வருவான் வடிவேலன்!
வருவான் வடிவேலன் -ங்கிற படம்!
ஈழம், சிங்கை, மலேசியா, பெனாங்கு -ன்னு பல நாடுகளில் போய்ப் படம் புடிச்சாங்க! பல நல்ல பாடல்கள்...
TMS, சுசீலாம்மா, சீர்காழி, வாணி ஜெயராம், LR ஈஸ்வரி, LR அஞ்சலி -ன்னு ஒரு இசைப் பட்டாளமே பட்டாசு கெளப்பிய படம்!
அதில் இந்தப் பாட்டும் ஒன்னு; படத்தின் ஆரம்பப் பாட்டே இதான்!
திருத்தணி மண்டபத்தில்... இந்தக் காட்சி!
என்னடா இது, கடந்த சில பதிவுகள்-ல்லாம் ஒரே திருத்தணியா வருதே-ன்னு பாக்காதீக:)
பாட்டின் இரண்டாம் பத்தியைக் கவனிங்க..
சிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன்
அவள் செங்கனி வாய் இதழை நனைக்கின்றவன்
"வாய் இதழை நனைத்தல்" -ன்னா என்னடா முருகா? கொஞ்சம் சொல்லேன், தெரிஞ்சிக்குறேன்:)
வருவான் வடிவேலன் - தணிகை
வள்ளல் அவன் - அழகு
மன்னன் அவன் - நினைத்தால்
வருவான் வடிவேலன்!
சிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன்
அவள் செங்கனி வாய் இதழை நனைக்கின்றவன்
இடையினில் கை கொடுத்து வளைக்கின்றவன்
அள்ளி இடுகின்றவன் சொர்க்கம் தருகின்றவன்
(வருவான் வடிவேலன்)
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
அடியவர் கேட்ட வரம் அருள்கின்றவன் - என்றும்
அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன்
கொடியவர் பகை தீர்த்து முடிக்கின்றவன் - சேவல்
கொடியன் அவன் நமக்கு இனியன் அவன்
(வருவான் வடிவேலன்)
திருமுருகாற்றுப்படை நான் பாடவா - இல்லை
திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா - கந்தர்
சட்டிக் கவசக் கதை பாடவா - அவன் முன்
கையேந்தவா வெற்றிக் கடல் நீந்தவா?
(வருவான் வடிவேலன்)
குரல்: வாணி ஜெயராம்
வரி: கண்ணதாசன்
இசை: MSV
படம் : வருவான் வடிவேலன்
தணிகை = வள்ளி-முருகன் திருமணத் தலம்!
அதனாலேயே, என் மனசுக்கு மிகவும் பிடிச்ச தலம்!
வெறும் வாய்-இதழை மட்டும் நனைக்கவில்லை முருகன்!
வள்ளியின் காலையே, இங்கு பிடிச்சானாம்!
= குறமகள் பாதம் வருடிய மணவாளா
தனக்காகவே, காத்துக் கெடந்து, கால் போன போக்கில் நடையா நடந்தவ = அவ மன வலிக்கு/ கால் வலிக்கு - பாதம் வருடிய மணவாளா!
------
வருவான் வடிவேலன் = இந்தப் படத்தில், ஒரு பெண்ணை அவள் காதல் கணவன் தள்ளி வைக்கிறான்;
காரணம்: தன் கருத்தை / தொழிலை முன்பு எதிர்த்தவள்... என்பதால்!
Former Competitor; So show love 1st & then completely destroy her life:)
ஆனால், அவளோ, "அவனே" -ன்னு வாழ்கிறாள்;
அவன் மூலமாவே ஒரு பால முருகனைப் பெத்துக்குவேன் -ங்கிற நிலையில் நிக்குறா!
நடக்கக் கூடிய காரியமா இது?
அவன் வெறுப்பெங்கே? இவள் விருப்பெங்கே?
நடந்ததா? படத்தில் பாத்துக்கோங்க!:) = வருவான் வடிவேலன்!
2 comments:
இன்றும் கேட்கும் அருமையான பாடல்... விளக்கம் ரசித்தேன்... நன்றி...
நினைவு தெரிஞ்சு நான் பார்த்த முதல் படம். கோபுரத்து மேலே இருந்து ஒரு மயில் அடிக்கடி பறந்து பறந்து வந்து பக்தர்களைக் காக்கும். அது அப்ப என்னை ரொம்ப கவர்ந்துச்சு.
Post a Comment