ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
பாடல் தொகுப்பு: திருப்புகழ்
இயற்றியவர்: ஓசைமுனி அருணகிரிநாதப் பெருமான்
பாடியவர்கள்: பிரியா உடன்பிறந்தோர் (சகோதரிகள்)
பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்
17 comments:
Test
கந்த புராணம் முழுமையும் படித்த பலன் இதற்கு உண்டு எனக் கேள்விப்பட்டிருக்கிறேன், குமரன்.
தைப்பூசத்தை முன்னிட்டு நீங்கள் இட்ட இப்பதிவு மிகவும் அருமை.
குமரன் சார்,
பதிவுக்கு நன்றி
ஆமாம் எஸ்.கே. கந்த புராணம் முழுவதும் படித்த பலன் கொடுக்கக் கூடிய திருப்புகழ் பாடல் தான் இது. நீங்கள் இந்தப் பாடலுக்குப் பொருள் உரைப்பீர்கள் என்று அடியேன் பொருள் உரைக்காமல் விட்டிருக்கிறேன்.
- ஒரு இலுப்பைப்பூ.
நன்றி முருகா.
(சிவபாலன் என்றால் முருகன் தானே). :-)
குமரன்,
பதிவுக்கு நன்றி.
அருணகிரிநாதருக்கு ஓசைமுனி எனும் பெயரும் உண்டா? இன்று அறிந்து கொண்டேன். நானும் Musicindiaonline.com ல் இவ்வளவு காலமும் பாடல்கள்/பக்திப் பாடல்கள் எல்லாம் கேட்கிறேன். ஆனால் இப் பாடல் என் கண்ணுக்கு எட்டவில்லை. உங்கள் மூலம்தான் கேட்க வேண்டும் எனும் பலன் போலும். :))வெள்ளிக்கிழமை அதுவுமாக எம் பெருமான் பாடலொன்றைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி குமரன். சிறு வயதில் இருந்தே மனப்பாடம் செய்து என் ஊர் முருகன் ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பாடும் பாடல்.
என அண்ணர்மார் அக்காவின் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்த முதல் தமிழ் பாடல்களுள் ஒன்று இது. மற்றையது பாலும் தெளிதேனும் எனும் பாடல்.
அழகான பாடல்! இந்தப் பாடலுக்குத் தான், எங்கள் ஊர்ப் பக்கம் சில பெண்கள், அவர்கள் கணவனுடைய பெயார் அருணாசலமாக இருந்தால், கடைசி வரியை "ஆதி அவுக பெயரில் அமர்ந்த பெருமானே" என்று பாடுவார்களாம் :-) சுப்பையா அவர்களும் இதைக் கவியரசு தொடர் பதிவில் ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
இப்பாடலை "மாங்குயிலே பூங்குயிலே" மெட்டிலும் பாடலாம். அதே மெட்டில் ஒரு படத்திலும் வரும் படம் பெயர் "தம்பி பொண்டாட்டி" என்று எண்ணுகிறேன்.
ஆமாம் வெற்றி. அப்படி தான் இராகவன் சொல்வார். நானும் சிறுவயதில் இருந்தே பாடும் பாடல் தான் இது.
சேதுக்கரசி. நல்ல சுவையான தகவல். எனக்கும் இப்படி ஒரு அனுபவம் நினைவிற்கு வருகிறது. ஒரு முறை திருவரங்கத்தில் ஒரு அம்மா 'திருவரங்கன் தாலாட்டு' என்று ஒரு பாட்டை எனக்குச் சொல்லிக்கொடுத்தார். பாடிக் கொண்டே வந்தவர்
'கஸ்தூரி ரெங்கேசா; கஸ்தூரி ரெங்கேசா
கல்யாண புருஷா கல்யாண புருஷா'
என்று பாடினார். பக்கத்தில் இருந்த அம்மா அப்போது சொன்னார் 'இந்த அம்மா புருஷா என்று சொல்ற இடத்தில் எல்லாம் வரதான்னு போட்டுக்கோங்க'ன்னு. :-)
ஆமாம் சிவமுருகன். நானும் ஒரு முறை அந்த மெட்டில் பாடிப்பார்த்தேன். :-)
அன்பு சேதுக்கரசி,
அந்த ஒரு "அவுக"க்குள்ள மத்த"அவுக" எல்லாம் அடக்கம்னேன்.
https://www.youtube.com/channel/UCYr-S2_Wi3gwSwX4Dzj310Q
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
கந்த புராணம் முழுமையும் படித்த பலன் இதற்கு உண்டு எனக் கேள்விப்பட்டிருக்கிறேன், குமரன்.
தைப்பூசத்தை முன்னிட்டு நீங்கள் இட்ட இப்பதிவு மிகவும் அருமை.
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்று!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
1. என் உள்ளமாகிய மயிலின்மீது ஏறி விளையாடியும்,
2. எனக்கு குருவாக வந்து உபதேசித்து அருளியும்,
3. என்னுடைய வினைகளையெல்லாம் தீர்த்தருளியும்,
4. என் மாயா பாசங்களை வேலால் உருவி ஒழித்தருளியும்,
5. என் அகங்கார மமகார மலங்களை அடக்கியருளியும்,
6. என்னை உன்னோடு புணர்த்தியருளியும்
... இவ்வாறு உன் ஆறு திருமுகங்களாலும் எனக்கு கருணை புரிவாயாக.
வலை பதிவில் இப்படி அருமையாக பொருளா உரைத்தவர் உனக்கு மிக்க நன்றி 🙏🏽
Post a Comment