Sunday, November 04, 2007

வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப் பிள்ளையைப் பாடுவேனோ?


வஞ்சப்புகழ்ச்சி என்று தமிழிலும் நிந்தாஸ்துதி என்று வடமொழியிலும் சொல்லுவார்கள். வஞ்சப்புகழ்ச்சி என்பதோ புகழ்வது போல் இகழ்வது; நிந்தாஸ்துதி இகழ்வது போல் புகழ்வது. இந்தப் பாடல் இரண்டாவது வகையைச் சேர்ந்தது.

சிவபெருமானையே வணங்கி வரும் ஒரு புலவரிடம் முருகப்பெருமானைப் பற்றி பாடச் சொன்ன போது இந்தப் பாடலைப் பாடுவதாக சிவகவி திரைப்படத்தில் வருகிறது. நான் அந்தப் படத்தைப் பார்த்ததில்லை. அந்தப் படத்தில் இந்த நிகழ்ச்சி எப்படி வரும் என்பதைப் படம் பார்த்தவர்கள் சொல்லுங்கள். ஆனால் பாடலை மட்டும் கேட்டுப் பார்த்தால் முருகனைப் பாட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே முருகனைப் போற்றுவதாக இந்தப் பாடல் இருக்கின்றது என்று தோன்றுகிறது.

***

வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ? வெள்ளிமலை (வள்ளலை)
எந்தன்
சுவாமியைப் பாடும் வாயால் தகப்பன்
சாமியைப் பாடுவேனோ?

அப்பனைப் பாடும் வாயால் ஆண்டி
சுப்பனைப் பாடுவேனோ? என் அம்மை
அப்பனைப் பாடும் வாயால் பழனி ஆண்டி
சுப்பனைப் பாடுவேனோ?
வள்ளியின் கண் வலை வீழ் சிலை வேடன்
கள்ளனை பாடுவேனோ?

அம்பிகை பாகன் என்னும் அகண்ட
ஸ்யம்புவைப் பாடும் வாயால்
தும்பிகையான் தயவால் மணம் பெறும்
தம்பியைப் பாடுவேனோ?

திரைப்படம்: சிவகவி
வெளிவந்த வருடம்: 1943
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
இசை: ஜி.இராமனாதன்


பாடலைக் கேட்க இங்கே அழுத்தவும்

45 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) November 04, 2007 9:52 AM  

இப்படிப் பாடினவரு தான் கடைசில, சொப்பன வாழ்வில் மகிழ்ந்து, சுப்பிரமணிய சுவாமி, உனை மறந்தேன் -ம்பாரு!

படம் அருமை குமரன். கொண்டைய ராஜூ என்கிற ஓவியர்...மிக அற்புதமான தெய்வப் படங்கள் வரைவாரு. இவரின் படங்கள் தான் சென்னையில் எங்கள் வீட்டுப் பூஜையறையை அலங்கரிக்கின்றன.
இன்று பலர் வீட்டில் இருக்கும் பெருமாள் படங்கள் இவரின் கைவண்ணம் தான். கீழே அவர் கையொப்பம் இருக்கும்

G.Ragavan November 04, 2007 10:31 AM  

இது பொய்யாமொழியின் கதையை வைத்து எடுத்த படம். பொய்யாமொழிப் புலவராக நடித்தவர் தியாகராஜபாகவதர். சிவனைப் பாடுவேன். அம்பிகையைப் பாடுவேன். பொடியனையா பாடுவேன் என்று முதலில் மறுத்தவர். கோழியைப் பாடும் வாயால் முட்டையைப் பாடுவேனோ என்று செய்யுள்.

பின்னால் முருகன் வேடனாக வந்து மிரட்டிப் பாடச் சொன்னாராம். அவருடைய பெயர் முட்டை என்றும்...அதை வைத்துப் பாடச் சொன்னாராம். கொடிய கோடையில்....முட்டைக்கும் காடு.. அதாவது முள் தைக்கும் காடு என்று பொருள்.

உடனே வேடன்...சிரித்து விட்டு... என்னய்யா பாட்டு....வெயில் கொடுமையில் மரங்களே எரிந்தன என்கின்றீர்..முள் மட்டும் எரியாமல் இருக்குமோ என்று கேட்கிறார். அப்படி ஆட்கொண்டாராம் பொய்யாமொழியை.

cheena (சீனா) November 04, 2007 11:50 AM  

//தும்பிகையான் தயவால் மணம் பெறும்
தம்பியைப் பாடுவேனோ?//


இது வஞ்சப் புகழ்ச்சி மாதிரி தெரியலேயே

குமரன் (Kumaran) November 04, 2007 11:53 AM  

அதுவும் புகழ்ச்சி தான் சீனா ஐயா. இல்லாட்டி முருகனைப் பாட வந்த அருணகிரிநாதர் 'அத்துயரது கொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி அக்குறமகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணமருள் பெருமாளே' என்று தும்பிக்கையானைப் பாடியிருப்பாரா?

cheena (சீனா) November 04, 2007 11:57 AM  

உடன்படுகிறேன் குமரன்.

கோவி.கண்ணன் November 04, 2007 12:03 PM  

//சுவாமியைப் பாடும் வாயால் தகப்பன்
சாமியைப் பாடுவேனோ?//
உயர்வு நவிற்ச்சி அணி போன்றும் தெரிகிறது. 'தகப்பன்
சாமியைப்' இகழுவதற்கு உ(ய)ரிய வரி அது ?
:)

குமரன் (Kumaran) November 04, 2007 12:19 PM  

//இப்படிப் பாடினவரு தான் கடைசில, சொப்பன வாழ்வில் மகிழ்ந்து, சுப்பிரமணிய சுவாமி, உனை மறந்தேன் -ம்பாரு!
//

யாரைச் சொல்றீங்க இரவிசங்கர்? இராகவனையா? :-) ச்ச்சும்மா. :-)

எப்பவோ சேமிச்சு வச்சப் படம் இரவிசங்கர். இன்னைக்கு இந்த இடுகையில போட படம் தேடறப்ப பொருத்தமா தெரிஞ்சது. எங்க வீட்டுல இருக்கும் படங்களையும் போய் பார்க்க வேண்டும் யார் வரைந்தது என்று.

இந்தப் படத்தில் இருக்கும் நாலு பேரும் அம்சமா இருக்காங்க. மும்மூர்த்திகளும் அவர்களது இருகைகளைக் கூப்ப மற்ற இருகைகளில் அவர்களது ஆயுதங்கள் இருக்கின்றன. மானும் மழுவும் அப்பனின் கையில்; சங்கு சக்கரங்கள் மாமனின் கையில்; ஜபமாலையும் கமண்டலமும் மாமன் மகனின் கையில். கமண்டலம் தாங்கிய கை ஜபமாலையைத் தாங்கிய கைக்கு இணையாக இல்லாமல் தாழ்ந்து இருப்பது இயற்கையாக இருக்கிறது. :-)

குமரன் (Kumaran) November 04, 2007 12:20 PM  

ஏற்கனவே இந்தக் கதையைச் சொல்லியிருக்கீங்க இராகவன். முட்டையைப் பாடும் செய்யுள் முழுவதும் தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்கள்.

குமரன் (Kumaran) November 04, 2007 12:22 PM  

சுவாமியை விட உயர்த்திச் சொல்வது தான் தகப்பன் சுவாமி என்பது. அந்த வரியைப் படித்த பின்பும் இந்தப் பாடல் புகழவில்லை; இகழ்கிறது என்று சொல்ல முடியாது தானே கோவி.கண்ணன். அதனால் தான் தகப்பன் சுவாமியின் படத்தை இந்தப் பாடலுக்கு இட்டேன்.

ஓகை November 05, 2007 11:21 AM  

இந்தப் பாடல் கதையின் படி முருகனை இகழ்ந்தே பாடப்படுகிறது. சிவகவி படம் பார்த்தால் விளங்கும். கதையில் பொய்யாமொழிப் புலவராக வருபவர் சிவகவி என்று அழைக்கப் படுபவர். சிவனை விடுத்து மகனைப் பாடமாட்டேன் என்பதில் உறுதியாக இருப்பவர். அதைச் சொல்வதாக அமைந்த பாடல்தான் இப்பாடல்.

அப்படிப்பட்டவரை ஒரு சிறு பையனாக எதிர்கொண்டு தன் பெயர் முட்டை என்று சொல்லி தன் மேல் பாடச் சொல்கிறார் முருகன். முட்டைக்கும் காடு(முள் தைக்கும் காடு) என்று முடியும் ஒரு செய்யுளை பொய்யாமொழிப் புலவர் பாடும் போது ஜிரா சுட்டிய சொற்குற்றத்தைக் கூறி (மரங்களே எரிந்து சாம்பலாகும்படியான தகிக்கும் காட்டில் முள் மட்டும் எப்படி கருகாமல் இருந்து காலில் தைக்கும்?) தன் சுய உருவைக் காட்டி அவரை ஆட்கொள்வார் முருகன். அந்த செய்யுளைத் தேடித் தர முயற்சிக்கிறேன்.

மிக அருமையான இந்தப் பாடல் செஞ்சுருட்டி இராகத்தில் அமைந்தது.

இலவசக்கொத்தனார் November 05, 2007 9:41 PM  

சரி ஒரு முடிவுக்கு வாங்க!!

சிவமுருகன் November 05, 2007 11:04 PM  

இந்த படத்தை நானும் பார்த்துள்ளேன்.

நல்ல பாடல்!

//வஞ்சப்புகழ்ச்சி என்பதோ புகழ்வது போல் இகழ்வது;//

இது தெரியும்...

//நிந்தாஸ்துதி இகழ்வது போல் புகழ்வது.//

...இப்படி ஒன்னு இருக்கா - புதிய செய்தி :).

நன்றி.

Geetha Sambasivam November 06, 2007 1:44 AM  

இப்போ சிலநாட்கள் முன்னர் தான் பொதிகைத் தொலைக்காட்சியில் குறிப்பிட்ட காட்சிகளை இரண்டு, மூன்று நாட்கள் காட்டினார்கள். பாகவதர் நடிச்சு நான் பார்த்த முதல் படமும் இதுவே! படமும் முழுதும் காட்டவில்லை, எனினும் குறிப்பிட்ட காட்சிகளைப் பார்த்தேன். அருமையான பாடல்!

kaialavuman November 06, 2007 3:05 AM  

Thiru Kumaran,
miga arumayana padam "Sivakavi"

MKT-yin superhit-il ondru.
Padaththin kathayai prouthavarai ithu igaznthu padum padal than.
Aanal, padalai ezuthiya kavignar muruganai ninthanai seyya manamilaamal vanjapugazchi padiyirukalam

padam miss seyyathirgal. Samipathil vathyari-n (Subbaiah)padivil vantha "thuravi-seedan" kathayum padathil (veru vadivil) undu.

padathin matroru sirantha padal "Amba manam kanithu unathu kadi kan paraai"

pathykv November 06, 2007 10:44 AM  

Sivakavi paDam 1943-il 2/3 muRai parttirukkiren. ippOdu podhigaiyilum partEn. M.K.T-n arumaiyaana paDangaLil onRu.
enakku nindaastuti enRE tOnRugiRadu.
K.V.Pathy.

குமரன் (Kumaran) November 06, 2007 12:39 PM  

படத்தில் இந்தப் பாடல் 'சிவனை விடுத்து மகனைப் பாட மாட்டேன்' என்பதாகத் தான் அமைந்தது என்று சொன்னதற்கு நன்றி ஓகை ஐயா. அந்தச் செய்யுள் கிடைத்தால் சொல்லுங்கள்.

குமரன் (Kumaran) November 06, 2007 12:40 PM  

முடிவு என்ன முடிவு கொத்ஸ். படத்தில் வரும் நிகழ்ச்சி படி இந்தப் பாடல் நிந்தை தான்; பாடலை எழுதியவர் தான் இதனை நிந்தாஸ்துதியாக எழுதியிருக்கிறார். அம்புட்டுத் தான். :-)

குமரன் (Kumaran) November 06, 2007 12:41 PM  

சிவமுருகன். காளமேகப் புலவரின் பாடல்கள் பலவும் இந்த நிந்தாஸ்துதி வகையைச் சேர்ந்தவை தான். முதல் தடவை கேட்டால் கடவுளர்களைக் கிண்டல் செய்வது போல் தோன்றும். நெருங்கிப் படித்தால் அவை புகழ்வது தெரியும். :-)

குமரன் (Kumaran) November 06, 2007 12:42 PM  

ஆமாம் கீதா அம்மா. நிறைய தடவை இந்தப் பாடலை நானும் கேட்டிருக்கிறேன்.

குமரன் (Kumaran) November 06, 2007 12:45 PM  

திரு.சீனு. இந்த 'சிவகவி' படமும் ஹரிதாஸ் மாதிரி பல வருடங்கள் ஓடிய படமா?

நீங்கள் சொல்வது சரி என்று தான் படுகிறது. திரைக்கதைப் படி இங்கே நிந்தை தான் வர வேண்டும்; ஆனால் பாடலை எழுதியவர் நிந்தாஸ்துதியாக எழுதியிருக்கிறார்.

அம்பா.... மனம் கனிந்து உனது கடைக்கண் பார்...ஜகதம்பா... பாடலை நானும் கேட்டிருக்கிறேன். படத்தைத் தான் எப்போது பார்க்கப் போகிறேனோ?!

குமரன் (Kumaran) November 06, 2007 12:47 PM  

ஆமாம் பதி ஐயா. 43ல் 2/3 முறை பார்த்திருக்கிறீர்களா? இதுவும் பல வருடங்கள் ஓடிய படமா? ஹரிதாஸ் ஒரு தீபாவளிக்கு வந்து மூன்று வருடங்கள் தொடர்ந்து ஓடி நான்காவது வருட தீபாவளி அன்று தான் எடுத்தார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். மதுரை சிந்தாமணி தியேட்டர் 'சிந்தாமணி' படத்தில் வந்த வருவாயை வைத்துக் கட்டியது என்றும் கேள்விபட்டிருக்கிறேன்.

kaialavuman November 07, 2007 2:57 AM  

//இந்த 'சிவகவி' படமும் ஹரிதாஸ் மாதிரி பல வருடங்கள் ஓடிய படமா? //
Thiru Kumaran,

appadithan irukavendum. Thiru Pathy-yum mattravargalum solvathaal. Matrapadi ippadam naan pirapathaku pala pala varudangal munnal vantha padam. Naan vayathilum siriyavan than

[ofcourse, mattra annaivarum ungalai vida siriyavargal than; because profile padi ungal vayathu 1035!!!!!]

kaialavuman November 07, 2007 3:01 AM  

//படத்தைத் தான் எப்போது பார்க்கப் போகிறேனோ?!//

samipathil kUda DD-yil intha padam pottargal. Thodarnthu 3 natkal 3 arumayana MKT padangal [DD-yil mattum than ithumathiri podamudiyum. Matravagaluku 1000 commercial & political thevaigal]

ENNAR November 07, 2007 8:33 AM  

நன்றாக உள்ளது

G.Ragavan November 07, 2007 5:09 PM  

// வஞ்சப்புகழ்ச்சி என்று தமிழிலும் நிந்தாஸ்துதி என்று வடமொழியிலும் சொல்லுவார்கள். வஞ்சப்புகழ்ச்சி என்பதோ புகழ்வது போல் இகழ்வது; நிந்தாஸ்துதி இகழ்வது போல் புகழ்வது. இந்தப் பாடல் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. //

குமரன் தமிழ் இலக்கணப்படி வஞ்சப்புகழ்ச்சி என்பது புகழ்வது போல இகழ்வது மட்டுமல்ல. இகழ்வது போலப் புகழ்வதும் கூட. இந்தப் பாடல் வஞ்சப்புகழ்ச்சி வகையைச் சார்ந்ததே. ஆனால் உண்மையான பொய்யாமொழியின் செய்யுள் இகழ்ச்சி மட்டுமே. கோழியைப் பாடுகிறவன் முட்டையைப் பாடுவானோ என்று போகும். அது என்னிடமுள்ள தனிப்பாடல் திரட்டு என்ற நூலில் இருக்கிறது. ஆனால் அந்த நூல் பெங்களூரில் இருக்கிறது.

cheena (சீனா) November 07, 2007 9:46 PM  

ராகவன் - தகவலுக்கு நன்றி.

உடன்படுகிறேன் கருத்துக்கு

வஞ்சப்புகழ்ச்சி என்பது பழித்தலைப் போல புகழ்வதும், புகழ்வதைப் போல பழித்தலும் என இருவகைக்கும் பொதுவான அணி.

இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்

குமரன் (Kumaran) November 07, 2007 9:56 PM  

உண்மை தான் திரு. சீனு. என் ப்ரொபைல் படி நான் இங்கிருக்கும் எல்லாரிலும் வயதில் மூத்தவன் தான். ஆனால் என்ன நம்மாழ்வார் புளியமரப்பொந்தில் பல வருடம் மோனத்தில் இருந்ததைப் போல் நானும் ஆயிரம் வருடம் மோனத்தில் இருந்தேன் போலும். -)

குமரன் (Kumaran) November 07, 2007 9:56 PM  

நன்றி என்னார் ஐயா.

குமரன் (Kumaran) November 07, 2007 9:56 PM  

உண்மை தான் இராகவன். தமிழ் இலக்கணப்படி வஞ்சப்புகழ்ச்சி அணியின் விளக்கம் 'புகழ்வது போல் பழிப்பதும் பழிப்பது போல் புகழ்வதும்' தான். நிந்தாஸ்துதி என்பது பழிப்பது போல் புகழ்வது மட்டுமே.

இந்தப் பாடல் வஞ்சப்புகழ்ச்சியாகத் தான் தோன்றுகிறது. பொய்யாமொழி புலவரின் பாடலை இணையத்தில் தேடிப் பாருங்களே. தனிப்பாடல் திரட்டுகளை மதுரைத் திட்டத்தில் பார்த்ததாக நினைவு. நீங்கள் சொல்லும் செய்யுள் இருக்கிறதா என்று நானும் பார்க்கிறேன்.

pathykv November 09, 2007 5:17 AM  

niinDa naaTkaL ODiyadu,(ettanai vaarangaL enbadu ninaivillai).
ippaDappaDalgaLai en pakkattu viiTTu paTTunuul nesavaaLargal paadikkonDE neyvadu ninaivukku varugiRadu.
K.V.Pathy.

யோகன் பாரிஸ்(Johan-Paris) November 09, 2007 7:55 PM  

குமரா!
நான் பாகவதர் ரசிகன்...இவர்..திருநீலகண்டர் 'மறைவாய்ப் புதைத்த ஓடு ' என் மிகவிருப்பப் பாடல்..

குமரன் (Kumaran) November 10, 2007 8:50 PM  

நன்றி பதி ஐயா. பட்டுநூல் நெசவாளர்கள் பாடிக் கொண்டே நெய்ய ஒரு நல்ல பாடல் இது.

குமரன் (Kumaran) November 10, 2007 8:51 PM  

யோகன் ஐயா. நான் திருநீலகண்டர் படப் பாடல்களைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொன்ன பாடலைக் கேட்ட நினைவில்லை. இன்று கேட்டுப் பார்க்கிறேன்.

முன்பு ஒரு முறை எப்போதாவது புதுமையாகக் கேட்க வேண்டும் என்றால் நான் கேட்பது இந்தப் பாடல்களை என்று சொன்னேன். பாகவதர் பாடல்களுக்கு அதில் முதல் இடம். :-)

Unknown November 10, 2007 10:44 PM  

ஏ...ஆத்தா...(remix) கேட்டுட்டே இந்த பதிவ படிச்சதாலே...ஒன்னும் சொல்ல வரலே..மன்னிக்கனும்.

எப்பிடி இருந்தாலும், பாகவதரின் சில பாட்டுக்களை கேட்டிருக்கிறேன்.

குமரன், நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!

குமரன் (Kumaran) November 10, 2007 11:45 PM  

தஞ்சாவூரரே. இந்த பாட்டையும் ஒரு தடவை கேட்டுப் பாருங்க எல்லா ரீமிக்ஸும் கேட்டு முடிச்ச பின்னாடி நேரம் இருந்தா. :-)

Raghavan alias Saravanan M November 12, 2007 7:52 AM  

நான் இந்தப் படத்தைப் பார்த்ததில்லை.. பாடலையும் கேட்டதில்லை..

இராகவன் சொன்னது சரி. வஞ்சப்புகழ்ச்சி என்பது இரண்டுக்கும் பொருந்தும்.

தகவலுக்கு நன்றி பெருமக்களே!

குமரன் (Kumaran) November 14, 2007 1:15 PM  

இராகவ சரவணன்,

இந்த முறையாவது இந்தப் பாடலைக் கேட்டீர்களா? வஞ்சப்புகழ்ச்சி என்று பாடலைப் படித்துவிட்டு மட்டும் சொல்கிறீர்களா?

அதென்ன பெருமக்கள் என்றொரு நக்கல்? :-)

Raghavan alias Saravanan M November 15, 2007 2:46 AM  

@குமரன்,

//இந்த முறையாவது இந்தப் பாடலைக் கேட்டீர்களா? வஞ்சப்புகழ்ச்சி என்று பாடலைப் படித்துவிட்டு மட்டும் சொல்கிறீர்களா? //

கேட்டேன். கேட்டேன்! :) 'இதற்கு முன்' என்ற சொற்களைச் சேர்த்திருந்திருக்க வேண்டும் நான்!

கேட்டு விட்டுத் தான் சொன்னேன் ஐயா.

//அதென்ன பெருமக்கள் என்றொரு நக்கல்? :-) //

நக்கலும் இல்லை.. சிக்கலும் இல்லை! திருத்தொண்டு ஆற்றும் பெருமக்கள் என்ற எண்ணத்தில் இயம்பினேன் அவ்வளவே! சரிதானே?

குமரன் (Kumaran) November 15, 2007 3:54 PM  

சரி தான் சரவண இராகவன். விளையாட்டுக்குச் சொன்னேன். நீங்கள் எந்த முறையில் சொன்னீர்கள் என்று புரிந்து தான் இருந்தது. :-)

பெருமக்கள் இல்லை; சிறுதொண்டர் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.

Sridhar Narayanan November 15, 2007 7:02 PM  

அருமையான பாடல். இதை கேட்கும்போது எங்களது தாத்தா சொல்லும் ஒரு 'பகிடி' ஞாபகம் வருகிறது. இந்த பாடலை ஒரு நாடகத்தில் நாடக நடிகர் 'பகிடி' செய்து பாடுவதாக பாடி காமிப்பார். 'லட்டுவை தின்ன வாயால், முட்டையை திம்பேனோ; குஞ்சா லாடுவை தின்ற வாயால், கோழி முட்டையை திம்பேனோ' எனறு வரும் அந்த பாடல் :-))

பின்னூட்டத்தில் பல தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றிகள் பல!

குமரன் (Kumaran) November 17, 2007 8:20 PM  

Sridhar Venkat,

அருமையான பகிடி தான். :-) நன்றிகள்.

ஓகை November 18, 2007 12:48 PM  

பொய்யாமொழிப் புலவர் முருகனிடம் பாடிய பாடல்:

பொன்போலும் கள்ளிப்பொறி பறக்கும் கானலிலே
என்பேதை செல்லற்கியைந்தனளே - மின்போலும்
மானவேல் முட்டைக்கு மாறாயதெவ்வர் போம்
கானவேல் முட்டைக்கும் காடு.

இப்பாடலின் பொருளும் மற்றும் ஏராளமான தகவல்களும் கொண்ட இப்பதிவைப் பாருங்கள்.

குமரன் (Kumaran) November 18, 2007 9:56 PM  

ஆகா. அருமை அருமை ஓகை ஐயா. செய்யுளைத் தந்ததற்கும் சுட்டியைத் தந்ததற்கும் மிக்க நன்றி.

குமரன் (Kumaran) January 12, 2008 6:57 PM  

http://gragavan.blogspot.com/2008/01/blog-post.html

நாகு (Nagu) November 26, 2016 10:16 AM  

https://www.youtube.com/watch?v=h7_AKTFpGvk

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP