கந்த சஷ்டி - 2: அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி அவர் மேலாய்...
இது ஒரு சிறந்த திருப்புகழ் பாடல். எல்லா திருப்புகழ் பாடல்களும் ஓசை நயம் மிக்கவை தான். அவற்றுள் இந்தப் பாடல் தாள கதியில் மிக மிகச் சிறந்து விளங்குகின்றது.
அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி
அயன் எனவாகி அரி எனவாகி அரன் எனவாகி அவர் மேலாய்
இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே
இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வர வேணும்
மகபதியாகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே
வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே
சககெனசேகு தகுதிமித்தோதி திமியென ஆடும் மயிலோனே
திருமலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவு பெருமாளே
பாடலை கேட்க இங்கே அழுத்தவும்
24 comments:
மிகவும் அழகான புகழ்ப் பாடல் குமரன்.
என்ன ஒரு சந்தம்! என்ன ஒரு தாள மெட்டு! நடனப் பாடலில், கந்தனே நடனமாடி வருவது போல் இருக்கு!
சஷ்டியின் ஆறு நாள் பதிவுகளில் பதிவிட, இராகவனை அழைத்தேன். ஜிடாக்கில் உங்களை அழைக்க எண்ணிக் கொண்டே வந்து பார்த்தா, உங்க பதிவு draft mode இல் இருந்தது! :-)
மிகவும் நன்றி!
மூன்றாம் படம் கதிர்காமம்! நான்காம் படம் பழமுதிர் சோலை அல்லவா?
பாட்டின் பொருளையும் பதிவில் சொல்லி விடுங்களேன்!
இப்பப் பாத்து, ஆடியோ மக்கர் பண்ணுகிறது என் கணினியில் :(
திருப்புகழ் பாடல் வரிகளையும், முருகபெருமான் படங்களையும் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி... :(
பழமுதிர்சோலை பற்றி ஒரு கேள்வி... மதுரை அருகேயுள்ள அழகர்கோயில் (திருமாலிருஞ்சோலை)தானே பழமுதிர்சோலை? மற்ற ஐந்து படைவிடுகளிலும்போல, பழமுதிர்ச்சோலையிலும் முடிகாணிக்கை செலுத்தும் வசதி இருக்கிறதா?... அவசரமில்லை... மெல்ல விசாரித்து சொல்லுங்கள்.. நன்றி.
அகரமுமாகி அதிபனுமாகி திருப்புகழ் எனக்கு மிகவும் பிடித்தது. கொடுத்தமைக்கு நன்றி.
இதைப் பித்துக்குளியார் பாடியும் கேட்டிருக்கிறேன். இதை விடவும் அருமையாக இருக்கும்.
// பாரதிய நவீன இளவரசன் said...
பழமுதிர்சோலை பற்றி ஒரு கேள்வி... மதுரை அருகேயுள்ள அழகர்கோயில் (திருமாலிருஞ்சோலை)தானே பழமுதிர்சோலை? மற்ற ஐந்து படைவிடுகளிலும்போல, பழமுதிர்ச்சோலையிலும் முடிகாணிக்கை செலுத்தும் வசதி இருக்கிறதா?... அவசரமில்லை... மெல்ல விசாரித்து சொல்லுங்கள்.. நன்றி.//
பழமுதிர்ச்சோலையிலும் முடிக்காணிக்கை செலுத்தும் வசதி இருக்கிறது. எனக்கும் இந்த ஐயம் இருந்தது. சென்ற முறை சென்ற பொழுது ஐயத்தைத் தீர்த்துக் கொண்டேன். ஆயினும்..மதுரைக்காரர்கள் இதை இன்னும் சரியாகச் சொல்வார்கள். உங்கள் கேள்வியை இன்னமும் சண்மதச் செல்வர் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அவர் வந்தாலும் தகவல் கிடைக்கும்.
குமரன் சப்தகம் என்பதன் பொருள் என்ன ?
ஒரு முருகன் பாடலில் குறிப்பிட்டு இருந்தது பொருள் தெரியவில்லை
http://www.murugan.org/texts/SubramaNyaSapthakam.pdf
கோவி. கண்ணன். 'சப்த' என்றால் வடமொழியில் ஏழு என்று பொருள்.
சப்தமி என்று பௌர்ணமிக்குப் பின்னர் வரும் ஏழாம் நாளையும் அமாவாசைக்குப் பின்னர் வரும் ஏழாம் நாளையும் சொல்வதைக் கவனித்திருப்பீர்கள். பிரதம - முதன்மை - பிரதமை - முதல் நாள்; த்விதீய - இரண்டாம் - த்விதீயை - இரண்டாம் நாள்; த்ரிதிய - மூன்றாம் - த்ரிதியை - மூன்றாம் நாள்; சதுர்த்த - நான்காம் - சதுர்த்தி - நான்காம் நாள்; பஞ்சம - ஐந்தாம் - பஞ்சமி - ஐந்தாம் நாள்; சஷ்ட - ஆறாம் - சஷ்டி - ஆறாம் நாள்; சப்தம - ஏழாம் - சப்தமி - ஏழாம் நாள்; அஷ்டம - எட்டாம் - அஷ்டமி - எட்டாம் நாள்; நவம - ஒன்பதாம் - நவமி - ஒன்பதாம் நாள்; தசம - பத்தாம் - தசமி - பத்தாம் நாள்; ஏகாதச - பத்துடன் ஒன்று - பதினொன்றாம் - ஏகாதசி - பதினொன்றாம் நாள்; த்வாதசி - பத்துடன் இரண்டு - பன்னிரண்டாம் - த்வாதசி - பன்னிரண்டாம் நாள்; த்ரயோதச - பதின்மூன்றாம் - த்ரயோதசி - பதின்மூன்றாம் நாள்; சதுர்த்தச - பதினான்காம் - சதுர்த்தசி - பதினான்காம் நாள்.
நீங்கள் சுட்டியிருக்கும் பாடல் ஏழு செய்யுள்களைக் கொண்டிருப்பதால் அது சப்தகம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது வடமொழி இலக்கணத்தை ஒட்டி அழைக்கும் வழக்கம். வடமொழிப் பாடல் ஒன்று ஏழு சுலோகங்கள் கொண்டு அமைந்திருந்தால் அதனைச் சப்தகம் என்று சொல்வார்கள். இந்தப் பாடல் தமிழ்ப்பாடலாக இருந்தாலும் ஏழு செய்யுள்களால் அமைத்து சப்தகம் என்று பெயரிட்டிருக்கிறார்கள். எட்டு சுலோகங்கள் உள்ள வடமொழிப் பாடல்களை அஷ்டகம் என்று சொல்வார்கள். எடுத்துக்காட்டு: கிருஷ்ணாஷ்டகம்.
இரவிசங்கர்.
நடனப் பாடலாக இந்தப் பாட்டைக் கேட்டது தான் என்னைக் கவர்ந்தது. உடனே அந்தச் சுட்டியை வெகு நாட்களுக்கு முன்னரே சேமித்து வைத்தேன். இன்று தான் இந்தப் பாடலை இடுவதற்கு நேரம் வந்தது போலும்.
ஆமாம் ஒவ்வொரு படத்தையும் அந்த படங்களுக்குப் பின்னர் வரும் பாடல் வரிகளுக்குப் பொருத்தமாக இடவேண்டும் என்று இட்டிருக்கிறேன்.
பாட்டின் பொருளைப் பதிவில் சொல்லலாம் என்று தான் நினைத்தேன். மிக ஆழமான பொருளாக இருந்தது. சரி. அது எஸ்.கே. எழுதும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். எஸ்.கே. ஏற்கனவே இந்தப் பாடலுக்குப் பொருள் எழுதிவிட்டாரா? அப்படியென்றால் தேடிப் பார்த்து சுட்டியை இணைத்து விடுகிறேன்.:-)
இளவரசரே. இன்னுமொரு முறை முயன்று பாருங்கள் - ஒலிப்பதிவைக் கேட்க முடிகிறதா என்று.
என்னதிது சிரிப்பானைப் போடாமல் அழுவானைப் போட்டுவிட்டீர்கள்? என்ன வருத்தம்?
பழமுதிர்ச்சோலையிலும் முடிகாணிக்கை செலுத்தும் வசதி இருக்கிறது. அழகர் கோவிலிலும் உண்டு. சௌராஷ்ட்ரர்களில் பலருக்கு கள்ளழகர் குலதெய்வம் - நேரே கோவிலில் முதல் முடி இறக்குபவர்களும் இருக்கிறார்கள்; சித்திரையில் வைகையில் இறங்கும் போது முதல் முடி இறக்குபவர்களும் இருக்கிறார்கள் - அன்பாக அழகரப்பன் என்று அவனை அழைப்பார்கள்.
பித்துக்குளியார் பாடியதை நானும் கேட்டிருக்கிறேன் இராகவன். அவருடைய வழக்கம் போல் ஏற்ற இறக்கங்களுடன் நன்கு பாடியிருப்பார்.
//இந்தப் பாடல் தமிழ்ப்பாடலாக இருந்தாலும் ஏழு செய்யுள்களால் அமைத்து சப்தகம் என்று பெயரிட்டிருக்கிறார்கள். எட்டு சுலோகங்கள் உள்ள வடமொழிப் பாடல்களை அஷ்டகம் என்று சொல்வார்கள். எடுத்துக்காட்டு: கிருஷ்ணாஷ்டகம்.//
குமரன்,
வழக்கம் போல் நிறைய தகவல்களை தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி !
எங்கெங்கும், எல்லா பொருட்களிலும் நிறை பரம்பொருள், எல்லாவற்றிலும் மேலான பரம்பொருள், எம்பெருமான், எம்மை ஆட்கொண்ட இனியோன், எம்முன் எழுந்தருள வேண்டும் எனப் பாடுகிறார் நாதர்.
பாடலின் முழு பொருள் விளக்கமும் கௌமாரம் தளத்தில் காணலாம்.
ஆமாம் ஜீவா. பொருள் இருக்கும் பக்கத்தின் சுட்டியைத் தந்ததற்கு நன்றி.
நேற்று இங்கு அட்லாண்டாவில் தமிழ் சங்கத்தின் தீபாவளி நிகழ்சியில் திருப்புகழ் காலட்சேபம் போல சுமார் இருபது நிமிடத்திற்கு செய்தார்கள்: அருணகிரி நாதரின் பாடல்களில் மிஞ்சி நிற்பது அழகா, தத்துவமா என்ற தலைப்பில்!
பாதிமாதி நதி பாடலில் தொடங்கி, உருவாய் அருவாய் வரை. பாடல்களின் நேரடிப் பொருளும், மறைந்திருக்கும் தத்துவப் பொருளும் விளக்கினார்கள்.
மகிழ்வுக்குரியதல்லவா, ஆனால் பார்வையாளர்களிடம் இருந்து வந்த எதிர்வினைதான் வருத்தத்திற்குரியது. பத்து நிமிடத்திற்கு கூட அவர்களால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. கைதட்டியும், கத்தியும், விசில் அடித்தும் நிகழ்சிக்கு இடையூறாய் இருந்தார்கள் அந்த மறத்தமிழர்கள் :-(
அழகுதமிழ் திருப்புகழ்ப் பாடல் நடனப் பாடலாக ஒலித்தது. கேட்டு மகிழ்ந்தேன். சந்தங்களுக்கு திருப்புகழ் தான். அருமை.
ஆன்மீகத் தொண்டாற்றும் அன்பர்களுக்கு நல்வாழ்த்துகள்
மனதில் இந்த பாடலைப் பாடியவாறு நேற்று திருத்தணி சென்றேன், இன்று இங்கு பதிவாக பார்க்கிறேன்....நன்றி.
படங்கள் கொள்ளை அழகு!
பாடலும் அழகு!
நன்றிகள் பல.
@ஜீவா,
என்ன செய்வது? அவரவர் விருப்பங்கள் அந்தளவுக்கு மாறி இருக்கின்றன. இஷ்டம் இல்லாதவர்கள் ஏன் அந்த மாதிரி கலாட்சேபங்களுக்கு வரவேண்டும் என்பது தான் முதற்கண் கேள்வி!
@சப்தகம் என்றால் ஒரு விஷயத்தை ஏழுநாட்கள் விரிவுரையாக சொல்வது
உதரணமாக பாகவதத்தை ஏழுநாட்களில் சொல்லுவார்கள். பரிக்ஷித்து ராஜனை பாம்பு கடித்து 7 நாட்களில் இறந்து விடுவான் என்ற சொன்னவுடனே அந்த ஏழு நாட்களும் அவ்ன் பாகவதத்தை கேட்டு பல்ன் அடைந்தான் என்று கூறுவார்கள்
திராச. நீங்கள் சொல்வது சப்தாகம். ஏழு நாட்களில் செய்யப்படும் வேள்வியை முதலில் சப்தாகம் என்ற சொல் குறித்தது. பின்னர் நீங்கள் சொன்னது போல் விரிவுரைகளை ஏழு நாட்கள் சொல்வதற்கும் ஏழு நாட்களில் இறை நூல் ஒன்றை ஓதுவதற்கும் அமைந்தது. இரண்டுமே ஒரு வேள்வி போல் என்ற பொருளில் அந்த சப்தாகம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமே.
தற்போதும் கிருஷ்ணபிரேமி சுவாமிகளும் முரளிதர சுவாமிகளும் பல சப்தாகங்களை நடத்துகிறார்கள்.
இருபது நிமிடமோ இரண்டு நிமிடமோ போரடிக்கும் என்ற முன்முடிவு செய்துவிட்டால் அப்புறம் எப்படி கேட்பார்கள் ஜீவா? வலைப்பதிவுகளிலும் சில நேரங்கள் அப்படி நடப்பது உண்டு தானே. என் பதிவுகள் என்றாலே போரடிக்கும் என்று முன்முடிவு செய்துவிட்டு என் பதிவுகளைத் தொடாமலே புறக்கணிப்பவர்கள் எத்தனை எத்தனை பேர். அதே போன்ற முன்முடிவுகளைச் செய்துவிட்டு நான் படிக்காமல் விடும் பதிவுகள் தான் எத்தனை எத்தனை. என்ன சொல்ல வருகிறேன் என்றால் இந்த மாதிரி நட்டங்கள் சில நேரங்களில் ஏற்படத்தான் செய்கின்றன. நமக்குப் பிடிப்பதெல்லாம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று இல்லை; பிடிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. அதனால் மறத்தமிழர்கள் என்று சொல்லி வருந்த வேண்டாம்.
நீங்களாவது சொற்பொழிவை இரசிக்க முடிந்ததா ஜீவா?
நன்றி சீனா ஐயா.
திருத்தணிகை மலை படிகளெல்லாம் திருப்புகழ் பாடுமே மௌலி. திருமுருகன் திவ்ய தரிசனம் நன்கு அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
நன்றி இராகவ சரவணன்.
//உங்கள் கேள்வியை இன்னமும் சண்மதச் செல்வர் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அவர் வந்தாலும் தகவல் கிடைக்கும்//
ஆகா...
ஜிரா மாட்டி வுட்டுட்டாரா? :-)
மருதக்காரு குமரனே சொல்லிப்புட்டாரு...முடி காணிக்கை செய்யும் வசதி உண்டு-ன்னு!
இருக்குங்க...பாரதிய நவீன இளவரசரே!
முருகன் சன்னிதியின் அருகில் சென்ற முறை பார்த்தேன்!
சில சமயம் மேலே ராக்காயி அம்மன் கோவிலிலும் நாவிதர்கள் இருக்காங்க!
முருகன் சன்னிதியில் முடி காணிக்கைக்குன்னு தனியா மண்டபம் இருப்பதாய் நினைவில்லை! ஆனால் ஆள் சொல்லி விட்டால் நிச்சயம் செய்கிறார்கள்! அர்ச்சனைச் சீட்டு அலுவலகத்திலும் கேட்டுப் பாருங்கள்!
ராக்காயி அம்மன் கோவிலுக்கு ஆட்களைச் சொல்லி வரவழைப்பார்கள்!
Post a Comment