Monday, February 26, 2007

028: குமர மலை குயிலினம் கூவும் இசை கேட்குது


குமர மலை குயிலினம் கூவும் இசை கேட்குது
தணிகை மலை தென்றலும் தாலாட்டு பாடுது
செந்தூரின் அலை ஓசை ஸ்ருதியாக மாறுது
(குமர மலை குயிலினம்)

தெள்ளு தமிழ் பாட்டிலே புள்ளி மயில் ஆடுது
வள்ளலவன் பேரைத் தினம் சேவலினம் பாடுது
சரவணபவாவென்ற சங்கீதம் பரவுது
ஆறுபடை வீடுடைய எழில் வேந்தன் நாமத்தை
(குமர மலை குயிலினம்)

பழமுதிரும் சோலையில் வண்டினம் முழங்குது
அழகன் அவன் அருளமுதம் தேனாகப் பாயுது
வள்ளியுடன் குஞ்சரியின் மணக்கோலம் காணுது
அன்னை உமை தந்தை சிவன் அருளாசி கேட்குது
திருமுருகன் நாமம் அதை பக்தியுடன் பாடும் போது
பழனி மலை பஞ்சாமிருதம் நாவினிலே இனிக்குது
(குமர மலை)

இராகம்: மாண்ட்
தாளம்: கண்ட சாபு
பாடியவர்: சுதா இரகுநாதன்
இயற்றியவர்: கே.எஸ். இரகு


பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்

5 comments:

jeevagv February 26, 2007 8:18 PM  

இந்த பாடலும் என் மனதைக் கவர்ந்த அழகிய பாடல், தருவிப்பிற்கு நன்றி குமரன்.
பாடலில் கூ கூ என கூவும் குயில்களின் இனிமையும் அருமை.

கூடுதல் விவரம்: இந்த பாடல் இடம் பெறும் சிடி தொகுப்பு இது.

மெளலி (மதுரையம்பதி) February 27, 2007 12:27 AM  

அருமையான பாடல், நன்றி குமரன்!

குமரன் (Kumaran) February 27, 2007 5:27 PM  

ஜீவா, இந்தப் பாடலை அண்மையில் தான் முதன்முதலில் கேட்டேன். நீங்கள் சொன்னது போல் குயிலினங்கள் கூவும் இடம் எனக்கும் ரொம்ப பிடித்தது. அதுவும் இடக்காதில் ஒரு முறையும் வலக்காதில் ஒரு முறையும் குயில் கூவுகிறதே. அது அருமை. :-)

பாடல் வரிகளும் மிகச் சிறப்பாக இருக்கின்றன.

இசைவட்டு விவரத்தைச் சொன்னதற்கு நன்றி. ஜூனில் இந்தியா வரும் போது இதைத் தேடிப் பார்க்கிறேன்.

***

பாடலைக் கேட்டு இரசித்ததற்கு நன்றி மௌலி ஐயா.

தி. ரா. ச.(T.R.C.) March 04, 2007 10:01 AM  

குமரன் கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் குமரன் என்ற பாட்டைப் போட முடியுமா?இதில் நானும் பாடல் இடலாமா

குமரன் (Kumaran) March 04, 2007 10:36 AM  

தி.ரா.ச.

இந்தப் பதிவில் சேர்ந்து பாடல்களை இடுவதற்கு உங்களுக்கு அழைப்பை அனுப்பியிருக்கிறேன். அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். பின்னர் நீங்களும் இந்தப் பதிவில் பாடல்களை இட முடியும். முருகனைப் பற்றிய பாடல்களை இங்கே இடுகிறோம்.

நீங்களே 'கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்' பாடலை இட விரும்பினால் இடலாம்.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP