Tuesday, October 01, 2013

சீர்காழி: காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது!

இந்தச் செவ்வாய்: ஒரு அபூர்வமான சீர்காழி பாடல்! அவருக்கே உரிய கணீர் என்ற குரலில்!

காதலில் மட்டும்: "காலையும் நீயே, மாலையும் நீயே" அல்ல!
முருகனிலும் உண்டு: "காலையும் நீயே, மாலையும் நீயே":))


காலை, மாலை -ன்னு..
ஒவ்வொரு பொழுதாக, முருகனை அடுக்கும் பாட்டைக் கேளுங்க!



காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது
கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது!
(காலை இளம் கதிரில்)



கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
கலையாதது நிலை ஆகுது கதி ஆகுது!
(காலை இளம் கதிரில்)

மாலை வெயில் மஞ்சளிலே உன் மேனி மின்னுது - அந்தக் 
கோலம் கண்டு உள்ளம் கொள்ளை உறுதி கொள்ளுது
குமரா உனை மனம் நாடுது; கூத்தாடுது!
(காலை இளம் கதிரில்)

சோலை மலர்க் கூட்டம் உந்தன் தோற்றம் கொள்ளுது - சிவ 
சுப்பிரமண்யம் சுப்பிரமண்யம் என்று சொல்லுது
சுகம் ஆகுது! குக நாமமே! சொல் ஆகுது!!
(காலை இளம் கதிரில்)

வேலை ஏந்தும் வீரம் வெற்பு சிகரம் ஆகுது
"வெற்றி வேல், சக்தி வேலா" என்றே சேவல் கூவுது
"சக்தி வேல் சக்தி வேல்" என்றே சேவல் கூவுது
வினை ஓடுது! வடி வேல் அது,  துணையாகுது!!
(காலை இளம் கதிரில்)

பார்க்கின்ற காட்சியெல்லாம் நீயாகவே
நான் பாடுகின்ற பாட்டெல்லாம் நினக்காகவே
உருவாகுது திருவாகுது 
குருநாதனே முருகா ...
(காலை இளம் கதிரில்)

குரல்: சீர்காழி
இசை: ?
வரி: ?
Album Song

6 comments:

கோமதி அரசு October 01, 2013 10:26 AM  

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
கேட்டு மகிழ்ந்தேன்.
பகிர்வுக்கு நன்றி.

இராய செல்லப்பா October 01, 2013 11:29 AM  

இப்பாடலைப் பதித்தமைக்கு நன்றிகள். -கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

குமரன் (Kumaran) October 02, 2013 3:48 PM  

இன்னைக்கு காலையில எந்திரிச்சவுடனே இந்த பாட்டு தான் மனசுல ஓடிச்சு. ஒடனே போட்டுக் கேட்டேன். இப்பத் தான் தெரியுது உங்க இடுகை ரீடர்ல (feedly) வர்றதை நேத்து இரவு பாத்தது மனசுல இருந்திருக்கு. :)

மும்மூர்த்தி January 28, 2016 9:15 PM  

பாடலாசிரியர்:சண்முகம்
ராகம :சுபபந்துவராளி

Anonymous May 11, 2020 7:57 PM  

This song is an amazing energy to start the morning. I live in a country at the bottom of the world (N.Z). But I get to listen first in the world. I'm so blessed by my Lord Muruga....
Lord Muruga...New Zealand Muruga.....

Unknown January 31, 2021 7:54 AM  

அற்புதமான பாடல். சிறு வயதில் அடிக்கடி கேட்ட பாடல். எப்பொழுது கேட்டாலும் திகட்டாத இனிமையான சக்தி வாய்ந்த பாடல். சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீர் குரல். மிகவும் அருமை.மிக்க நன்றி.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP