9ராத்திரி-01: ஆறுபடைவீடும் ஒரே பாட்டில்!
இது ஒன்பதிரா (எ) அன்னையின் நவராத்திரி நேரம்! அந்த அன்னையின் வேலேந்தி தோளேந்தும் என் மன்னவன் வீட்டிலே, பாட்டு இல்லாமலா?
முருகன் ஆண்மகன் - அவனுக்கு ஏது நவராத்திரி என்று கேட்டால்...
அந்த முருகனுக்கு நான் உண்டு, எனக்கே நவராத்திரி! அவன் யுவராத்திரி-ன்னு வச்சிக்க வேண்டியது தான்:)
* அறுபடை வீடுகளும் ஒரே பாட்டில் வரும், சிலவே சில பாடல்களில், இதுவும் ஒன்று!
* இன்னொன்னு = சொந்தக் கவிதை, ஆறுபடைக் காவடிச் சிந்து, இங்கே!
படம்: குமாஸ்தாவின் மகள்
இசை: குன்னக்குடி
குரல்: சூலமங்கலம் சகோதரிகள்
வரி: பூவை செங்குட்டுவன்
இதை வலையேற்றித் தந்த நண்பர் பெங்களூர் குமரன் - கூமுட்டை (on twitter @kuumuttai) அவர்கட்கு, என் இனிய நன்றி!:)
எழுதி எழுதிப் பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்
(எழுதி எழுதி)
திருச்செந்தூர் வடிவேலும் திருத்தணிகை மாமயிலும்
சங்கத் தமிழில் கந்தன் புகழைப் பாடச் சொல்லிக் கேட்டு வரும்!
கந்தன் புகழைக் கேட்டுக் கேட்டு வேலும் மயிலும் ஆடி வரும்!
(எழுதி எழுதி)
பழமுதிர்சோலைப் பன்னீரும், சுவாமிமலை திருநீறும்
வள்ளிக் கணவன் முருகன் பெயரைப் பாடச் சொல்லி அருள் கூறும்!
வண்ணக் கவிதை பாடப் பாட, வாழ்வும் வளமும் தேடி வரும்!
(எழுதி எழுதி)
பழனிமலைப் பஞ்சாம்ருதமும், பரங்குன்றச் சந்தனமும்
உள்ளம் தன்னில் இன்பம் தந்து, குமரன் அருளைப் பாடி வரும்!
பிள்ளைத் தமிழை அள்ளித் தந்து, பேரும் புகழும் சேர்த்து விடும்!
(எழுதி எழுதி)
அறுபடை முருகன்கள் ஒரு சேர நிற்கும் அழகு!!!
6 comments:
வாவ்! அழகனிடத்தில் சொக்கிப் போனேன்! நன்றி கண்ணா. உங்க கையில் மட்டும் எப்படி சிக்குறான்?!
ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொன்று சிறப்பா? இன்று தான் தெரிந்து கொண்டேன்.
//உங்க கையில் மட்டும் எப்படி சிக்குறான்?//
இதுக்கு நான் என்ன சொல்லுவேன்?:)
நான் தான் அந்த சேவலங் "கொடியவனிடம்" சிக்கினேன்!!
//ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொன்று சிறப்பா? இன்று தான் தெரிந்து கொண்டேன்//
ஆம் குமரன்!
* திருப்பரங்குன்றம் = கல்யாணச் சந்தனம்
* திருச்செந்தூர் = கையில் பூ, செபமாலை இருப்பதால், வேல் சிலையாக இருக்காது! தோளில் சாய்த்து இருப்பார்கள்!
கல்வேலாக இல்லாததால், ஒவ்வொரு காலத்தின் போதும் ஒவ்வொரு வேலைப்பாடுள்ள வேல்...மினுமினுக்கும் ஐயாவுக்கு:)
* பழனி = பஞ்சாமிருதம் everyone knows
* சுவாமிமலை = வேதியர் வேள்வித் தீ திருநீறு...மணம் மிக்கது
* திருத்தணிகை = கருவறை முன்னே மயில் அல்ல, யானை! அதுவும் அவனைப் பார்த்து இருக்காமல், எதிர்ப்புறமாக...
அதனால் உற்சவர் மயில் வாகனம் மிகப் பெரிதாக இருக்கும்!
* பழமுதிர்சோலை = நூபுர
கங்கை என்னும் சிலம்பாற்று நீரும் பூவும் கலந்த பன்னீர்...மணம் மிக்கது! அழகருக்கும் இதே நீரால் தான் திருமஞ்சனம்! வேறு நீர் பயன்படுத்தினால் அழகரின் திருமேனி (அபரஞ்சிப் பொன்) கருத்துக் காட்டும்
திருச்செந்தூர் வடிவேலும், திருத்தணிகை மாமயிலும்
பழமுதிர்சோலைப் பன்னீரும், சுவாமிமலை திருநீறும்
பழனிமலைப் பஞ்சாம்ருதமும், பரங்குன்றச் சந்தனமும்...
//திருச்செந்தூர் வடிவேலும், திருத்தணிகை மாமயிலும்
பழமுதிர்சோலைப் பன்னீரும், சுவாமிமலை திருநீறும்
பழனிமலைப் பஞ்சாம்ருதமும், பரங்குன்றச் சந்தனமும்...//
மணக்குது என் மன்னவன் முருகனுக்கு
முதல் தடவையாக இந்த அழகான பாடலைக்கேட்கிறேன்.
நன்றி .
சுப்பு ரத்தினம்.
http://kandhanaithuthi.blogspot.com
Post a Comment