Friday, April 13, 2007

கந்தன் கருணை புரியும் வடிவேல்

வேலை வணங்குவதே நம் வேலை


==================================================================

உலகில் உள்ள சகல உயிர்களும், தேவர்களும், முனிவர்களும், திருத்தணிகை மலையில் வந்து நாள்தோறும் துதி செய்து வழிபடுகின்றார்கள்.
திருத்தணிகைக்கு குன்றுதோறாடல் என்ற பெயரும் உண்டு.வலிய அசுரர்கள் மாளவும் நற்குணமுடைய தேவர்கள் வாழும்படியும் விரைந்து செல்லுகின்ற கூரிய வேலாயுதத்தை உடையவன் முருகன். எம்குலதெய்வமானஅந்த குன்றுதோறாடும் முருகனின் வெற்றி வேலைப் புகழ்ந்து பாடிய பாடல் இது.குஹனால் இயற்றப்பட்டது.
===================================================================
ராகம்:-பீம்பிளாஸ் தளம்:-தேசாதி


பல்லவி
கந்தன் கருணை புரியும் வடிவேல்

அனுபல்லவி

அருளொலியோடு ஆவி கலந்தே
அன்பும் ஆற்றலும் அறிவும் நயந்தே
இருசுகம் இருந்தே இடர்கள் களைந்தே
இன்புறச் செய்திடும் இறைவன் கைவேல்.....(கந்தன் கருணை...)

சரணம்

வெம்பகைகொல் வேல் வெற்றிதரும் வேல்
வேதப் பொருளை விளக்கும் மயில் வேல்
நம்பும் அடியார் நலம் வளர் கொள்வேல்
நங்கை வள்ளியின் திரு நாயகன் கை வேல்...(கந்தன் கருணை...)

குன்றுதோராடும் குமரன் அருள் வேல்
கோலமயில் நடம் கொஞ்சிடும் செவ்வேல்
அணடம் வேண்டிடும் ஆதிமகள்
நம் அன்னை பராசக்தி அருட்சுடர் வேல்...(கந்தன் கருணை....)
====================================================================
இந்தப் பாடலை இயற்றியவர் திரு. குஹன் அவ்ர்கள். இதற்கு மெட்டமைத்து உயிர்கொடுத்ததும் பின்னர் அதைப்பாடி பிரபலப் படுத்தியவர் மறைந்த கான கலாதர, ஸ்வரஸாம்ராட்.திரு. மதுரை மணிஅய்யர் அவர்கள். அவர் இந்தப்பாட்டை பாடாத கச்சேரியே கிடையாது. அப்படியே அவர் பாடாவிட்டாலும் ரசிகர்கள் இதைக் கேட்காமல் கலைந்து போகமாட்டார்கள்.


அவர் பாடிய பாட்டை கேட்க இங்கே '><"கிளிக் செய்யவும்">

சர்வஜித்வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.வலைப்பதிவு நண்பர்கள் அனைவரும் எல்லா நன்மைகளும் பெற வெற்றிவேல் முருகன் அருள்வான்
=========================================================================

7 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) April 14, 2007 2:37 PM  

//அப்படியே அவர் பாடாவிட்டாலும் ரசிகர்கள் இதைக் கேட்காமல் கலைந்து போகமாட்டார்கள்//

:-))))

முருகன் கை வேலுக்கு என்றே ஒரு தனிப் பாட்டா? அருமை திராச ஐயா!

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) April 14, 2007 9:03 PM  

மிக நல்ல பாடல் தி.ரா.ச. பாடலுக்கு நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) April 14, 2007 11:17 PM  

@குமரன் நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

தி. ரா. ச.(T.R.C.) April 14, 2007 11:20 PM  

@ரவி வேலுக்கு மட்டும் இல்லை மயிலுக்கும் பாட்டு உண்டு.நன்றி கருத்துக்கு.

G.Ragavan April 23, 2007 2:56 PM  

மதுரை மணியின் இசைப்பணி முருகனுக்குத் தனி மாலை சூட்டியிருக்கிறதே. மிகச் சிறப்பு. மிகச் சிறப்பு.

இலவசக்கொத்தனார் April 23, 2007 3:20 PM  

தேசாதி தாளம் - கொஞ்சம் விளக்குங்களேன்.

VSK April 23, 2007 6:06 PM  

ஒரு காலகட்டத்துக்குப் பின், வார்த்தைகளே வராமல், வெறும் குரலிழுப்பின் மூலமே இவர் படினாலும் ரசிகர்கள் மெய்மறந்து கேட்பார்கள்!

அந்த அளவிற்குப் பிரபலமான பாடல் இது!

மிக்க நன்றி ஐயா!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP