(சம்ஸ்கிருத புராணக் கதைப்படி; தமிழ்த் தொன்மங்களின் படி அல்ல)
எனினும் பிறந்த நாள் மகிழ்ச்சி-ன்னாலே ஒரு மகிழ்ச்சி தானே?
அதனால், பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கறேன்..
Happy Birthday முருகா!
Sweet & Sensual Kisses to you:)
நீ நல்லா இருக்கணும்;
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க!
வேதம் தமிழ் செய்த மாறன், நம்மாழ்வார் (எ) 32 வயசு நாயகி பாவப் பையனுக்கும்...
இன்று தான், உன் கூடவே பிறந்தநாள்! அவனு(ரு)க்கும், பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அடியார்கள்... வாழ்மின் வாழ்மின் என்று அருள் கொடுக்கும் படிக்கேழ் இல்லாப் பெருமாளை...... பழனக் குருகூர்ச் சடகோபன் முடிப்பான் சொன்ன ஆயிரத்துள், திருவேங்கடத்துக்கு இவை பத்தும் பிடித்தார் பிடித்தார், வீற்றிருந்து, பெரிய வானுள் நிலாவுவரே!
முருகனருள் வலைப்பூ அன்பர்களுக்கும் + குழுவினர்க்கும், நெடுநாள் கழித்து நெஞ்சார்ந்த வணக்கம்!
வள்ளிமலை = என் உள்ள மலை!
எங்கள் வடார்க்காடு மாவட்டத்திலேயே உள்ளது; வடுக நாட்டு எல்லை!
அறுபடைவீடுகள் போல் அதிக ஆரவாரம் இன்றி, ஆன்மீக வணிகம் இன்றி.. அவள்-அவன், சங்கத் தமிழ்க் காதலாய்..
"அவள் பாதம் வருடிய மணவாளா" என்று..
கோயிலை விட.. மலையும், குகையும், புனமும், முகடும்..அவங்க உயிர்க்காதலை உரசி உரசிப் பேசும்!
வாரியாரே, கோயில் பணி என்ற பேரில், அதிகம் கட்டடம் கட்ட அஞ்சி, மலையும் குகையுமாயே விட்டு விட்ட தலம்!
வள்ளி, மாயோனின் செல்ல மகள் என்பதால், தீர்த்தம்+சடாரியும், அவள்-அவன் சந்நிதியில் உண்டு; ஆங்கு, பார்ப்பனரல்லாத பூசகர் தான்!
அந்த வள்ளிமலைப் பாடலை இன்று தருகின்றேன்; சினிமாப் பாடல் தான்:)
ஆனால் சுவையான பாடல்; வரலாற்றுச் சிறப்பு மிக்கது!
இன்று May 27! தோழன் இராகவன் (எ) ஜிரா பிறந்தநாள் - Happy Birthday Ragava!
அவன் உடல்-உள்ள நலம் வேண்டி..
உங்கள் வாழ்த்து வேண்டி, ஆசி வேண்டிப் பணிகின்றேன்.
தமிழ்ச் சினிமாவில்..
இசையமைப்பாளர்கள் கூட்டு சேர்ந்து இசையமைத்த சிற்சில படங்கள் உண்டு!
இயக்குநர்கள் கூட்டு சேர்ந்து, இயக்கிய சிற்சில படங்களும் உண்டு!
ஆனால், இசையமைப்பாளர்கள் & இயக்குநர்கள்? "இருவருமே" கூட்டு சேர்ந்து, அளித்த படங்கள், மிகவும் சொற்பம்!
அவற்றுள் ஒன்று.. தெய்வத் திருமணங்கள் என்ற படம்! 3 இசையமைப்பாளர்கள் + 3 இயக்குநர்கள்
மீனாட்சி கல்யாணம் = இசை: KV மகாதேவன், இயக்கம்: P. நீலகண்டன்
வள்ளித் திருமணம் = இசை: GK வெங்கடேஷ், இயக்கம்: K.காமேஸ்வர ராவ்
திருமால் திருமணம் = இசை: MSV இயக்கம்: கே.சங்கர்
ஆனால் பாடல்கள் + வசனம் = கண்ணதாசன் ஒருவர் மட்டுமே!
பாடலைப் பார்ப்போமா?
என் மனங் கவர் ஸ்ரீதேவி, வள்ளியாய் நடித்த காட்சிகள்.. In my fave Violet dress:)
படம்: தெய்வத் திருமணங்கள்
வரி: கண்ணதாசன்
குரல்: S. ஜானகி
இசை: GK வெங்கடேஷ்
கந்தன் வந்தான், கந்தன் வந்தான்.. வள்ளிமலை மேலாக.. துள்ளி வரும் வேலாட..
புள்ளி மயில் வேலன் - அவன் மங்கை உமை பாலன் பூஞ்சிட்டுக் பெண்ணிடத்தில் காதல் கொண்ட சீலன் பொன்னழகு மின்னலிட வெற்றி கொண்ட வீரன்!
(கந்தன் வந்தான், கந்தன் வந்தான்)
ஆறு பதினாறு, வடிவேலன் வரலாறு ஐந்து படை வீடு கொண்டான் - பேர் கொண்டான் மேலும் ஒரு வீடு - நான் காண வேண்டும் வேலா ஆசை ரொம்ப நாளாய் - அதைத் தீர்த்து வைப்பாய் வேலா செந்தூரின் போர் வீரனே - என் செந்தூரம் உன் கையிலே! சேவல் கொடி போட்டு - உன் திருமுகத்தைக் காட்டு!
(கந்தன் வந்தான், கந்தன் வந்தான்)
மை எழுதும் கண்ணில், உன் மெய் எழுதிப் பார்த்தேன் மந்திரத்தின் குருநாதனே! நாதனே!
மஞ்சள் முக வள்ளி - என்றும் உன் பெயரைச் சொல்லி ஆடுகிறாள் துள்ளி - அவள் கொள்வதில்லை பள்ளி..
சிங்கார வடிவேலனே - என் சிங்காரம் உனக்கல்லவா! இந்த மலைக் குறத்தி, உன் இதயத்தில் ஒருத்தி! இந்த மலைக் குறத்தி, உன் இதயத்தில் ஒருத்தி!
(கந்தன் வந்தான், கந்தன் வந்தான்)
குறிப்பு:
இதே போல், இந்தப் படத்தில், S. ஜானகி பாடிய நாட்டுப்புறப் பாட்டு..
வள்ளி ஆலோலம் பாடுவதாய் - "வெத்தலைக் கிளியே, சொல்லாதே வெளியே, ஓடி வா, ஓடி வா" என்ற பாட்டு மிக்க அழகானது.
*சுசீலாம்மாவும் பாடியுள்ளார்கள், MSV இசையில், அதி அற்புதமான பாடல், "வானமும் பூமியும் ஆலிங்கனம்"
*வாணி ஜெயராமின், "திருமாலே.. சீராரும் மணிவண்ணா", KV மகாதேவன் இசையில், Super Hit பாடல்!
*"தங்கம் வைரம் நவமணிகள்" என்ற பாடலும் வாணி ஜெயராம் தான், பாலமுரளி கிருஷ்ணாவுடன் இணைந்து!
பாடகர் நட்சத்திரப் பட்டாளம், நடிகர் நட்சத்திரப் பட்டாளம், இயக்குநர் பட்டாளம்.. என்று மெய்யாலுமே இந்தப் படம் ஒரு கல்யாண வீடு தான்! வாரியார், மிகவும் நேசித்த தலம் = வள்ளிமலை!
அவரைக் கால தாமதம் செய்து, அரியலூர் இரயிலில் செல்ல விடாது, இரயில் விபத்திலிருந்து காத்துக் குடுத்த தலம் = வள்ளிமலை!
இதை வாரியாரே பலமுறை சொல்லுவார், "முருகன் பணிக்காக, வள்ளியை நொந்து கொண்டேன்; ஆனால் காப்பாற்றியதென்னவோ, அவள் தான்"
வாரியாரின் சொந்த ஊரான வேலூர்-காங்கேய நல்லூரில் இருந்து, எங்கள் கிராமத்தைத் தாண்டித் தான், குப்பு ரெட்டித் தாங்கல் வழியாக, வள்ளிமலைக்குப் போகணும்.
தெலுங்கு நாட்டின் எல்லை என்பதால், தமிழோடு, தெலுங்கும் அதிகம் உண்டு;
குப்பு ரெட்டித் தாங்கலில் தான் அத்தை-மாமா சில காலம் தங்கியிருந்தார்கள், கிராம நிர்வாக அதிகாரியாக! (VAO)
அப்போ, சிறுபிள்ளை இரகசியக் காதலாய், எனக்குப் பிடித்துக் கொண்ட வள்ளிமலைக் காதல்.. இன்னும் இறங்கலை; என்றும் இறங்காது!
வாரியார், மிக அதிகமான காட்சிகளில் "நடித்த" ஒரு சினிமா= துணைவன்!
அதன் காணொளியும் தருகிறேன்; சும்மா கண்டு மகிழுங்கள்:)
வள்ளிமலைக்குச் செல்ல வேண்டிய நேர்த்திக் கடன் ஒன்னு இருக்கு!
சேர்ந்து செல்லணும்!
வள்ளி வாழ்ந்து புழங்கிய இடங்களைக் காணணும்!
முருகன் எ. குறிஞ்சி நிலப் பையனுக்காகவே..
நடையாய் நடந்து, பாதம் தேய்ந்த வள்ளி - பாதம் வருடிய மணவாளா!
அவன் ஏற்றுக் கொள்வானா? என்று கூடத் தெரியாது..
பேசவும் இல்லாது, பார்க்கவும் இல்லாது..
வந்த பல ஆணழக-மணாளர்களை விலக்கி,
அவன் ஒருவனுக்காகவே வாழ்ந்து முடிந்த வள்ளி!
அவள், முருகனை விட உயர்ந்தவள்/பெரியவள்! - பெரிதினும் பெரிது கேள்!
