குழந்தை முருகன்! ஸ்ரீதேவி முருகன்!
குழந்தை முருகன்-களிலேயே மிக அழகான முருகன் யார்?
* "கந்தன் கருணை" மாஸ்டர் ஸ்ரீதர் = சாட்சாத் சிவபெருமானையே, கொஞ்சம் ஓவராப் பேசுவாரு:)
* ஆனால், "அகத்தியர்" ஸ்ரீ தேவி = அப்பாவி முருகனாய், "இப்ப என்ன நாரதரே செய்யலாம்?" -ன்னு ஏக்கமாய்க் கேட்கும் காட்சி:)
என் முருகன் = ஓவராப் பேசுறவனா?
(அ) அப்பாவி-செல்லம்-புஜ்ஜூ-ஜூஜ்ஜூ வா?:)))
IMHO, Sridevi is very apt for My Murugan Darling!
பெரியவர்களில்: சிவகுமார் முருகன் பொருத்தம்!
கண்ணனுக்கு எப்படி ஒரு NTR அமைஞ்சாரோ, முருகனுக்கு அப்படி ஒரு சிவாஜி அமையவில்லை!
எனினும், இருப்பவர்களில்... சிவகுமார், கொஞ்சம் நன்கு பொருந்தி வருவாரு!
பேசாம, என் அபிமான நடிகை.. சிலுக்கே முருகனா நடிச்சீறலாம்:)
சிலுக்கின் கண்ணும் = முருகன் வேலும் ஒன்னு தான்:))
ஆனால், சிலுக்கை முருகனா நடிக்க, ஆச்சாரக் காராள் விடுவாங்களோ என்னமோ?
சிவகுமாரையே, பல நிபந்தனைகளின் பின், முருகனா நடிக்க விட்டவங்களாச்சே:)
வாங்க, இன்னிக்கி "அப்பாவி முருகன் - ஸ்ரீ தேவி முருகனைப்" பார்ப்போம்:)
மலை நின்ற திருக்குமரா மால்மருகா - தமிழ்க்
கலை தந்த தவச்செல்வா வேல்முருகா!
(மலை நின்ற)
அலைபாயும் மனம் யாவும் உன்னிடம் நாடும்
நிலையான பேரின்ப அருள் வந்து கூடும்!
(மலை நின்ற)
தலைவா உன் புகழ்பாடும் அறுபடை வீடு
விளையாடும் விளையாட்டில் உனக்கில்லை ஈடு!
(மலை நின்ற)
படம்: அகத்தியர்
வரி: உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்
குரல்: TR மகாலிங்கம்
இசை: குன்னக்குடி
பாட்டெல்லாம் நல்லாத் தான் இருக்கு! அழகான வீணை இசை..
ஆனா, மயிலு மேல நாரதர் எப்படி ஏறலாம்?
என்னடா மயிலாரே? என்னவன் ஊர்தியில் இன்னொருவன்(ர்) ஏறுவதா?:))
4 comments:
// சிலுக்கின் கண்ணும் முருகன் வேலும் ஒன்னு தான்... //
எப்படீங்க இப்படி...? அசத்தல்...!!!
இனிமையான பாடல்... நன்றி...
எதுக்கு இந்தக் கொலை வெறி ?...:)))
அருமையான பாடல் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .
ஸ்ரீதேவி முருகன் ச்சோ ச்வீட்! :) அருமையான பாடல். நன்றி கண்ணா.
அப்பாவி முருகன் - ஸ்ரீ தேவி முருகன்
ரொம்ப பொருத்தம்..!
Post a Comment