க! "திரை அருட் செல்வர்" கே.சங்கர் அவர்கள் இயக்கிய படம்!
இந்தப் படத்தில் திருப்புகழா? அதுவும் ஒரு சூப்பர் பெண் குரலில்?
திருப்புகழ்-ன்னாலே அவ்வளவு சீக்கிரம் புரியாதே, செந்தமிழில்-ன்னா இருக்கும்? சந்தம் வேறு "தொம் தொம்" என்று வந்து, நம் தமிழ் உச்சரிப்பையே சோதித்துப் பார்க்குமே!
ஆனால் இந்தப் பாடல் அப்படி அல்ல! மிகவும் எளிமையான-அழகான திருப்புகழ்! சினிமாவுக்கேற்ற திருப்புகழ்! :)
அறுபடை வீடுகளில் எனக்கு மிகவும் பிடிச்சவன் - இதழ்க் கோட்டோரம் கள்ளச் சிரிப்பழகன் - சுவாமி மலை முருகன் - அவன் மீதான திருப்புகழ்!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி-யின் கை வண்ணத்தில், வாணி ஜெயராம் குரலில்,
அருணகிரியின் தமிழ் எப்படி ஒரு நதி போல நெளிகிறது? பார்க்கலாமா - பாதி மதி நதி!
படம்: யாமிருக்கப் பயமேன்
குரல்: வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.வி
வரி: அருணகிரிநாதர்
திருப்புகழ்: பாதிமதி நதி
தலம்: சுவாமிமலை
பாதி மதி நதி போது மணி சடை
நாதர் அருளிய குமரேசா!
பாகு கனி மொழி மாது குற மகள்
பாதம் வருடிய மணவாளா!
பாதி மதியும், கங்கை நதியும் சடையில் சூடிய ஈசன்! அவன் அருளிய குமரேசா!
பாகு+கனி இரண்டின் இனிமையும் கொண்ட ஒரு பேதைப் பெண்!
முருகன் தன்னை ஏற்றுக் கொள்வானா என்று கூடத் தெரியாது, தன் வாழ்வாக ஏற்றுக் கொண்ட ஒரு பேதை! அவளின் பாதம் வருடியவா! என் மணவாள முருகா!
அவள் பாதங்களை எதுக்கு முருகன் பிடிச்சி விடணும்?
இது போல நக்கீரர் முதற்கொண்டு யாருமே சொன்னதில்லையே! அருணகிரி மட்டும் ஏன் இப்படி அடிக்கடி பாடுறாரு?
பொதுவா ஆண்கள் கால்களைப் பெண்கள் தான் பிடிச்சி விடுவாங்க! சினிமாவில் அப்படித் தான் காட்டுவாய்ங்க! ஆண்களோ பெண்ணின் வேறு பாகங்களை அல்லவா வருடுவாங்க? :)
ஏன் முருகன் மட்டும் அங்கெல்லாம் பிடிக்காம, அவ காலை மட்டும் அடிக்கடி தொடுகிறான்?
என் முருகனுக்கு இந்த மேட்டரில் விவரம் போதாதோ? :) நைட் லைஃப்-ன்னா என்னான்னே அவனுக்குத் தெரியாதோ? :)
இதோ, அப்பறமா படிச்சிப் பாருங்க, அந்தக் காரணத்தை!
காதும் ஒரு விழி காகம் உற அருள்
மாயன் அரி திரு மருகோனே!
காலன் எனை அணுகாமல் உனது இரு
காலில் வழிபட அருள்வாயே!
பொதுவா பல நேரங்களில், சக தோழிகளிடம் கூட, முகத்தைப் பார்க்காது, "வேறு எங்கோ" பார்த்துப் பேசுவது தான் பலரின் வழக்கம்! :)
ஒரு பெண்ணின் மார்பகத்தைப் பார்ப்பது என்பது முற்றிப் போய்.....தெருவோரக் காமத்தால் (Roadside Romance), அவளைச் சீண்டவே நினைத்தவன் ஒருவன்!
ஆனால் சீண்ட முடியவில்லை! ஏன்-ன்னா கணவனும் அருகில் இருக்கிறான்!
ஆசை துடிக்கிறது! காகமாய் மாறி, ஏதோ பட்சணத்துக்காக "அறியாமல் கொத்துவது" போல், அவள் மார்பை அறிந்தே கொத்துகிறான் அந்த ஆண்மகன்!
யார் இந்த யோக்கிய சீலன்? அசுரனா?? = சேச்சே! தேவன்!
தேவர்களுக்கு எல்லாம் தலைவன் இந்திரனின் சீமந்த புத்திரன் = ஜெயந்தன்!
இதைக் கண்ட இராகவன், வெகுண்டு, புல்லையே பாணமாகக் கிள்ளி எறிய, அதுவே சக்கரமாகச் சுழன்று துரத்த, தப்ப முடியாமல், அவள்-அவன் பாதங்களிலேயே வந்து வீழ்கிறான்!
ஒரு கண்ணை மட்டும் புல்லினால் துளைத்து, காமத்தின் ஊற்றுக் கண்ணைத் துளைக்கிறான் இராகவன்! = காதும் ஒரு விழி, காகம் உற, அருள் மாயன் அரி, திரு மருகோனே!
இதை எதுக்கு இங்கு அருணகிரி குறிப்பிட்டுச் சொல்லணும்? இது என்ன திருப்புகழா? திருமால் புகழா?? :)
* அன்று....அசுர குருவான சுக்கிராச்சாரியாருக்கும் ஒரு விழி போனது!
* இன்று........தேவர்களின் இளவரசன் ஜெயந்தனுக்கும் ஒரு விழி போனது!
எம்பெருமானுக்கு தேவ-அசுர பேதங்கள் கிடையாது!
எம்பெருமான் அனைவருக்கும் பொது! அவரவர் செயல்களே தேவ-அசுரத்தனத்தை நிர்ணயிக்கின்றன!
* அசுர குலத்தில் பிறந்த பிரகலாதனை, "பிரகாலதாசுரன்" என்று வைணவத்தில் சொல்வதில்லை! = "பிரகலாதாழ்வான்"!
* தேவ குலத் தலைவன் மகனை, "ஜெயந்த தேவன்" என்று வைணவத்தில் சொல்வதில்லை! = காகா-அசுரன்!
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்!
அப்படியான எந்தை மாயனின் மருகோனே! என் முருகோனே! காலன் எனை வந்து அணுகாமால், உனதிரு காலில் வழிபட அருள்வாயே!
காலன் வந்த போது தான் ஜெயந்தன் (எ) காகாசுரனுக்குக் காலில் விழத் தோன்றியது!
ஆனால் காலன் எனை அணுகும் முன்பே, காமம் அணுகட்டும்! உன் திருவடிக் காமம் அணுகட்டும்! உனதிரு காலில் வழிபட அருள்வாயே!
பேதையின் காலை வருடிய மணவாளா! உனதிரு காலில் வழிபட அருள்வாயே!
ஆதி அயனொடு தேவர் சுரர் உல(கு)
ஆளும் வகையுறு சிறை மீளா
ஆடும் மயிலினில் ஏறி அமரர்கள்
சூழ வர வரும் இளையோனே!
பிரம்மன் முதலான தேவர் கூட்டம் சிறையில் வாடிய போது, அவர்களை சிறை மீட்டு வந்தவனே! என் கந்தவனே!
ஆடும் மயிலில் ஏறி, ஆடாது அசங்காது வா முருகா! அமரர் சூழ வர, வரும் வரதா!
சூதம் மிக வளர் சோலை மருவிடு
சுவாமி மலை தனில் உறைவோனே!
சூரன் உடல் அற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே!!
மணம் மிக்க சோலைகள் மருவிக் கொஞ்சும் காவிரி ஆற்றங்கரையில், சுவாமி மலையில் உறையும் சுவாமியே!
சுவாமிக்கும் நாதனான சுவாமி நாதப் பெருமாளே! ஏரகம் நீங்கா இறைவனே!
அன்று சூரன் உடல் அற இரண்டாக்கி, சேவல்-மயிலாக்கி, மாயத்தால் உண்டான கடலை வற்றச் செய்து,
வேலை விட்டவா! என்னைத் தொட்டவா! உன் திருவடிக் காமத்தை எனக்கு அருள்வாயே!
என்னாங்க எளிமையான திருப்புகழ் தானே? கே.ஆர்.விஜயாவே ஈசியாப் பாடுறாங்க-ல்ல? :)
சினிமாவில் அல்லாமல், பக்தர்கள் குழுவாகப் பாடுவதாகவும் இந்தப் பாட்டு இருக்கு! ஏ.எஸ்.ராகவன் அவர்கள் தலைமையில், திருப்புகழ் அன்பர்கள் சேர்ந்து பஜனை போல் பாடுவது இங்கே:
பாதி மதி நதி
போது மணி சடை
நாதர் அரு ளிய
-ன்னு ஒரு நதி ஓடி வரும் சந்தம் போலவே இருக்கு பாருங்க!
பாதி மதி நதி! இதான் நம்ம அருணகிரியின் தமிழ்!
இந்தப் பாட்டு முன்பு இணையத்தில் இல்லை! Youtube-இலும் இல்லை!
அடியார்கள் பொருட்டு, எனக்கு இதை வலையேற்றித் தருமாறு என்னுயிர்த் தோழனைக் கேட்டேன்!
அவனோ, என்னிடம் பதிலுக்கு வேறென்னமோ ஒன்னு குடு-ன்னு கேட்டான்! போடா என்று முட்டிக் கொண்டது :)
இல்லை...முதலில் நீ தான் தர வேண்டும் என்று நான் சொல்ல...
இல்லை...முதலில் நீ தான் தர வேண்டும் என்று அவன் சொல்ல...
அடியார்கள் முதலில், அப்புறம் தான் உன் சொந்த வேலை என்று நான் சொல்ல...
இல்லை...என் சொந்த வேலை தான் முக்கியம் என்று அவன் சொல்ல...
கோ.இராகவனிடம் கோபித்துக் கொண்டே தூங்கி விட்டேன்...
கோ.இராகவனிடம் சிரித்துக் கொண்டே கனவில் கேட்டேன்...
மறுநாள் காலை....விழித்த கணம்....கணினியைத் திறக்க....
Youtube-இல் Youravi-க்கென்றே இந்த பாடல் தரவேறி இருக்கு! :)
சொந்த வேலை முக்கியம் என்று சொன்ன தோழனின்
கந்த வேலை கண்ட களிப்பில்....
மீண்டும் தொலைபேசியில் சீண்டல் தொடங்க...
அதை...இன்று...இந்தத் திருப்புகழில் எண்ணிப் பார்க்கின்றேன்!
இரு நிலம் மீதில் எளியனும் வாழ....எனது முன் ஓடி வர வேணும்!
எனது முன் ஓடி வர வேணும்! முருகாஆஆஆ!
16 comments:
KRS! Nice Post!
Take Care!
என்னமோ போங்க. தப்பு செய்த ஒருவனைத் தண்டிக்க அவன் ஒரு கண்ணை எடுத்தவனைப் பார்த்து 'ஒரு கண் உற அருள் செய்தவன்'ன்னு பாடுறாங்க. அதே ஆளைச் சிறை மீட்கிறான் அருள் செய்தவன் மருகன். அவனையும் 'சிறை மீளா'ன்னு பாடுறாங்க. எப்படிப்பட்ட தப்பைச் செய்தாலும் சரண் என்று வந்துவிட்டால் அருளுவதே இவங்களுக்கு எல்லாம் வேலையாக போய்விட்டது. அதை நாம் சும்மா பாடிக் கொண்டே இருக்கிறோம். இவங்க கிட்ட இருந்து கத்துக்கிறதில்லை! :-)
சென்னை எப்படி இருக்கிறது இரவி? மருத்துவமனை எப்படி இருக்கிறது இரவி? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் இரவி?
Kumaran
Ovvoru vaakkiyathilum Ravinnu solreengale! Any Ilakkanam?
இலக்கணமா சிபி? அப்படின்னா என்ன சிபி? இலக்கணம் இல்லாம பேசினா இலக்கியம் ஆயிடுமா சிபி? அப்படின்னா நாம பேசுறது எல்லாம் இலக்கியம் தானே சிபி? :-)
thanks
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் வலைப்பதிவு படிக்கும் அத்தனை
பேருக்கும் சுப்பு ரத்தினத்தின் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.
சுப்பு ரத்தினம்.
மிக இனிய திருப்புகழ். இங்கு எங்கள் ஊரிலிருந்து தைப்பூசத்திற்காகப் பழனிப் பாதயாத்திரை செல்லும்போது இப்பாடலை தினசரி பூஜையின்போது பாடுவது வழக்கம்.
KRS !
ரொம்ப நல்லா இருக்கு!
//இலக்கணமா சிபி? அப்படின்னா என்ன சிபி? இலக்கணம் இல்லாம பேசினா இலக்கியம் ஆயிடுமா சிபி? அப்படின்னா நாம பேசுறது எல்லாம் இலக்கியம் தானே சிபி? :-)//
சாமியோவ் தலை சுத்துதே சுத்துதே!
@சிபி அண்ணா
நீங்க இப்போ அருணையடி ஆயிட்டீங்க பாருங்க 2010 சஷ்டியால்! :)
I am a bit fine now! walking & jumping! :)
// குமரன் (Kumaran) said...
என்னமோ போங்க. தப்பு செய்த ஒருவனைத் தண்டிக்க அவன் ஒரு கண்ணை எடுத்தவனைப் பார்த்து 'ஒரு கண் உற அருள் செய்தவன்'ன்னு பாடுறாங்க. அதே ஆளைச் சிறை மீட்கிறான் அருள் செய்தவன் மருகன். அவனையும் 'சிறை மீளா'ன்னு பாடுறாங்க.//
ஹா ஹா ஹா
ரைட்டோ குமரன் அண்ணா! பாயிண்டைப் பிடிச்சீங்க! :)
ஒரு சிலருக்குத் தேவர்களைப் பிடிக்காது! ஆனா தேவர்களைச் சிறை மீட்டது மட்டும் பிடிக்கும்! :)
அசுரர்களைப் பிடிக்கும்! ஆனால் அசுரர் "குடி கெடுத்த" ஐயா வருக-ன்னும் பாடுவாங்க! :))
//எப்படிப்பட்ட தப்பைச் செய்தாலும் சரண் என்று வந்துவிட்டால் அருளுவதே இவங்களுக்கு எல்லாம் வேலையாக போய்விட்டது//
நோ நோ நோ!
எப்படிப்பட்ட தப்பைச் செஞ்சாலும் அருளல் கிடையாது! தண்டனை தான்! காகாசுரன் தான்! ஜெயந்தன்-ன்னு கூப்பிடுதல் கிடையாது!
தப்பைச் செஞ்சாலும், சரண் என்று "உணர்ந்தால்" மட்டுமே அருள்! வெறும் வாயளவில், தப்பிப்பதற்காகச் சொல்லப்படும் சரணுக்கு எந்த மதிப்பும் இல்லை!
கதியாய் விதியாய் என்ற ஒட்டு மொத்த சரணாகதிக்கே ஏற்றம்!
// குமரன் (Kumaran) said...
சென்னை எப்படி இருக்கிறது இரவி? மருத்துவமனை எப்படி இருக்கிறது இரவி? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் இரவி?
பெங்களூர் நல்லா இருக்கு குமரன்!
மருத்துவமனையில் wi-fi இருந்தது குமரன்! நான் பரவாயில்லை குமரன்!
ஆடாது அசங்காது வா ரவி-ன்னு மாத்திப் பாடலாம்! :)
//என்.ஆர்.சிபி said...
Kumaran
Ovvoru vaakkiyathilum Ravinnu solreengale! Any Ilakkanam?//
இரவிக்குப் புறத்துப் பிறந்த அன்மொழி வினையாலணையும் பெயர் முற்று! :))
//குமரன் (Kumaran) said...
இலக்கணமா சிபி? அப்படின்னா என்ன சிபி? இலக்கணம் இல்லாம பேசினா இலக்கியம் ஆயிடுமா சிபி? அப்படின்னா நாம பேசுறது எல்லாம் இலக்கியம் தானே சிபி? :-)//
இது சிபிக்குப் புறத்துப் பிறந்த சேண்மொழிப் பெயர் முற்று! :))
@ராம்ஜி யாஹீ - நன்றி
@ சூரி சார் - தீபாவளி எப்படிப் போச்சு? பலகாரங்கள் எங்கே?
@ பிரகாசம் சார் - ஓ இது பாத யாத்திரைக்கும் பாடும் திருப்புகழ்ப் பாடலா? சூப்பர்! சூழ வர வரும் இளையோனே-ன்னு வருதே! சூழ வரும் பாத யாத்திரைக்குப் பொருத்தம் தான்!
@சிவமுருகன்
குமரனின் இந்தவொரு வாசகத்துக்கே தலை சுத்தினா எப்படி?
அப்போ எங்க நிலைமையெல்லாம் யோசிச்சிப் பாருங்க! :))
Post a Comment