நீலக்கடல் ஓரத்திலே...
நீலக் கடல் ஓரத்திலே ஆலயம் அமைந்ததடி
கோலக் கிளிகள் குயில்கள் குமரா எனக் கூவுதடி(நீலக்கடல்)
வேலன் ஏறும் நீல மயில் நாலுவேதம் ஓதுமடி
பாலன் தன் தந்தை ஹரனுக்குபதேசம் செய்தானடி (நீலக்கடல்)
குறுநகை தவழும் குறுமுனி வதனம்
ஈராறு கரங்களும் இருள்வினை இருள் போக்கும்
குவலயம் போற்றிடும் குருபரன் சரணமடி
குறுநகை தவழ் வள்ளி குறத்தி மணவாளனடி
ஒருதரம் சரவண பவ வென உரைப்போர்க்கு
தருணமே குறை நீங்கி
இம்மை மறுமை பயன் அருள (நீலக்கடல்)
பதிவர் ஷைலஜா பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இந்தப் பாடலைப் பாடி அனுப்பினார்.
4 comments:
//ஒருதரம் சரவண பவ வென உரைப்போர்க்கு
தருணமே குறை நீங்கி
//
அருமையான வரிகள்!
பங்குனி உத்திரம் அன்று பக்தியோடு காவடி எடுத்து வரும் அன்பர்க்கு, இவ்வரிகள் நம்பிக்கை நல்குமே!
பால் காவடி எடுப்போர் வயிற்றில் பால் வர்க்கும்!
ஷைலஜா அவர்கள் அருமையாகப் பாடியுள்ளார். "குமரா" என்று அவர் குழைவது இதமாய் உள்ளது!
ஷைலஜா,
நல்ல நாளன்று தாங்கள் அனுப்பிய பாடலுக்கு மிக்க நன்றி!
பாடல் மிக நன்று!
இன்னும் ஆடியோவில் கேட்கவில்லை. கேட்டுவிட்டுச் சொல்கிறேன்!
@ஷைலஜா நல்ல பாடல். எனக்கு உங்கள்மேல் பொறாமையாக இருக்கிறது இது போல் பாட முடியவில்லையே என்று
ரவி பாடல் வெகு அழகாக அமைந்து இருக்கிறது.
ஆனால் கேட்க முடியவில்லையே:-(
Post a Comment