கந்தனென்று சொல்லச் சொல்ல...
பாகேஸ்வரி ராகத்தில் சுப்பு தாத்தா பக்தியுடன் பாடியது... மிக்க நன்றி தாத்தா!
கந்தனென்று சொல்லச் சொல்லக் கவலைகள் இல்லை, அந்தக்
கந்தனென்று சொல்லச் சொல்லக் கவலைகள் இல்லை, அந்தக்
கந்தன் அருள் பெறுவதுவே வாழ்க்கையின்
எல்லை!
(கந்தனென்று)
சிந்தனையில் கந்தனை வை
கந்தனையே வந்தனை செய்
கந்தனன்றி சொந்தமில்லை பந்தமுமில்லை,
அவன்
கஞ்ச மலர்ப் பாதமன்றி தஞ்சமுமில்லை!
(கந்தனென்று)
கவலைகளை விட்டு விடு
கந்தனடி பற்றி விடு
ஆறெழுத்து மந்திரத்தை நாளும்
சொல்லிடு, அந்த
ஆறுமுகன் துணையிருப்பான் நீயும்
நம்பிடு!
(கந்தனென்று)
திருப்புகழின் நாயகனாம்
தீயுதித்த ஷண்முகனாம்
விருப்புகளை அவனிடத்தில் தந்து
விட்டாலே, நம்மை
வேல் கொண்டு காத்திடுவான் வாழ்க்கை
எல்லாமே!
(கந்தனென்று)
--கவிநயா
3 comments:
அருமை... உண்மை...
மிக்க நன்றி தனபாலன்!
சுப்பு தாத்தாவுக்கு வாழ்த்துக்கள் பல ... ஜட்ஜ்மென்ட் கிளிக்.
Post a Comment