Happy Birthday முருகா! (Jun 01, 2015)
இன்று, (Jun 1, 2015) = வைகாசி விசாகம்!
முருகன் பிறந்த நாள்.. (தோற்ற நாள்)
(சம்ஸ்கிருத புராணக் கதைப்படி; தமிழ்த் தொன்மங்களின் படி அல்ல)
எனினும் பிறந்த நாள் மகிழ்ச்சி-ன்னாலே ஒரு மகிழ்ச்சி தானே?
அதனால், பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கறேன்..
Happy Birthday முருகா!
Sweet & Sensual Kisses to you:)
நீ நல்லா இருக்கணும்;
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க!
வேதம் தமிழ் செய்த மாறன், நம்மாழ்வார் (எ) 32 வயசு நாயகி பாவப் பையனுக்கும்...
இன்று தான், உன் கூடவே பிறந்தநாள்! அவனு(ரு)க்கும், பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அடியார்கள்... வாழ்மின் வாழ்மின் என்று அருள் கொடுக்கும்
படிக்கேழ் இல்லாப் பெருமாளை...... பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துள், திருவேங்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார், வீற்றிருந்து, பெரிய வானுள் நிலாவுவரே!

படம்: கந்தன் கருணை
குரல்: சூலமங்கலம் ராஜலட்சுமி, & சூலமங்கலம் ஜெயலட்சுமி & ஜமுனா ராணி & ஏ.பி. கோமளா
இசை: கே.வி. மகாதேவன்
வரி: கண்ணதாசன்
ஆறுமுகம் ஆன பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன், முருகன் எனும், இனியபெயர் கொண்டான்!
காலமகள் பெற்றமகன் கோலமுகம் வாழ்க!
கந்தன் என, குமரன் என, வந்தமுகம் வாழ்க!
(ஆறுமுகம் ஆன பொருள்)
1. தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று
2. தண் நிலவின் சாறு எடுத்து வார்த்த முகம் ஒன்று
3. பால் மணமும் பூ மணமும் படிந்த முகம் ஒன்று
4. பாவலர்க்கு பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று
5. வேல் வடிவில் கண் இரண்டும் விளங்கு முகம் ஒன்று
6. வெள்ளி ரதம்போல வரும் பிள்ளை முகம் ஒன்று
(ஆறுமுகம் ஆன பொருள்)
என்னைக்கும் கேட்காதவன், போன வாரம், உன்னிடம், தெரியாத்தனமா உதவி-ன்னு கேட்டுட்டேன்-டா;
இனி கேட்க மாட்டேன்; உன்னால முடியாத போது, Will never put you into embarrassment.
உதவி வேணாம்; உன் பதவி போதும்; பதம் எனும் பதவி போதும்!
நீ வேண்டாயே ஆயிடினும், மற்றாரும் பற்றில்லேன்
மெய்த்துயர் வீட்டாவிடினும், சித்தம்மிக உன்மேலே வைத்தேன் அடியேனே..
நீ வேண்டாயே ஆயிடினும், மற்றாரும் பற்றில்லேன்
மெய்த்துயர் வீட்டாவிடினும், சித்தம்மிக உன்மேலே வைத்தேன் அடியேனே..
Whatever..
Love u so much
Happy Birthday!
3 comments:
அழகான பாடல்...
முருகன் என்றாலே அழகன்.
அவன் முறுவலித்தால் கேட்கவேண்டுமா
அவனி எல்லாம் பொன்.
சுப்பு தாத்தா.
www.kandhanaithuthi.blogspot.com
Happy Birthday முருகா! ஆறுமுகத்துக்கும் சேர்த்து happy birthday to you ... ஜட்ஜ்மென்ட் கிளிக்.
Post a Comment