021: யாரே கதி? குமரன் தாள் பணிந்தே துதி!!!
யாரே கதி? குமரன் தாள் பணிந்தே துதி!
அதிகோர சம்சாரத்தில் யாரே கதி?
குமரன் தாள் பணிந்தே துதி!
சமரம் தன்னில் சூரனை தாரகனோடு
சம்ஹாரம் செய்த சிங்கார சங்கர
குமரன் தாள் பணிந்தே துதி!
ஈசன்! வள்ளி தெய்வானை நேசன்! பக்தர் ஹ்ருதய
வாசன்! சண்முக ராமதாசன் குலதெய்வ
குமரன் தாள் பணிந்தே துதி!
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
பாடியவர்: D.K. பட்டம்மாள்
இராகம்: யதுகுல காம்போதி
தாளம்: ஆதி
***
அருஞ்சொற்பொருள்:
அதிகோர சம்சாரம் - மிகக் கடுமையான உலக வாழ்க்கை
சமரம் - போர்
சூரன், தாரகன் - சூரபத்மனும் அவன் தம்பியும்
7 comments:
மிக நல்ல பாட்டு. இரண்டு முறை கேட்டேன்.
நன்றி சாயி பக்தரே.
கேட்டறியாத பாடல். பகிர்ந்தமைக்கு நன்றி.
அறிதான பாடல்....நன்றி குமரன்
நன்றி சாத்வீகன் & மதுரையம்பதி மௌலி ஐயா.
மின்னஞ்சலில் யோகன் ஐயா அனுப்பியது:
அன்புக் குமரன்!
குமரன் தாள் பணி ; பட்டம்மாள் குரலில் நான் முதல் தடவை கேட்கிறேன்.
தமிழ் சாகித்தியத்துக்கும் குறைவில்லை.நன்று
யோகன் பாரிஸ்
நன்றி யோகன் ஐயா.
Post a Comment