முத்தமிழ் எப்போது பிறந்தது?
==========================================
முத்தமிழ் எப்போது பிறந்தது?
"முத்தமிழ் எப்போது பிறந்தது?" என்று கேட்டவுடன்
ஒரு கவிஞர் பதிலை எவ்வளவு அழகாகச்
சொல்கின்றர்ர் பாருங்கள்.
முதன்முதல் இறைவன் திருவாய் திறந்தாராம்
முத்தமிழ் பிறந்ததாம்!
ஒரு சிறந்த பாடலைப் பதிவிடுகிறேன். படித்து இன்புற
வேண்டுகிறேன்
-------------------------------------------------------------------
வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்
------வேல்போல் இருக்குதடி
வேல்கொண்டு நின்றவன் திருமுகம் பர்த்தால்
------பால்போல் தெரியுதடி
கூவிடும் சேவல் கொடிமே லிருந்து
------விழித்திடச் சொல்லுதடி
விழித்ததும் என்னை நினைத்திரு என்றவன்
------சொல்வது தெரியுதடி
கந்தனின் கருணை மழைவரும் என்றே
------மாமயில் ஆடுதடி!
மாமயில் விரித்த தோகையின் கண்கள்
------வேலனைத் தேடுதடி!
முதன்முதல் இறைவன் திருவாய் திறந்தான்
------முத்தமிழ் பிறந்ததடி!
முத்தமிழ் இன்பம் அனைத்திலும் முருகன்
------திருமுகம் தோன்றுதடி
எப்போது பார்த்தாலும் சிரித்திருக்கும் - அது
------ஆறு முகங்களடி!
எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும் - அது
------பன்னிரு கைகளடி
பாடல் ஆக்கம்: கவிஞர் திரு. பூவை செங்குட்டுவன்
இசை: திரு. ராமச்சந்திரன்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்
அன்புடன்,
அடியார்க்கு அடியவன்
SP.VR. சுப்பையா
8 comments:
கவிஞர் பூவை செங்குட்டுவன் கவிதைகள் சிலவற்றைத் தான் படித்துள்ளேன் சுப்பையா சார்...
இந்தப் பாடல் இது தான் முதல் முறை...அற்புதம்! அற்புதம்!!
ஆதியிலே தேவன் வார்த்தையாய் இருந்தார் என்று பைபிள் சொல்கிறது!
பாருங்க...முதன்முதல் இறைவன் திருவாய் திறந்தான்.....முத்தமிழ் பிறந்ததடி!
அதோடு மட்டும் நின்று விட்டதா?
அப்புறம் இறை வாக்குக்கு என்ன பெருமை?
அதற்கப்புறம் எல்லாம் இன்ப மயம் தானே! அதான், முத்தமிழ் இன்பம் அனைத்திலும் முருகன்...திருமுகம் தோன்றுதடி
செளந்தரா கைலாசம், பூவை செங்குட்டுவன் என்று அண்மைக் காலக் கவிஞர்களாகத் தேடி எடுத்துத் தரும் தங்கள் முயற்சி, சாலவும் சிறந்த ஒன்று!
முருகனருள் முன்னிற்கும்!!!
///k.R.S அவர்கள் சொல்லியது: அதற்கப்புறம் எல்லாம் இன்ப மயம் தானே! அதான், முத்தமிழ் இன்பம் அனைத்திலும் முருகன்...திருமுகம் தோன்றுதடி ///
வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால் வேல்போல் இருக்குதடி என்று பாடலைத் துவ்ங்கியிருக்கும் கவிஞரின் கற்பனை வளத்தைப் பாருங்கள். அவர் அடுத்தடுத்து எழுதிய வரிகள் எல்லாமே சிறப்பாக மனதைத் தொடும்படியிருக்கின்றன! வருகைக்குக் நன்றி நண்பரே!
பூவை செங்குட்டுவன் பல முருகன் பாடல்களை இயற்றியிருக்கின்றார். ஆனால் இந்தப் பாடல் இதுவரை கேட்கக் கிடைத்திராதது. படிக்கவாவது இன்று கிடைத்ததற்கு தங்களுக்கு நன்றி பல.
வாய் திறந்தான் முத்தமிழ் பிறந்தது என்ற வரிகளைப் படிக்கையில் எனக்கு அருணகிரி பயன்படுத்திய ஒரு பெயர் நினைவிற்கு வருகிறது. நகையேவிய நாதர் என்ற பெயர் அது. ஈசனுக்கு அந்தப் பெயராம். முப்புரம் எரிசெய்த பொழுது செருக்குற்ற அனைவரும் நாணும் வகையில் சிரித்தே எரித்தாராம். அப்படி முப்புரங்களின் மேல் நகை (சிரிப்பை) ஏவி அழித்ததால் அவரை நகையேவிய நாதர் என்கிறார் அருணகிரி. அது போல இதுவும். மிகவும் அருமை.
//// ஜி.ரா அவர்கள் சொல்லியது நகையேவிய நாதர் என்ற பெயர் அது. ஈசனுக்கு அந்தப் பெயராம். முப்புரம் எரிசெய்த பொழுது செருக்குற்ற அனைவரும் நாணும் வகையில் சிரித்தே எரித்தாராம். அப்படி முப்புரங்களின் மேல் நகை (சிரிப்பை) ஏவி அழித்ததால் அவரை நகையேவிய நாதர் என்கிறார் அருணகிரி. அது போல இதுவும். மிகவும் அருமை.///
நகையேவிய நாதர் என்று பாடிய அருணகிரியார் பற்றிய உங்கள் செய்தியும் புதிய செய்தி நண்பரே!
ஒரு பாட்டிலிருந்தும், அதைப் படித்து வரும் பின்னூட்டங்களிலில் இருந்தும் எவ்வளவு நல்ல செய்திகள் -- அறிந்திராத செய்திகள் கிடைக்கின்றன்! பதிவுகளின் பயன்களில் இதுவும் குறிப்பிடத்தக்க ஒன்று!
//வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்
------வேல்போல் இருக்குதடி
வேல்கொண்டு நின்றவன் திருமுகம் பர்த்தால்
------பால்போல் தெரியுதடி//
//எப்போது பார்த்தாலும் சிரித்திருக்கும் - அது
------ஆறு முகங்களடி!
எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும் - அது
------பன்னிரு கைகளடி//
காலையில் எழுந்து அவன் படத்திற்கு முன்பு நின்று அப்பா முருகா காப்பாத்து என்று சொல்லும் போது, அப்பொழுது யாமிருக்க பயம் ஏன் என்று கூறும் அவன் சிறிப்பு முகத்தைப் பார்த்தால் மனதிற்கு தனி தெம்பு வரும். இந்த அருமையான பாடலை பதிவிலிட்ட திரு சுப்பையாவிற்கு எனது நன்றி
அருமையான பாடல் ஐயா. ஒரு முறை பாடிப் பார்த்தேன். நன்கு இனித்தது.
//// அன்புத்தோழி அவர்கள் சொல்லியது: காலையில் எழுந்து அவன் படத்திற்கு முன்பு நின்று அப்பா முருகா காப்பாத்து என்று சொல்லும் போது, அப்பொழுது யாமிருக்க பயம் ஏன் என்று கூறும் அவன் சிறிப்பு முகத்தைப் பார்த்தால் மனதிற்கு தனி தெம்பு வரும். இந்த அருமையான பாடலை பதிவிலிட்ட திரு சுப்பையாவிற்கு எனது நன்றி ///
சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி!
நன்றி உரித்தாகுக!
/////குமரன் (Kumaran) said... அருமையான பாடல் ஐயா. ஒரு
முறை பாடிப் பார்த்தேன். நன்கு இனித்தது. ///
குமரனைப் பற்றிய பாடல் குமரனுக்கு இனிக்காமல் போகுமா?
நன்றி திருவாளர் குமரன் அவர்களே!
Post a Comment