Pop Music Murugan!
தமிழ் பாப் (Pop) இசைச் சக்கரவர்த்தி என்று புகழ் பெற்ற = சிலோன் மனோகர்;
AE Manoharan என்பதே முழுப் பெயர்;
சுராங்கனி - சினிமாப் பாடலாக அல்லாமல், Album பாடலாகப் பாடிப் புகழ் பெற்றவர்;
இன்னும் பல துள்ளல் பாடல்கள்:
அன்பு மச்சாளே என் ஆசை மச்சாளே, பிராந்தி பியர் விஸ்கி போடாதே... :))
அந்த ஈழக் கலைஞர், முருகன் மேல் பாடிய பாடல்
= மால் மருகா, எழில் வேல் முருகா! Pop Music Murugan!
அதுவே இன்றைய பாடலாக.. முருகனருள் வலைப்பூவில்!
என்ன திடீர்-ன்னு Pop இசை? -ன்னு பாக்காதீங்க!:)
ஈழத்தின் மிகப் பிரபலமான முருகன் ஆலயம் = நல்லூர்க் கந்தசாமிக் கோயில்! (யாழ்ப்பாணம்)
அங்கு நடைபெறும் 21 நாள் உற்சவம்.. இப்போது!
அதை முன்னிட்டே, இந்த நல்லூர் முருகன் பாடல்!
இந்த நல்லூர் முருகன் முன்பு தான், திலீபன் எனும் ஈழப் போராட்ட இளைஞன், உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தான்..
நல்லூர் முருகனை நினைக்கும் போதெல்லாம், திலீபன் நினைவும் எனக்கு வந்து சேரும்!
*கதிர்காமத்தில் பல பண்பாடுகளின் ஒத்திசைவு = பெளத்தம்/ இஸ்லாம்/ முருகன்!
"உருவாய் அருவாய்" என்பதில் அருவம்! காண முடியாது முருகனை! சித்திர முருகன் மட்டுமே!
*நல்லூரில் = தமிழ் மட்டுமே பரவும் முருகனைக் காணலாம்!
இன்று உருவ வழிபாடு வந்து விட்டாலும், ஈழத்தில் வேல் வழிபாடே மிகத் தொன்மையானது!
நல்லூர் 21 நாள் உற்சவப் பதிவுகளுக்கு:
என் இனிய நண்பர், இசைமிகு, கானா பிரபா-வின் தளத்துக்குச் சென்று ரசிக்கவும்;
முன்பு, கதிர்காமத்துக்கு என்று தனிப்பதிவு இட்டது போல்...
பின்பு ஒரு நாள், நல்லூர்க் கந்தசாமிக் கோயிலுக்கும் இடுகிறேன்..
இப்போது, பாடலை மட்டும் கேட்டுக் கொண்டே வாசியுங்கள்!
ஆவலுடன் உன்னைத் தேடி வந்தேனே!
முருகா வடிவேலா!
தருவாய் அருள் குமரா!
நல்லூர் நாயகனே - நல்வழி காட்டும் ஐயா!
நம்பிய பேர்களது - துன்பங்களைத் தீரும் ஐயா!
நல்லூர் எம்பதியே!
நம்பிக்கையின் ஒளியே!
கனிமலைக் கந்தவேளே - காப்பது நீ ஐயா!
கதியே நீயென்றால் - பதியே சரணம் ஐயா!
கந்தா கதிர்வேலா!
வருவாய் சிவபாலா!
ஏழுமலை இறையினிலே - எழுந்திடும் குமரேசா!
ஆறுதலைத் தந்திடுவாய் - ஆறுமுகா அழகேசா!
குமரா எழில் முருகா!
குறுகுறு நகை அழகா!
தோகைமயில் ஏறிவரும் - சேவல் கொடியழகா!
பழமுதிர் சோலைகளில் - பவனி வரும் வடிவழகா!
அரகர ஆறுமுகா!
அருளே திருக்குமரா!
லண்டன் பாரிஸ் சுவிஸ் - ஜேர்மனி நோர்வே ஆஸி
கனடா வாழ்த் தமிழன் - நாயகனே முருகைய்யா!
உலகாள் தமிழ்த் தலைவா!
உமையாள் திருக் குமரா!
சிவனின் மைந்தன் ஐயா - சிங்கார வேலன் ஐயா!
தகப்பனுக்கு உபதேசம் - செய்த சுவாமி நீ ஐயா!
தவறுகள் பொறுத்திடுவாய்!
தமிழரைக் காத்திடுவாய்!!
அரகர ஆறுமுகா!
அருளே திருக்குமரா!
குரல்: சிலோன் மனோகர்
வரி: ?
1 comments:
அருமை அருமை!
Post a Comment