Monday, February 12, 2007

026: மனம் இரங்காதோ ஐயா?




முருகா முருகா என்று பலமுறை உரைத்தாலும்
மனம் இரங்காதோ ஐயா?

முருகா முருகா என்று பலமுறை உரைத்தாலும்
மனம் இரங்காதோ ஐயா?
திருத்தணிகை வாழும் (முருகா)

வருக வருக நீ வண்ண மயில் ஏறி!
வாரண முகத்தோனே வணங்கும் சிவபாலன் (முருகா)

வையகம் போற்றும் வானவர் தலைவா!
வள்ளி மணவாளா வேலாயுதா கந்தா!
கைவிடுமாகில் யார் கதி எனக்கு?
கார்த்திகேயனே உன்னைச் சரணடைந்தேன்! (முருகா)


இராகம்: சண்முகப்ரியா
தாளம்: ஆதி
இயற்றியவர்: ??
பாடகர்: கே.ஜே. யேசுதாஸ்

பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்

4 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) February 13, 2007 10:28 AM  

குமரன்

தணிகைப் பதியானை அவனுக்கு உகந்த ராகத்தில் ரசிப்பது தான் எவ்வளவு சுகம்?
சண்முகப்ப்ரியா அழகே அழகு!

//வாரண முகத்தோனே வணங்கும் சிவபாலன்//

பாருங்க, சிவபாலன் வந்து இதுக்குப் பின்னூட்டம் போடணும் சொல்லிட்டேன்! :-) அவர் பேரைப் பாடுகிறோமே, சும்மாவா?

குமரன் (Kumaran) February 13, 2007 10:32 AM  

சரியா சொன்னீங்க இரவிசங்கர். நானும் பாடலைக் கேட்டு முடித்த பின் அப்படித் தான் நினைத்தேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) February 13, 2007 10:34 AM  

குமரன்,

அடியேன் இந்தப் பதிவை draft (வரைவுப்படி) ஆகத் தான் பார்த்தேன்.
சரி செவ்வாய்க் கிழமை, நாமே முருகனருள் பதிவை இட்டு, காணாமல் போனவர் பற்றிய அறிவிப்புக்கு ஏடு செய்யலாம் என்று போட்டு விட்டேன்!

பின்பு பார்த்தால் தான் தெரிகிறது, நீங்கள் மதியமே பதிவிட்டு விட்டீர்கள் என்று! அடியேனை மன்னிக்கவும்.

ஆக மொத்தம் இந்தச் செவ்வாயில், முருகனுக்கு முருகனருளில் இரண்டு மாலைகள்!
(அவனுக்குத் தான் இரண்டு என்றால் மிகவும் பிடிக்குமே! சரி தானே ஜிரா? :-)

குமரன் (Kumaran) February 13, 2007 10:39 AM  

இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது இரவிசங்கர். கூட்டுப் பதிவுகளில் இது நடப்பது ஒன்றும் வியப்பில்லையே. நீங்கள் சொன்னது போல் ஒன்றிற்கு இரண்டு குமரனுக்குக் கிடைத்திருக்கிறது. :-)

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP