022: முருகா நீ வரவேண்டும்!
முருகா நீ வரவேண்டும்!
முருகா நான் நினைத்த போது நீ வரவேண்டும்!
முருகா நீ வரவேண்டும்!
நினைத்த போது நீ வரவேண்டும்!
நீல எழில் மயில் மேல் அமர் வேலா!
நினைத்த போது நீ வரவேண்டும்!
உனையே நினைந்து உருகுகின்றேனே
உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே! (நினைத்த)
கலியுக தெய்வம் கந்தா நீயே!
கருணையின் விளக்கமும் கடம்பா நீயே!
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்
மாயோன் மருகா முருகா என்றே (நினைத்த)
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
இசையமைத்தவர்: டி.எம்.சௌந்தரராஜன்
இயற்றியவர்: என்.எஸ். சிதம்பரம்
12 comments:
அருமையான பாடல். அதிலும் TMS அவர்களின் குரலில்..
எத்துணை முறை கேட்டாலும் அலுக்காது. வரிகளை பகிர்ந்தமைக்கு நன்றி குமரன்.
ஆகா...மிகவும் அருமையான பாடல். அனைவருக்கும் பிடித்த பாடல். ஏழிசை வேந்தரின் இனிய இசையிலும் குரலிலும் கேட்கக் கேட்கப் பரவசம். இதை இயற்றியவர் என்.எஸ்.சிதம்பரம் என்பது எனக்குப் புதிய செய்தி. இவர் டி.எம்.எஸ் இசையில் இன்னமும் முருகன் பாடல்கள் எழுதியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
//முருகா நான் நினைத்த போது நீ வரவேண்டும்!//
குமரன் பாடல் நன்று!
பாடலை நீங்கள் பதிந்த சமயமும் நன்று! :-)
இயற்றியவர் என்.எஸ்.சிதம்பரம் என்பது எனக்குப் புதிய செய்தி தான்!
திரு. சாத்வீகன் சொன்னது போல, எத்துணை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்....நன்றி குமரன்.
மிகவும் நல்ல பாடல். அலுக்க்காத பாடல். இதே மதிரி சிந்தனை செய் மனமே பாடலும் காதுக்கு இனிமையான பாடல். போடமுடியுமா குமரன்.
உண்மை சாத்வீகன். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் தான் இது. இந்தப் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவர்கள் தானே நாம்.
இராகவன்.
இந்தப் பாடலை இயற்றிவரின் பெயரை ம்யூசிக் இந்தியா ஆன்லைன் தளத்தில் பார்த்தேன். உங்களுக்கு இவரைத் தெரியுமா? யார் இவர்?
மின்னஞ்சலில் யோகன் ஐயா அனுப்பியது:
அன்புக் குமரன்!
இவை தான் பக்திப் பனுவல்கள். எளிய தமிழில் இறைபுகழ் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
"மலை யெனத் துயர் வளர்ந்திடும் போது; மாயோன் மருகா முருகா" உண்மை அந்த நம்பிக்கைதான் வாழ்க்கை;
கேட்டால் கண்பனிக்கும்.
நன்றி
யோகன் பாரிஸ்
உண்மை தான் யோகன் ஐயா. இந்த நம்பிக்கை தான் வாழ்க்கையில் துணையாக வருகிறது. அவனும் அந்த நம்பிக்கைக்கேற்ப நடந்து கொள்கிறான். நான்கு மறை தீர்ப்பல்லவா?!
எல்லாம் அடியேனுக்கு அருள் வேண்டி உன் திருவடி அடைக்கின்றேன்
He is a song composer n writer of this song he has written many songs
Post a Comment