எம்.ஜி.ஆர்-முருகன் பாட்டு! கந்தனுக்கு மாலையிட்டாள்!
சிவாஜி படத்தில் முருகன் பாட்டு இருக்கு-ன்னு பலருக்கும் தெரியும்!
படம் = கந்தன் கருணை! வெற்றிவேல், வீரவேல்-ன்னு, சிவாஜி வீரவாகு போல் Walking Style காட்டுவாரு! இதோ அந்தப் பதிவு!
ஆனால், எம்.ஜி.ஆர் படத்தில்? எம்.ஜி.ஆர், முருகன் பாட்டு பாடி இருக்காரா என்ன?
அட, பாட்டு என்ன? எம்.ஜி.ஆர் முருகனாவே வேஷங் கட்டியிருக்காருப்பா!
ஒரே ஒரு பாட்டுக்குப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் முருகனாக நடிக்க, ஜெயலலிதா வள்ளியாக நடித்தார்!
இதைத் தேர்தல் போஸ்டர்களில் கூடச் சிலர் பார்த்திருக்கலாம்! படம் = தனிப் பிறவி!
இன்னொரு படம் = உழைக்கும் கரங்கள்!
நாளை உலகை ஆள வேண்டும், உழைக்கும் கரங்களே-ன்னு பாட்டு வருமே! அந்த எம்.ஜி.ஆர் படம்!
அதில் கந்தனுக்கு மாலையிட்டாள்-ன்னு ஒரு முருகன் பாட்டு!
அதை வாணி ஜெயராம் மிக நேர்த்தியாகப் பாடி இருப்பாய்ங்க! வீணை இசையோடு காதல் இசை!
நடிகை பவானி பரதநாட்டிய நடனக் கலைஞர்! எம்.ஜி.ஆர் மேல் அதீத அன்பும் காதலும் கொள்வார்! எம்.ஜி.ஆரும் அன்பு செலுத்துவது போல் இருக்கும்! ஆனால் அது ஏனோ காதலாக மலராது! அப்புறம் எம்.ஜி.ஆர் லதாவைக் கரம் பிடிப்பார்!
எம்.ஜி.ஆரும்-லதாவும், பவானி வீட்டிலேயே அடைக்கலம் கொள்வார்கள்! அன்று முதல் இரவு!
அவர்கள் முதலிரவுக்கு வேண்டிய அனைத்தையும் பவானியே செய்ய வேண்டிய இக்கட்டான நிலைமை! பாவம்...அவள் மனம் பதபதைக்கும்!
இருப்பினும் பழைய காதலன் மேல் உள்ள மாறா அன்பால் அதையும் செய்வாள்! தம்பதிகளை முதலிரவு அறைக்கு அனுப்பி விட்டு, இவள் மட்டும் தனி அறையில்...
தேவனைத் தேடிச் சென்றேன்....தேவியுடன் அவனிருந்தான்!
வீணையுடன் நானிருந்தேன்....விதியை எண்ணிப் பாடுகின்றேன்!
கதியாய் "விதியாய்"...வருவாய் குகனே!
உள்ளத்தை இழந்தவள், உயிரை இழந்தவள் அல்லவா?
இனி ஒன்றுமே இல்லை என்று எல்லாமே இழந்தவளுக்கு...
இனி ஏது அடைக்கலம்? = முருகன் மட்டுமே அடைக்கலம்!
கந்தனுக்கு மாலையிட்டாள்! கந்தனுக்கு மாலையிட்டாள்!
கந்தனுக்கு மாலையிட்டாள்
கானகத்து வள்ளி மயில்
கல்யாண கோலத்திலே
கவிதை சொன்னாள் காதல் குயில்!
சொக்கருடன் மீனாட்சி
சொக்கி நிக்கும் திருக்காட்சி
காண வந்த கண்கள் ரெண்டும்
காதலுக்கு ஒரு சாட்சி!
பூவோடு பொட்டும் தந்தேன்!
ஒரு பூவைக்கு வாழ்வு தந்தேன்
சலங்கை கட்டும் இல்லத்திலே
தாலி கட்டும் நடக்க கண்டேன்!
தேவனைத் தேடிச் சென்றேன்
தேவியுடன் அவனிருந்தான்
வீணையுடன் நானிருந்தேன்
விதியை எண்ணிப் பாடுகின்றேன்!
வரிகள்: கவிஞர். முத்துலிங்கம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல்: வாணி ஜெயராம்
படம்: உழைக்கும் கரங்கள்
உன் கையும் உண்டு, இனி "என் மெய்த் துணையே"! முருகாஆஆஆஆஆ!
3 comments:
அழகென்ற சொல்லுக்கு முருகா.. நல்ல பாட்டு இல்லியா?
அந்த முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு -அதுவும் நல்ல பாட்டு தான்.
சினிமா songs நா வெள்ளி கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்.., வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடிந்தேன்>> அதுவும் நல்லா தானே இருக்கும் ?
ஆறுமோ ஆவல் ஆறு முகனை நேரில் காணாமல் ஆறுமோ ஆவல் - ஆடியோ , விடியோ க்லிப்பிங்க் எந்த சைட் லியாவது கிடைக்குமா
ஜெயஸ்ரீம்மா
நன்றி! வெள்ளிக்கிழமை விடியும் வேளை சூப்பர் பாட்டு!
நீங்கள் சொன்ன சில பாடல்கள், முன்பே முருகனருளில் இட்டுள்ளோம்! Side Bar-இல் பாருங்களேன்! அழகென்ற சொல்லுக்கு, முருகனைக் கூப்பிட்டு, வள்ளிக் கணவன் பேரை போன்ற பாடல்கள்!
ஆறுமோ ஆவல், ரெடியா இருக்கு எங்க லிஸ்ட்டில்! :)
வர செவ்வாய்க் கிழமை எதிர்பாருங்க! :)
அருமையான பதிவு.
Post a Comment