023 : ஸ்ரீஸ்கந்த குரு கவசம் - 1
கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசந்தனை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகின்றேன் காத்தருள்வாய்
சித்தி வினாயக ஜயமருள போற்றுகின்றேன்
சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சந் தீர்த்தென்னை ரட்சித்திடுவீரே!
12 comments:
பாடலின் சுட்டியைக் கொடுக்கவில்லையே சிபி?
பாடல் முழுவதையும் இங்கே இடப் போகிறீர்களா?
விளக்கமும் சொல்வீர்களா?
அடடா. அடுக்கடுக்கா கேள்விகள் வருதே. இப்படி அடுக்கடுக்கா கேள்வி கேட்டு ஒரு தடவை பட்டாலும் அறிவு வரமாட்டேங்குதே. :-(
குமரன்,
பாடல் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பிரித்துப் போட முடியும். ஒலி வடிவில் அப்படி பிரித்துப் போட முடியுமெனத் தோன்றவில்லை!
இப்படலே எளிய தமிழில்தானே உள்ளது. படித்தாலே விளங்கும் வண்ணம் எளிமையான ஒன்றுதான்!
மற்றபடி விளக்கம் சொல்லுமளவிற்கு எனக்கு ஞானமும் இல்லையே!
கலக்கலாக ஆரம்பம், கொஞ்சம் விளக்கமும் சொன்னா நல்லா இருக்கும்.
உ.ம். கலிதோஷம்,சிற்பர கணபதே, போன்ற வார்த்தைகள் நிச்சயமாக விளக்கங்கள் தருவது நல்லது.
மேலும் அடுத்து வரும் பாடல் அடிகளில் மேலும் கடின சொற்கள் வரவிருப்பதால் விளக்கத்தோடு சொன்னால் நல்லா இருக்கும்.
இப்பாடல் முதல் 10 பத்தி அப்படியே சொல்வேன் அதே போல் கடைசி 10 பத்தி இடையில் கொஞ்சம் அங்கும் இங்கும் உதைக்கும். இப்பாடலை விளக்கதோடு சொன்னால் மேலும் உற்ச்சாகமாக இருக்கும்.
கந்தகுரு கவசத்திற்கும் சேலத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. யாரேனும் சொல்லுங்களேன் அதை. கண்டிப்பாக நான் சொல்ல மாட்டேன். :-)
மிகவும் எளிய தமிழில் அமைந்த பாத்தொடர். இதனைச் சூலமங்கலம் சகோதரியரின் குரலில் கேட்பது மிகவும் அருமையாக இருக்கும். உண்மை பக்தியோடு அவர்கள் பாடியதால்தான் அவை இன்றும் நிலைத்து நிற்கின்றன.
பிள்ளையார் படம் மிக அருமை சிபி. எங்கு படம் பிடித்தீர்கள்?
// அடடா. அடுக்கடுக்கா கேள்விகள் வருதே. இப்படி அடுக்கடுக்கா கேள்வி கேட்டு ஒரு தடவை பட்டாலும் அறிவு வரமாட்டேங்குதே. :-( //
:-) பட்டால் வருமா அறிவு? அந்த வெறுந் துணியால் வருமா அறிவு? முருகன் திருவடி பட்டால்தானே வரும் அறிவு!
//கந்தகுரு கவசத்திற்கும் சேலத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. யாரேனும் சொல்லுங்களேன் அதை. கண்டிப்பாக நான் சொல்ல மாட்டேன். :-) //
சேலத்தில் தானே ஸ்காந்தாஸ்ரமம் உள்ளது. 1997-ல் அங்கு ஒரு முறை சென்று வந்துள்ளேன். அந்த ஓடை நீரை பருகினால் சித்த சுத்தியாகும் என்று இந்த பா முடியும் சமயம் வருமே அதை தானே சொல்கிறீர்கள் இராகவன்?
// சிவமுருகன் said...
சேலத்தில் தானே ஸ்காந்தாஸ்ரமம் உள்ளது. 1997-ல் அங்கு ஒரு முறை சென்று வந்துள்ளேன். அந்த ஓடை நீரை பருகினால் சித்த சுத்தியாகும் என்று இந்த பா முடியும் சமயம் வருமே அதை தானே சொல்கிறீர்கள் இராகவன்? //
ஆமாம் சிவமுருகன். அதேதான். அந்த ஓடை நீர் சித்த சுத்தியாக இருக்கிறதா இப்பொழுது?
உங்கள் பின்னூட்டத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு படிக்கின்ற உணர்வு.
சிபி,
இரவிசங்கர் கண்ணபிரான் சுப்ரபாதத்தைப் பிரித்துப் பிரித்துப் போட்டார். அவரிடம் கேட்டுப் பாருங்கள்.
எளிய தமிழ் தான். ஆனாலும் விளக்கமும் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். முருகதாசர் என்ன சொல்கிறாரோ? அனுபூதி நிறைவடந்துவிட்டதே. கவசத்தைத் தொடங்கலாமே அவர்.
// குமரன் (Kumaran) said...
எளிய தமிழ் தான். ஆனாலும் விளக்கமும் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். முருகதாசர் என்ன சொல்கிறாரோ? அனுபூதி நிறைவடந்துவிட்டதே. கவசத்தைத் தொடங்கலாமே அவர். //
முருகதாசரா? நான் முருகனடியவன் ஐயா. அடியவன் என்று சொல்லக் கூட வரவரத் தயக்கமாக இருக்கிறது. ஏனென்றால் அப்படிச் சொல்லிக் கொண்டால் நல்லவனாக இருக்க வேண்டுமே. அதெல்லாம் ரொம்பக் கஷ்டம். சண்முகச் செல்வர், வலையுலக வாரியார், ஆன்மீகச் செம்மல், இப்ப முருகதாசர்னு சொன்னாலும் ஏத்துக்க முடியாம பக்கு பக்குன்னுல இருக்கு.
அநுபூதி நிறைவுதான். ஆனால் கவசம்...இப்பொழுது இல்லை. கொஞ்சம் ஓய்வு. சந்தியாவைக் கவனிக்க வேண்டும். பிறகு முருகனருளில் கொஞ்சம் பங்களிப்பு. சொல்லொரு சொல், தமிழ்ச்சங்கம்...ஒரு மாதம் கழித்துத்தான் இனியதில் என்ன செய்வது என்று முடிவு செய்ய வேண்டும்.
பெரியவர்கள் நிறைந்த இந்த சபையினில் நானும் ஒரு உள்ளேனய்யா போட்டுவிடுகிறேன்....
முருகன் அடியார்களை ஒரு சேர காண்பதே அரிது அதுவும் இந்த தைப்பூசத்தன்று. எல்லோருக்கும் திருத்தனி முருகன் திருவருள் புரிவான் திருமால் மருகன் செந்தில்வளர் அழகன்
//G.Ragavan said...
ஆமாம் சிவமுருகன். அதேதான். அந்த ஓடை நீர் சித்த சுத்தியாக இருக்கிறதா இப்பொழுது?
உங்கள் பின்னூட்டத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு படிக்கின்ற உணர்வு.//
1997ல் மேல் ஓடை சுத்தமாக தான் இருந்தது. அதன் பிறகு என்னவோ தெரியாது. சேலம் பக்கம் போகும் பாக்கியம் கிடைக்கவில்லை. எங்கே இராகவன் அழகர் கோவிலுக்கும், பழமுதிர்சோலைக்கும், (ரெண்டும் ஒரே இடத்தில் தான் இருக்கிறது இருந்தும்) போக முடியல எங்க சேலம்
போறது?
Post a Comment