Once again,
Happy Birthday Ragava! மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு ரொம்ப நாளா ஓர் ஆசை, லூசுத்தனமான ஆசை தான்:) முருகன்!
=அவனை, ஆளுயரம் செஞ்சி,
=எனக்கு இணையா, துணையா
=உயிருள்ள உறவு போல், வீட்டிலேயே வச்சிக்கடணும்-ன்னு ஆசை:)
என்னை விடக் கூடுதல் உயரம்
என்னை விடக் கூடுதல் அழகு
என்னை விடக் கூடதல் ஆண்மை
என்னை விடக் கூடுதல் ஆசை
என்னை விடக் கூடுதல் அன்பு
என்னை விடக் கூடுதல் கூடல்
*நம்ம உயரமே இருக்குறதால.. அவன் தோள் மேல கை போட்டுக்கலாம்!:)
*தலை சீவி விடலாம், Shave பண்ணி விடலாம்..
*அவனுக்கு Tie கட்டி விடலாம்:)
*எச்சி தோசை, கடிச்சிக் கடிச்சிச் சேர்ந்து சாப்பிடலாம்..
*போர்த்திக்கிட்டு கதகத-ன்னு தூங்கலாம்
இன்னும் என்னென்னமோ.. :)
இப்படி, "நம் உயர" முருகன் திருமேனி..
(சிலை-ன்னு சொல்ல எனக்கு வாய் வரலை)
சில சினிமாப் படங்களில், எப்பவாச்சும் வரும்; அதைப் பார்த்தாலே, என் கற்பனை துள்ளிக்கிட்டுப் பறக்கும்!
கீழ்வானம் சிவக்கும் படத்தில்,
வீட்டின் தோட்டத்தில் முருகன் இருப்பான்;
சிவாஜியும் சரிதாவும், அவனைச் சுத்தித் தான் சண்டை போட்டுக்குவாங்க:)
ஆனா அவன் கொஞ்சம் சிறுசு; பொடியன்!
பெரியவனா, ஆண் மகனா, உற்ற தோழனா
என் உசரத்துக்கே இருக்கும் ஒரு முருகன்! படம்: நீலகிரி எக்ஸ்பிரஸ்
Video வில் நீங்களே பாருங்க : எம்புட்டு துணைவனா எனக்கு இருப்பான்-ன்னு:)
தாம் தித் தாம் - தை தித் தை
தாம் தித் தாம் - தை தித் தை
திருத்தணி முருகா தென்னவர் தலைவா சேவலும் மயிலும் காவலில் வருமா
(திருத்தணி) தேன் பரங்குன்றம் செந்தூர் மன்றம் செந்தமிழ்ச் சங்கம் திருநாள் எங்கும் வடிவேல் சேவை நினைந்தாள் பாவை காணும் - கண்ணில் எங்கும் - கண்டாள் உந்தன் தேவை
(திருத்தணி)
கந்த வேளை எந்த வேளும் வெல்லுவதில்லை! உந்தன் பேரை அன்றி வேறு சொல்லுவதில்லை! உன்னை எண்ணும் உள்ளம் ஏதும் கொள்ளுவதில்லை! இன்று நாளை என்றும் துன்பம் அண்டுவதில்லை!
பஞ்ச பூதம் - ஒன்று கூடும் மன்றம் வந்த பேர்க்கு - வாழ்வு நல்கும் குன்றம் மங்கல குங்குமம் - கிண்கிணி மங்கலம் ஓம் எனும் மந்திரம் - யாவையும் சங்கமம்
ஆதியாகி அந்தமாகி நீதியாகி நெஞ்சமாகி அலைகள் கலகலென இலைகள் சலசலென மலைகள் மடமடென உலகம் இசை பொழிய வரு முருகா! ஒரு முருகா! திரு முருகா!
திருத்தணி = வள்ளிக்கும் முருகனுக்கும் திருமணம் நிகழ்ந்த ஊர்!
(அருகிலேயே தான் சொந்த ஊரு, வள்ளிமலை)
முருகனுக்குக் காமம் தணிந்த இடம் = தணிகை:)
கோபம் தணிந்த இடம், போட்டியில் தோற்றான் = சும்மா புராணக் கற்பனை!
அசுரர் குடி கெடுத்த ஐயா = முருகனுக்கு யார் குடியும் கெடுக்கத் தெரியாது!
* முருகன் = தமிழ் நிலத்தின் மூத்த குடி! முன்னோர் நடுகல்!
* வள்ளி = அவனேயே வாழ்வில் சுற்றிக் கொண்ட காதல் துணைவி!
= இவர்கள் இருவரின் காதலும்/காமமும் தணிந்தவொரு தணிகை
கொடிநிலை கந்தழி வள்ளி - என்னும் தொல்காப்பியம்!
குறிஞ்சி நிலத் தமிழ் தொன்மங்களாய்.. குடி காத்த முருகன்!
நம்மையும் காக்கட்டும்!
பிறந்த நாள் பையன் இராகவனையும் காக்கட்டும்! பல்லாண்டு பல்லாண்டு!