காற்றின் அணுவை மூச்சாக்கி
வேலுண்டு வினையில்லை என்ற திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர் இசையில் வாணி ஜெயராம் அவர்கள் பாடிய இந்தப் பாடல் உள்ளத்தை உருக்கும்.
திரைப்படங்களில் எத்தனையோ பாடல்கள் இன்னிசையோடு இறைவனைத் துதித்து வெளி வந்துள்ளன. துன்பப்படும் கதாபாத்திரங்கள் தங்களைக் கடவுளே காக்க வல்லார் என்று அழுது தொழுது பாடுகையில் உள்ளம் உருகும் படி இசையமைத்திருப்பார்கள்.
இதோ பாடலைக் கேளுங்கள். நமது நெஞ்சமே உருகும் பொழுது தமிழ்வேளின் திருவுளம் இழகாதா? உருகாதா?
அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்
(திருமலைக் குமார சுவாமி, திருவடி சரணம் ஐயா - உன்
அருளினால் பிறவி பெற்றேன், அடைக்கலம் நீயே ஐயா!)
காற்றின் அணுவை மூச்சாக்கி - என் கந்தா எனக்கு உயிர் கொடுத்தாய்!
மூச்சே காற்றாய் முடியும் வரை - உன்னைப் போற்றிப் பாடிடக் குரல் கொடுத்தாய்!
பாலூட்டும் அன்னை இல்லை! தந்தை சீராட்டும் நிலையில் இல்லை!
ஊரோடு உறவும் இல்லை! இங்கு உனை அன்றி எதுவும் இல்லை!
போராட்டம் ஆகும் வாழ்வில் - உன்னைப் பாராமல் அமைதி இல்லை!
வேலோடு மயிலும் நீயும் - என்னை வாழ்நாளில் காக்கும் எல்லை!
வானூரும் வெள்ளி மலையில் - தந்தை தாயோடு வீடும் உண்டு!
கணநாதன் அண்ணன் உண்டு! - சபரி மலை மீது தம்பி உண்டு!
என் வாழ்வு என்ற ஒன்று, நீ தரும்போது தானே உண்டு?
குன்றாடும் குமர வேலே - அருள் கொடுத்தாள வேண்டும் இன்று!
4 comments:
இராகவன்.
பாடலின் வரிகளை எடுத்து இடவில்லையா?
பாடலின் வரிகள் வேண்டும் ஜிரா!
நீளம் அதிகம் இல்லையே!
கிடைக்கலைன்னா தட்டெழுதி விடுங்கள்!
இசை மிகவும் அருமை!
இசை மன்னன் தமிழ் மன்னனுக்குத் தரும் பாட்டில் இசைக்கும் பக்தியின் விசைக்கும் பஞ்சமா என்ன?
அதுவும் எனக்குப் பிடித்த வாணியின் குரலில்!
ராகவா,
முருகனருள் வலைப்பூ பாடல்களுக்கெல்லாம் சரியான Tag அமைத்துக் கொண்டிருக்கும் போது, எதுக்கோ இங்கு வந்தேன்...
பாடல் வரிகள் இல்லாமல் இருந்துச்சா? சரி, கேட்டுக்கிட்டே நானே தட்டெழுதி பதிவில் சேர்த்து விட்டேன்...
உன் அனுமதி பெறாமல் உன் பதிவில் கை வைத்த குற்றத்தைப் பொறுத்துக்கோ - ஓக்கேவா? :)
பாடல் வரிகள் ரொம்ப பொருத்தமா இருந்துச்சி ராகவா! Very apt and running again and again for me!
போராட்டம் ஆகும் வாழ்வில் - உன்னைப் பாராமல் அமைதி இல்லை!
என் வாழ்வு என்ற ஒன்று, நீ தரும்போது தானே உண்டு?
வேலோடு மயிலும் நீயும் - என்னை வாழ்நாளில் காக்கும் எல்லை!
அப்பறம்...
அம்பிகா படி ஏறி வராங்க-ல்ல? அது குற்றாலம் பக்கத்துல இருக்குற திருமலைக் குமாரர் கோயில் ராகவா!
இந்த மலைக்கும் திருமலை-ன்னு தான் பேரே! அருணகிரி பாடியதும் இந்தத் திருமலையைத் தான் ராகவா, நீ முன்பு சொன்னது போல் அந்தத் திருமலை (திருமலா) இல்லை! :) திருமலைக் குமார சுவாமி-ன்னு அம்பிகா பாடத் தொடங்கும் போது பாரேன்...
இது குற்றாலம்/இலஞ்சி பக்கத்துல இருக்கு! பச்சைப் பசேல்-ன்னு வயல்கள் சூழ இருக்கும்! ஸ்கூல் படிக்கச் சொல்ல ஒரே ஒரு முறை அம்மா அப்பா கூட போயிருக்கேன்! இப்போ தான் ஞாபகம் வருது...இந்தத் திருமலையில் தான் என்னைய விட்டுட்டு, அவங்க மட்டும் யாரையோ பாத்துட்டு வர, பக்கத்து மாநிலத்துக்குப் போயி வந்தாங்க! நான் மட்டும் தனியா இருந்தேன் :( ஆனா முருகன் கூட! :))
Post a Comment