இளையராஜா செய்து வைக்கும்: "வள்ளித் திருமணம்"!
சென்ற பதிவில், இளையராஜா-முருகன் பாடல்கள் = (சினிமாவில்) "six-o-six"-ன்னு சொல்லியிருந்தேன்!
ஒடனே.. ட்விட்டர் நண்பர்கள் சிலர், ராஜா (எ) கடலில் மூழ்கி,
மூச்சடக்கி, முத்துக் குளித்து,
6->9 ஆக்கி, சில அழகிய முத்துக்களை எடுத்துக் கொடுத்தனர்:)
So.. இளையராஜா-முருகன் = 9 songs!
பதிவின் இறுதியில், ஒரு பட்டியலாய் இட்டு வைக்கிறேன்! போதுமாய்யா?:)@_drunkenmunk (எ) வேங்கடேஸ்வரன் கணேசனுக்கு = என் களிமிகு - முருக நன்றி பல!
@sicmafia, @mayilsk = thanks to these great Raja fans too!
பெண் ஜென்மம் (எ) பழைய படம் பார்க்க நேரிட்டது;
அதன் விளைவு: ஒரே Family சினிமாவில் = இரண்டு முருகன் பாடல்கள்!
*முதற் பாடல் = சென்ற வாரம்
*இரண்டாம் பாடல் = இந்த வாரம்!
இன்றைய செவ்வாய், ஒரு கதா காலட்சேபம்!
= செய்வது: பி.சுசீலா
என்ன வியப்பா இருக்கா?:)
இளையராஜா செய்து வைக்கும் = வள்ளித் திருமணம்!
vaLLi kodi - creeper |
வள்ளித் திருமணம் = சங்கத் தமிழில் ஊறி விட்ட ஒன்னு!
கொடிநிலை கந்தழி வள்ளி -ன்னு தொல்காப்பியம்!கந்து (எ) நடுகல்லில் படர்ந்த வள்ளிக் கொடி
= தமிழ்த் தொன்மத்தின் "யாரோ"
= குடி காத்த முன்னோர்கள்! ஆணும்-பெண்ணுமாய்!
விநாயகர், நாரதர் எல்லாம் பின்னாள் சம்ஸ்கிருதக் கலப்பு;
இந்தக் கலப்பெல்லாம் இல்லாமலேயே, வள்ளித் திருமணம் = உள்ளம் உருக்குவது!
வள்ளி:
= முல்லை நில நடுகல், திருமாலின் மகள்!
= குறிஞ்சி நில முருகன் மேல் மாறாத காதல், தீராத அன்பு!
மாயோனின் செல்வ மகள், காடு மேடு எல்லாம் அலைகிறாள்!
இத்தனைக்கும் முருகன் அவளிடம் ஆசையாக ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை! முன்னே-பின்னே நெருங்கிப் பார்த்ததும் இல்லை!
இப்படித், தான் பார்க்காத ஒரு முருகனுக்காக...
பார்க்கும் எல்லா மாப்பிள்ளையும் தட்டிக் கழித்தாள்...
சில சமயம் வீரத் தமிழச்சியாய், விரட்டவும் விரட்டினாள்! :)
* முருகன் தன்னைக் காதலிக்கிறானா? = தெரியாது...
* இது கைக்கிளையா? one-sided? = தெரியாது...
* முருகன் வருவானா? = தெரியாது...
= இருப்பினும், "வேறு எங்கும் அகம் குழைய மாட்டேனே"!
காடு - மேடு - குகைகள் தோறும்,
கால் தேயத் தேய,
மனமும் தேயத் தேய..
அதனால் தான் முருகன், "தேய்ந்த போன வள்ளி" - அவள் பாதத்தை இன்றும் பிடித்து விடுகிறான்!
என்னாது? பொம்பளை காலை, ஆம்பிளை, சதா பிடிச்சி விடுவதா?
ஆமாம்!
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
-ன்னு அருணகிரி மட்டுமே, இயைந்து பாடுவாரு! மதப் பிடிப்புள்ள வேறு யாரும், முருகன், அவ காலைத் தொட்டான் -ன்னு பாட மாட்டாங்க!
காதல் பாதங்களுக்கு, முருகன் செய்யும், "பாதுகா பட்டாபிஷேகம்"!
பாதம் வருடிய மணவாளா!
பாதம் வருடிய மணவாளா!
வள்ளியின் காதல் = "கைக்கிளை" -ன்னு சொல்ல மனசு வருமா?
கைக்கிளை = Not Just one-sided Love!
முல்லை/ குறிஞ்சி அகத் திணைகளுக்கும் = முற் சொல்லப்படுவது கைக்கிளையே! = ஏன்?
Try reading tholkaapiyar's heart & sangam landscape = here
இதுவே வள்ளித் திருமணம்! அவன் வருவானா?-ன்னு கூட அறியாது,
* அவள் = அவனே அவனே!
* அவனுக்கு = அவளே அவளே!
பொதுவா, வள்ளித் திருமணத்தைத் தொடாத, சொற்பொழிவாளர்களே இல்லை! (சம்ஸ்கிருதம் கலந்து தொட்டாலும்)
வாரியார் முதற்கொண்டு..., புலவர் கீரன், தேச மங்கையர்க்கரசி, நாகை முகுந்தன் -ன்னு பலரும் தொடும் Topic!
அதைச் சுசீலாம்மா தொட்டால்?
பாட்டுக்கு அரசி = கதா காலட்சேபத்துக்கும் அரசி ஆகிறார்:))
முருகன் பாமாலை (எ) Album - அதில், சுசீலாம்மா, முருகன் வரலாற்றைப் பாட்டாத் தான் பாடுவாங்க! ஆனா, கதா காலட்சேபமாக???
= வாரியார் போல் செய்து காட்டும் வாய்ப்பு?
= இளையராஜா உருவத்தில் வந்தது!
கீழே, நீங்களே கேட்டு மகிழுங்கள்! = ராஜாவின் "காலட்சேப" இசையை;
Subtle Veenai & Violin - ஏய்ச்சுப் புட்டேனே தாத்தா, ஏய்ச்சுப் புட்டேனே!:)))
வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்
வேலனை மாலையிட்டாள் - அந்தப்
புண்ணியக் காவியம் எண்ணி இசைத்திட
என்னையும் ஆணையிட்டாள்!
(நம்பிராசன் திருமகளான வள்ளியின் பேரழகை, நாரத மாமுனி வந்து, முருகனிடம் சென்று...)
கண்டேன், கனியொன்று கண்டேன்
வடிவேலனே, சிவபாலனே,
உன் பின்னிரெண்டு கரம் உண்ணுகின்ற விதம்..
கண்டேன், கனியொன்று கண்டேன்
அழகிய விழி வண்ணம், மழைநிகர் குழல் வண்ணம்
உனக்கெனவே பிறந்தாள் அந்த மட அன்னம்!
கண்டேன், கனியொன்று கண்டேன்
(வள்ளியின் வடிவழகை நாரதர் சொல்லக்கேட்டு.. வேலவன் வேடனாகக் கோலம் பூண்டான்; மானைத் தேடும் பாவனையில், மங்கை வள்ளி இருக்கும் தினைப் புனத்தினுக்கு வந்து சேர்ந்தான்)
எந்த மான்? தேடி வந்த மான்?
(- என்று வள்ளி கேட்க...)
மேயாத மான் - புள்ளி
மேவாத மான்
பாயும் நடையழகும், பின்னல் நடையழகும்
கண் கவரும் முகமும் இதழும் - பொன்
செங் கமலம் எனவே திகழும் - தனில்
அந்தம் மிகுந்திட வந்து பிறந்தது... மேயாத மான்...
(அவன் சொன்ன மான், இந்தக் கன்னி மான் என்று கண்டு கொண்ட வள்ளி, சினந்தாள், சீறினாள்)
மானைத் தேடி வந்த வேடா
அடடா மூடா - சரி தான் போடா - உன்
கள்ளத்தனம் என்னவென்று கண்ணிரண்டும் காட்டுகையில்
எள்ளத்தனை கள்ளத்தனம் என்னிடம் செல்லுமோடா? - அட
மானைத் தேடி வந்த வேடா!
(உடனே வேடனாய் இருந்த வேலன், மர வேங்கையாய் மாறி, வள்ளியைத் தொடர்ந்து வந்து..)
ஆவியே, என் ஆருயிர் சஞ்ஜீவியே, மன்மதன் என்னும்
பாவியே, மலர்க் கணைகள், தூவியே வாட்டுறான் கண்ணே!
ஆயல் ஓட்டும் பெண்ணே! - பெண்ணே! பெண்ணே!
(வள்ளி என்ன இந்தக் காலத்து Modern Girlஆ,
சரியென்று உடனே சொல்ல? சாரியென்று மறுத்து விட்டாள்;
வாலிப முருகன் உடனே வயோதிகன் ஆனான்!
வள்ளி குடுத்த தினை மாவைத் தின்ற அந்தத் தாத்தாவுக்கு..)
விக்கலும் வந்ததடி - பெண்ணே
விக்கலும் வந்ததடி
(காதல்) சிக்கலில் நிற்கின்ற சுந்தரன் ஆனதால்
விக்கலும் வந்ததடி - பெண்ணே
விக்கலும் வந்ததடி!
(வள்ளி பாத்தா, அடி ஆத்தா, இவர் பொல்லாத தாத்தா என்று வள்ளி வெறுக்க... ஆறுமுகன், அண்ணன் ஆனைமுகனை அழைத்தார்; வள்ளி பயந்து, திருமணத்துக்கு ஒப்புக் கொண்டாள்; யானை விலகிப் போயிற்று)
ஏய்ச்சுப் புட்டேனே தாத்தா
ஏய்ச்சுப் புட்டேனே!
(மறுபடியும் யானையை முருகன் அழைக்க, அது தும்பிக்கையால் வள்ளியைத் தூக்கிப் போட..
அவள் முருகாஆ, முருகாஆ என்று அலற,
வள்ளியை முருகன் வாங்கிக் கொண்டான், கையில் தாங்கிக் கொண்டான்;
மனம் போல் முருகனை வள்ளி மணந்து கொண்டாள்!)
வள்ளியம்மை நாதனுக்கும்
புள்ளி மயில் வேலனுக்கும்
மங்களம், சுப மங்களம்!
மங்களம், சுப மங்களம்!
(பாட்டைக் கேட்டுக் கொண்டே தட்டச்சியது;
பிழைகள் இருப்பின், தயங்காது சுட்டிக் காட்டவும்; திருத்தி வைக்கிறேன்- நன்றி)
படம்: பெண் ஜன்மம்
வரி: வாலி
குரல்: ஜேசுதாஸ், பி. சுசீலா
இசை: இளையராஜா
*கதா காலட்சேப மெட்டில் = இளையராஜா இசை
*கதா காலட்சேப மெட்டில் = சுசீலாம்மா பாடல்
= இது அபூர்வம்!
Ilayaraja's Autograph on his Ramana Maalai CD, as he presented to P Susheela |
சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
1. மகராசன் படத்தில் - எந்த வேலு வந்தாலும், கந்த வேலு முன்னாலே சரணம் சரணம் - மலேசியா & சித்ரா பாடியது
2. கவரிமான் படத்தில் - சொல்ல வல்லாயோ கிளியே? - பாரதியார் எழுதி, வரலட்சுமி அம்மா பாடியது (Bhairavi Ragam)
3. தம்பி பொண்டாட்டி படத்தில் - ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே - அருணகிரிநாதர் பாடல் - மின்மினி/ பிரசன்னா பாடியது
4. தெய்வ வாக்கு படத்தில் - வள்ளி வள்ளி என வந்தான், வடிவேலன் தான் - இளையராஜாவே பாடியது, ஜானகியுடன்
5. கும்பக்கரை தங்கய்யா படத்தில் - என்னை ஒருவன் பாடச் சொன்னான் - இளையராஜாவே பாடியது (kalyani ragam)
----------
6. ஊமை உள்ளங்கள் படத்தில் - மனதினில் புதிய அருவி (வேலனின் தோளில் வேடனின் செல்வி) - சசிரேகா பாடியது (திருத்தணி, பரங்குன்றம் எல்லாம் வரும்)
7. புயல் பாடும் பாட்டு படத்தில் - வேல் முருகனுக்கு மொட்டை ஒன்னு போடப் போறோம் டோய் - மலேசியா வாசுதேவன் பாடியது (Mohana Ragam)
8. பெண் ஜென்மம் படத்தில் - செல்லப் பிள்ளை சரவணன் - யேசுதாஸ்/ பி. சுசீலா பாடியது (Maand Ragam)
9. அதே பெண் ஜென்மம் படத்தில் - வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள் வேலனை மாலையிட்டாள் - பி.சுசீலா பாடியது (கதா காலட்சேபமாக)
= Raja-Murugan Songs (எ) நவரத்தினங்கள் இவையே!
= Raja-Murugan Songs (எ) நவரத்தினங்கள் இவையே!
4 comments:
வள்ளி திருமணம் ரசிக்கவைத்தது..!
One more song from his non film album...geethanjali.. Muruganai nina I manamee
One more song by raja in film. Abbey Deivanai endure sonnarey....from the movie en selvam.
http://tamiltunes.com/en-selvame.html
கேட்டு பாருங்கள், வித்தியாசமான அனுபவம்.
இளைய ராஜாவின் 'கீதாஞ்சலி' ஆல்பம் பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா? மெய் சிலிர்க்க வைக்கும். குறிப்பாக முருகனை நினை மனமே... என்ற பாடல்...
Post a Comment