Sunday, December 01, 2013

நினைத்தது எத்தனையிற் ...... தவறாமல்
நிலைத்த புத்தி தனைப் ...... பிரியாமல்

கனத்த தத்துவம் உற்று ......  அழியாமல்
கதித்த நித்திய சித்து ......   அருள்வாயே

மனித்தர் பத்தர் தமக்கு ......  எளியோனே
மதித்த முத்தமிழில் ...... பெரியோனே

செனித்த புத்திரரில் ...... சிறியோனே
திருத்தணிப் பதியில் ...... பெருமாளே.
----------------


நினைத்தது எந்த அளவும் தவறாமல் கைகூடவும்,

நிலையான ஞானத்தை விட்டு யான் பிரியாமல் இருக்கவும்,

பெருமை வாய்ந்த தத்துவங்களைக்* கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து அழியாமல் இருக்கவும்,

வெளிப்படுகின்ற நிரந்தரமான சித்தநிலையை நீ அருள்வாயாக.

மனிதர்களுக்குள் அன்புடையார்க்கு மிக எளியவனே,

மதிக்கப்படுகிற இயல், இசை, நாடகமாகும் முத்தமிழில் சிறந்தவனே,

சிவ மூர்த்தியிடம் தோன்றிய குமாரர்களுள் இளையவனே,

திருத்தணிகைப் பதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே

2 comments:

திண்டுக்கல் தனபாலன் December 01, 2013 10:54 PM  

அருமை.. வாழ்த்துக்கள்...

அருமை.. வாழ்த்துக்கள்...

கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

சிரிப்புசிங்காரம் March 14, 2014 10:26 AM  

அருமையான பதிவு...சீர்காழியின் கந்தர் அலங்காரம் பதிவேற்றுங்களேன்....

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP