முருகன் சிவாஜி vs நாத்திக சிவாஜி!
"சிவாஜி படங்களில் முருகன் பாடல்கள்" -ன்னு தனிப் பதிவே இடலாம்..
*வெற்றிவேல் -ன்னு = கந்தன் கருணை வீரபாகு நடை ஆகட்டும்..
*கண்கண்ட தெய்வமே -ன்னு = கீழ்வானம் சிவக்கும் ஆகட்டும்..
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான முத்து!
இன்று இரண்டு சிவாஜிக்கள்!
= முருகன் சிவாஜி & நாத்திகச் சிவாஜி..
ஒருவரோடு ஒருவர் - முரண்பட்ட பாட்டுச் சண்டை:)
இன்னிக்கி, மனிதனும் தெய்வமாகலாம் படத்திலிருந்து ஒரு பாடல்;
முன்பே இந்தப் படத்தை, நாம பார்த்துள்ளோம், இந்த வலைப்பூவில்!
அந்தப் பாடல்: சிவாஜி (எ) நடிகர் திலகம், முருகனுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்யும் பணிவிடைகள்..
தட்டித் தட்டித் தாலாட்டும் முருகனின் பெரியாழ்வாரோ -ன்னு கூடத் தோனும்!இந்தப் பாடல்: ஆத்திக-நாத்திகப் பாட்டுச் சண்டை:)
வாருங்கள், சீர்காழி-TMS குரலில் பார்ப்போம்/கேட்போம்!
திருச்செந்துரின் கடலோரத்தில் -ன்னு ஒன்னா இசைந்து பாடியவங்க, இதில் வசைந்து பாடுறாங்க:) | Very good combo!
செவ்வாய்க்கிழமை வரவேண்டிய பதிவு, சனிக்கிழமை வருகிறது:)
காரணம் = என் சோம்பலே!
ஏதோ மனக் கலக்கம்! சோர்விலேயே இருந்து விட்டேன்;
இந்த வாரம், இன்னுமாடா என் பாட்டு வரலை? -ன்னு கேட்க நினைச்சான் போலும் என் காதலன்!
Twitter-இல் @mokrish மூலமாக வேறு ஏதோ பேச்சு வர, இந்தப் பாட்டும் வர.. இதையே இன்று இட்டு விட்டேன்:)
வரிகள், பாட்டைக் கேட்டுக் கேட்டு எழுதியது; பிழைகள் இருப்பின் சுட்டித் திருத்தவும், நன்றி!
வெற்றி வேல் வெல்லுமடா! வினை தீர்ப்பான் வேலனடா!
கற்றவர்க்கும் கல்லார்க்கும், கருணை தரும் தென்றலடா!
பிறந்த வந்த கதையைப் பார்த்தால், பெரிய வீடு தெரியுமடா!
மறைந்து போகும் முடிவைப் பார்த்தால், மன்னன் சக்தி புரியமடா!
இடைப்பட்ட இடத்தில், கடன்பட்ட மனிதா
ஏன்டா உனக்குப் பொய்யறிவு?
ஈரேழு உலகமெங்கும் வடிவேலன் அரசாட்சி!
(வெற்றி வேல் வெல்லுமடா)
---------------
இறைவனாலே உலகம் என்றால், ஏழைகளை ஏன் படைத்தான்?
ஒருவன் வாழ ஒருவன் வாடும், உயர்வு தாழ்வை ஏன் அமைத்தான்?
கடன்பட்ட முருகன், உடன்பட்ட நமக்குக்
காட்டிய கருணை இது தானா?
கதை சொல்ல வேண்டாம் அண்ணா, அதிலே தான் அரசாட்சி!
(வெற்றி வேல் வெல்லுமடா)
---------------
குழந்தை போல அவனைப் பார்த்தால், கூட வந்து கொஞ்சுமடா!
குழந்தை இங்கு கோடி உண்டு, குமரன் என்ன தேவையடா?
ஆத்திரம் கொண்டவன் நாத்திகன் ஆவான்
அவனே அவனுக்குப் பகையாவான்!
நாத்திகம் என்பது சுய மரியாதை
நம்பிய மனிதன் தன்னை ஆள்வான்!
உன் கண்ணில் ஒருநாள் தோன்றும் வடிவேலன் அரசாட்சி!
உன் நெஞ்சில் ஒருநாள் தோன்றும் பெரியாரின் மனசாட்சி!
(வெற்றி வேல் வெல்லுமடா)
வெற்றிவேல் முருகனுக்கு - அரோகரா!
வேலக்குடி வேலனுக்கு - அரோகரா!
படம்: மனிதனும் தெய்வமாகலாம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரி: கண்ணதாசன்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன் & TMS
வலப்பக்கப் பட்டியில் "கவிஞர்-இசையமைப்பாளர்-பாடகர்" தொகுப்பு மட்டுமே, இது வரை கொடுத்துருக்கேன்..
சிவாஜி (எ) நடிகரின் தொடுப்பும் கொடுக்கணுமோ? முருகா!
1 comments:
அருமையான வரிகள் :-)நான் இந்தப் பாடலை இப்பொழுது தான் முதன் முறையாகக் கேட்கிறேன், நன்றி :-)
amas32
Post a Comment