அம்பரமே தண்ணீரே | முருகன் திருப்பாவை - 17
அம்பரமே தண்ணீரே சோறும் இருப்பிடமும்...
(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)
முருகன் திருப்பாவை-17
(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா
’ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)
17/30 | முல்லை குறிஞ்சி; தலைக்குடும்பம் துயிலெழுப்பல்!
அம்பரமே தண்ணீரே சோறும் இருப்பிடமும்
நம்பி அறஞ்செய்யும் நாரணா கண்திறவாய்!
நம்பினார்க்கும் நம்பார்க்கும் நம்-பார்க்கும் நல்விளக்கே,
எம்பெருமாட்டி நப்பின்னாய், அம்மா வழிதிறவாய்!
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே,
செம்மகள் செல்வீ, விழிதிறவாய் மைவள்ளி்!
செம்தமிழ் ஆதிகுடி முல்லை குறிஞ்சிக்கு
நம்மாயச் சேயோனே தூங்கேலோ ரெம்பாவாய்! (17)
முருகன் திருப்பாவை தொடரும்..
மகிழ் திகழ் புத்தாண்டு 2021 வாழ்த்துக்கள்!
0 comments:
Post a Comment