செல்லக் குழந்தை!
நீ என் குழந்தையடா – உன்னை
மடியேந்துதல் என் உரிமையடா… முருகா…
(நீ என்)
தீச்சுடரில் பிறந்தாய்
தீங்கனியாய் வளர்ந்தாய்
மாங்கனியால் பழனி
மாமலையில் அமர்ந்தாய்!
(நீ என்)
உன் முகம் காண்கையிலே
உள்ளத்தில் ஒரு நேசம்
திருமுகம் காண்கையிலே
தோன்றுது தனிப் பாசம்!
திருமகள் மருமகனே
திருப்புகழ் நாயகனே
அறுமுகத் திருமகனே
அருகினில் வா குகனே!
(நீ என்)
கூவி அழைக்கின்றேன்
குமரா திரு முருகா!
தாவி எனை அணைக்க
தக்ஷணமே வருவாய்!
தத்தித் தவழ்ந்து வரும்
தங்கத் திருப் பாதம்
எட்டி எனை உதைத்தால்
கிட்டிடுமே மோக்ஷம்!
(நீ என்)
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://knowledgefruit.blogspot.com/2010/12/story-of-subrahmanya-is-found-in.html
3 comments:
Sooper-kka:)
வைகாசி விசாகம் = முருகன் பிறந்தநாள் என்பது வழக்கம்!
அன்று பதிவேதும் இட முடியலையே -ன்னு வருத்தமா இருந்தேன்!
டாய் ரவி, நண்பனுக்கு இடத் தெரியுது, எனக்கு இடத் தெரியாதா? -ன்னு முருகன் கேட்டா, எங்கே போய் மூஞ்சை வச்சிக்குவேன்?:)
ஆனா, அக்குறையை, நீங்கள் போக்கினீர்கள் - "செல்லக் குழந்தை" என்று இட்டு! Birthday Boy is Happy:)
//உன் முகம் காண்கையிலே உள்ளத்தில் ஒரு நேசம்
திரு முகம் காண்கையிலே
தோன்றுது தனிப் பாசம்!//
நச்!
உண்மையும் கூட!
//திருமகள் மருமகனே
திருப்புகழ் நாயகனே//
I like this:)
//தாவி எனை அணைக்க
தக்ஷணமே வருவாய்!//
இது மட்டும் புரியலையே?:))
What is தக்ஷணம்?:)
--
//எட்டி எனை உதைத்தால்
கிட்டிடுமே மோக்ஷம்//
Oh, முருகனை எட்டி உதைக்கலாம்-ன்னு சொல்றீங்க! Dank u Dank u!:)
டாய் லூசு முருகா செல்லம், உன்னை எட்டி ஒதைக்கலாம் -ன்னு கவிக்காவே சொல்லிட்டாய்ங்க.. வாடா இன்னிக்கி மாலை, ஒனக்கு இருக்கு Special கச்சேரி:)
அட, கண்ணனா! முருகனருளி(ளா)ல் மட்டுமே உங்களையும் பார்க்கலாம் போலிருக்கு :) நாளைக்கு எங்கூர் கோவிலில் வள்ளி கல்யாணம். அது சம்பந்தமா உதவி செய்யப் போன போது முருகன் மனசில் சுற்றிச் சுற்றி வந்தான். இந்தப் பாட்டும் தந்தான். உங்களுக்குப் பிடிச்ச வரிகள் எனக்கும் பிடிச்சிருந்தது.
'தக்ஷணம்' அப்படின்னா, இக்கணம், இந்த நொடியேன்னு பொருள். 'இப்பவே உடனடியா வாடா'ன்னு அர்த்தம்.
ஐய்ய்ய்ய... குட்டிக் குழந்தையை யாராச்சும் உதைப்பாங்களா? குழந்தை நம்மை உதைச்சா சுகமாத்தானே இருக்கும்? அதுவும் முருகக் குழந்தை உதைச்சா? பிறவிப் பிணியே போயிடும்தானே. அதனால 'குட்டிக் காலால என்னை எட்டி உதைடா'ன்னு அவனைக் செஞ்சிக் கேக்கிறேன் :) அவனை உதைக்காதீங்க ப்ளீஸ். பா...வம். குட்டிப் பாப்பா.
Post a Comment