Saturday, November 10, 2007

கந்த சஷ்டி - 1: சரவணபவ எனும் திருமந்திரம்!

தீபாவளி, அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்குகிறது கந்த சஷ்டித் திருவிழா!
ஆறு நாட்கள்! ஆறாம் நாள் சூரனுக்கு அருளல்! - ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல் பார்ப்போம்!
ஆறாம் நாள் "திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்" பாட்டை இடுகிறேன்!(பித்துக்குளி முருகதாசர் பாடல்கள் இணையத்தில் எங்கு கிடைக்கிறது என்று அன்பர்கள் யாராச்சும் சொன்னால் மிகவும் மகிழ்வேன்!)

சரவண பவ என்பது திருவாறெழுத்து! சடாக்ஷரம் என்று வடமொழியில் சொல்லுவர்!
அதைப் பற்றிய பாடல் ஒன்றை, இன்று சஷ்டி முதல் நாளில் கேட்கலாம்!
பாபநாசம் சிவன் எழுதிய பாடல், சண்முகப் ப்ரியா என்னும் ராகத்தில்!
- சண்முகனுக்குப் ப்ரியமான ராகத்தில்!


பாடலைக் கேட்க சுட்டிகள் கீழே!
நித்ய ஸ்ரீ
சுதா ரகுநாதன்
ராஜேஷ் வைத்யா - வீணை



சரவணபவ எனும் திருமந்திரம் - தனை
சதா ஜபி என் நாவே - ஓம்

(சரவண)

புரமெரித்த பரமன் நெற்றிக் கண்ணில் உதித்த
போத சொரூபன் பொற்பாதம் தனைப் பணிந்து

(சரவண)

மண்மிசை கிடந்துழல் பிறவிப் பிணியைத் தீர்க்கும்
மாயை அகலப் பேரின்ப நெறியில் சேர்க்கும்
தண்மதி நிகர் குளிர் கருணை நிலவு (உ)மிழும்
சண்முக ப்ரிய சடாக்ஷர பாவன

(சரவண)



21 comments:

Unknown November 09, 2007 11:31 PM  

பூத என்பதை போத என்று மாற்றுக
அன்புடன்
ராதாகிருஷ்ணன்

ஆதாரம்
சிவன் pdf file

பாரதிய நவீன இளவரசன் November 10, 2007 2:43 AM  

மிக்க நன்றி. இந்த ஆறு தினங்களும் வருகிறேன் எதிர்பார்புடன்.

தி. ரா. ச.(T.R.C.) November 10, 2007 5:52 AM  

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு நாளும் வந்து ரவீயின் பதிவை படிக்கும்படி அந்த ஆறுமுகன் கட்டளை ஆறு

இதோ திரு..முருகதாசின் லின்க்

1
http://www.musicindiaonline.com/p/x/TJQ9SmHE7t.As1NMvHdW/?done_detect
2
http://www.raaga.com/playerV31/index.asp?pick=38723&mode=3&rand=0.6027416519362462&bhcp=1

cheena (சீனா) November 10, 2007 7:23 AM  

நல்லதொரு பதிவு. இனிய இசையில் அழகிய தமிழ்ப் பாடல்- ஆறுமுகனின் பெருமையைப் பறை சாற்றும் பாடல். தொடர்க

பத்மா அர்விந்த் November 10, 2007 8:03 AM  

முருகதாசின் பாடல்கள் ராகாவிலும் இந்தியாமுசிக் தளத்திலும் கிடைக்கும்.

குமரன் (Kumaran) November 10, 2007 8:48 PM  

நான் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல் இரவிசங்கர். இன்றும் ஒவ்வொருவர் பாடுவதையும் வேறு எந்த வேலையும் செய்யாமல் பாடலை மட்டுமே கேட்டேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) November 11, 2007 8:05 PM  

//R. said...
பூத என்பதை போத என்று மாற்றுக//

நன்றி ராதாகிருஷ்ணன்!
போத என்பதே சரி!
பதிவில் மாற்றி விட்டேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) November 11, 2007 8:06 PM  

//பாரதிய நவீன இளவரசன் said...
மிக்க நன்றி. இந்த ஆறு தினங்களும் வருகிறேன் எதிர்பார்புடன்.//

வாங்க தலைவா! அவசியம் வாங்க!
கந்தனருள் பெறுவோம்!

Kannabiran, Ravi Shankar (KRS) November 11, 2007 8:08 PM  

//தி. ரா. ச.(T.R.C.) said...
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு நாளும் வந்து ரவீயின் பதிவை படிக்கும்படி அந்த ஆறுமுகன் கட்டளை ஆறு//

ஆகா பாட்டுக்குப் பாட்டு - எசப்பாட்டு பாடறீங்களே திராச!
ஆறு நாள் சஷ்டிப் பதிவுகளில் குமரன், ஜிரா எல்லாருமே இடுவாங்க!

முருகதாசரின் சுட்டிக்கு நன்றி திராச.

Kannabiran, Ravi Shankar (KRS) November 11, 2007 8:10 PM  

//cheena (சீனா) said...
நல்லதொரு பதிவு. இனிய இசையில் அழகிய தமிழ்ப் பாடல்- ஆறுமுகனின் பெருமையைப் பறை சாற்றும் பாடல். தொடர்க
//

வாங்க சீனா!
தொடர்கிறோம்! ஆறு நாளும் வாங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) November 11, 2007 8:11 PM  

//பத்மா அர்விந்த் said...
முருகதாசின் பாடல்கள் ராகாவிலும் இந்தியாமுசிக் தளத்திலும் கிடைக்கும்.
//

நன்றி பத்மா!
திராச வும் சுட்டி கொடுத்துள்ளார்!

Kannabiran, Ravi Shankar (KRS) November 11, 2007 8:14 PM  

//குமரன் (Kumaran) said...
நான் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல் இரவிசங்கர். இன்றும் ஒவ்வொருவர் பாடுவதையும் வேறு எந்த வேலையும் செய்யாமல் பாடலை மட்டுமே கேட்டேன்.//

வீணை இசையில் கேட்டீங்களா குமரன்? இதை சாக்ஸ்-இல் கேட்கும் போது இன்னும் கன கம்பீரமாக இருக்கும்! சண்முகப் ப்ரியா ராகத்தில் இன்னும் முருகன் பாடல்களைத் தேட வேண்டும்!

Raghavan alias Saravanan M November 12, 2007 7:50 AM  

ஆஹா.. வலைப்பூவின் தலைப்பே சொல்லுதே அதன் பெருமையை!

மிக்க மகிழ்ச்சி! பாடல் மிக அருமை!

நித்யஸ்ரீயின் குரலும், சுதா ரகுநாதன் அவர்களின் வீடியோவும் நன்றாக இருந்தன... அனுபவித்துக் கேட்டேன்.

சுட்டியைத் தந்தமைக்கு நன்றி.

தொடரட்டும் தங்கள் திருப்பணி.

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

REVATHY November 15, 2007 12:39 PM  

Thanku sir TRC sir moolama unga Blog arimugam achu Londonil irundhu sasti murugan arul kidaithathu Romba nanri

Kannabiran, Ravi Shankar (KRS) November 15, 2007 11:18 PM  

//Raghavan alias Saravanan M said...
ஆஹா.. வலைப்பூவின் தலைப்பே சொல்லுதே அதன் பெருமையை!
மிக்க மகிழ்ச்சி! பாடல் மிக அருமை!//

முருகனருள் வலைப்பூவில் திராச, சுப்பையா சார் இருவரும் பல அபூர்வமான பாடல்களை எல்லாம் வலையேற்றி உள்ளார்கள்! நேரம் கிடைக்கும் போது பழைய பதிவுகளைப் பாருங்க இராகவன்!

Kannabiran, Ravi Shankar (KRS) November 15, 2007 11:20 PM  

//REVATHY said...
Thanku sir TRC sir moolama unga Blog arimugam achu Londonil irundhu sasti murugan arul kidaithathu Romba nanri//

வாங்க ரேவதி!
ரவி இல்லீன்னா krs-ன்னே கூப்பிடுங்க. சார் எல்லாம் வேண்டாம்! I am a small boy :-))

திராச சொல்லி அனுப்பினாரா? அருமை! லண்டன் ஹைகேட் முருகன் கோவிலில் சஷ்டி எப்படி இருந்திச்சு?

மெளலி (மதுரையம்பதி) November 16, 2007 2:24 AM  

உள்ளேனய்யா...

Ramani June 22, 2009 4:54 AM  

முருகன் தமிழ் கடவுள் அவனின் புகழ் மனக்க அவனை சதா நினைத்து அவன் பாடல்களை கேட்பது அளாதி இன்பம்.உங்களின் சேவைக்கு அடீயேனின் நன்றி

அன்புடன்.

ஆர்.ரமணி
மலேசியா

வள்ளியப்பன் September 14, 2009 10:08 PM  

கந்த சஷ்டி - அல்ல. கந்தசட்டி.
சரவணபவ - அல்ல. சரஅணபவ.
தமிழின் நிலைப்பாட்டை உணரமுடியாமல் ஆக்கிவிட்ட சமுதாயம் உண்மையைத் தேடத் துவங்கட்டும்.

Anonymous October 31, 2011 12:40 PM  

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



Please follow

http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

(First 2 mins audio may not be clear... sorry for that)

(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

sury siva November 01, 2011 9:19 AM  

சரவணபவ என்னும் திருமந்திரம் தனை
சதா ஜபி என் நாவே.

வேலனை வேண்டுவதை விட எனக்கு
வேறென்ன வேலையும் உண்டோ !!

சுப்பு ரத்தினம்.
http://kandhanaithuthi.blogspot.com
http://vazhvuneri.blogspot.com

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP