அரஹரோஹரா!
அரஹரோஹரா முருகா அரஹரோஹரா
அரஹரோஹரா கந்தா அரஹரோஹரா
அரஹரோஹரா குமரா அரஹரோஹரா
அரஹரோஹரா வேலா அரஹரோஹரா
பச்சை மயில் வாகனனே அரஹரோஹரா
பழனி மலை பாலகனே அரஹரோஹரா
கச்சை யிலே உன் பெயரை அரஹரோஹரா
கச்சி தமாய் கட்டிக் கொண்டோம் அரஹரோஹரா
காவடிகள் எடுத்து வந்தோம் அரஹரோஹரா
கால்கடுக்க ஆடிவந்தோம் அரஹரோஹரா
வேலெடுத்து நீ வரணும் அரஹரோஹரா
வேதனைகள் தீர்த்திடணும் அரஹரோஹரா
(அரஹரோஹரா)
கண்மணியே கனியமுதே அரஹரோஹரா
கனிந்தநெஞ்சிற் கினியவனே அரஹரோஹரா
(ஞானப்)பழமுன்னைத் தேடிவந்தோம் அரஹரோஹரா
பழவினைகள் விரட்டிடுவாய் அரஹரோஹரா
(அரஹரோஹரா)
பலவாறாய் உனையிங்கு அரஹரோஹரா
பாசமுடன் அழைத்தோமே அரஹரோஹரா
பச்சைமயில் மீதேறி அரஹரோஹரா
இக்கணமே வந்திடுவாய் அரஹரோஹரா
(அரஹரோஹரா)
--கவிநயா
4 comments:
பச்சை மயில் வாகனனே அரஹரோஹரா
பழனி மலை பாலகனே அரஹரோஹரா
கச்சை யிலே உன் பெயரை அரஹரோஹரா
கச்சி தமாய் கட்டிக் கொண்டோம் அரஹரோஹரா
அருமையாக முருகன் அருள் பெற்றோம். நன்றி.
வருகைக்கு மிக்க நன்றி, இராஜராஜேஸ்வரி.
கோவணாண்டியாய் வந்த அரஹரோ ஹரா;
ஆவினன்குடியழகா ! அரஹரோஹரா;
சேவடிகள் தொழுதிடவே அரஹரோ ஹரா
காவடிகள் எடுத்து வந்தோம் அரஹரோ ஹரா
அரஹரோஹரா!
நன்றி லலிதாம்மா.
Post a Comment