மலைகளில் சிறந்த மலை மருதமலை!
முத்துத்
திருப்புகழைச் செப்பிவிட்ட அருணகிரி
முருகனைக் கண்ட இடம் அண்ணாமலை! திருவண்ணாமலை!
முருகனைக் கண்ட இடம் அண்ணாமலை! திருவண்ணாமலை!
நித்தம்
தவம் கிடந்து பக்திப் பெருக்கோடு
தேவன்
முருகனைக் கண்ட இடம் மருதமலை!
(நித்தம்)
முருகனைக் கண்ட இடம் மருதமலை!
(நித்தம்)
மலைகளில்
சிறந்த மலை மருதமலை! சிவன்
மகன் வந்து விளையாடும் அழகு
மலை!
ஆகா இதற்கு மிஞ்சி மலையும்
இல்லை! பிள்ளை
அவனுக்கு
மிஞ்சி இன்னும் பிறக்கவில்லை!
(மலைகளில்)
(மலைகளில்)
அஞ்சிலே
பண்டாரம் ஆனவர் இல்லை! பெற்ற
அப்பனுக்கே
பாடம் சொன்ன மகனும் இல்லை!
பிஞ்சிலே
பழுத்தாலும் துவர்ப்பும் இல்லை! இனி
பேச்சு
எதற்கு அவன் போல் கடவுள்
இல்லை!
(மலைகளில்)
(மலைகளில்)
தேவைக்கு
மேல் உள்ளதெல்லாம் தெய்வத்துக்கே என்று
திருப்பணி
செய்து வரும் தேவனுக்கு - இந்தத்
தேவனுக்கு - குமார தேவனுக்கு
மருதமலை
அளவு பொருள் வரணும்!
வளமும்
நலமும் இவன் பெறணும்!
பொங்கும்
வளமும் பல நலமும் இவன்
பெறணும்!
படம்: திருவருள்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரி: கண்ணதாசன்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
பொங்கும்
வளமும் பல நலமும் அனைவரும்
பெற மருதமலையான் துணை!
2 comments:
நன்றி குமரன்..
சஷ்டி (எ) அறு நாளில், முப்பதிவாச்சும் வந்ததே என்றொரு மகிழ்வு;
அம் மகிழ்வளித்த உங்களுக்கும் கோபிக்கும் நன்றி.
இது திருவருள் படத்தில், குன்னக்குடி இசை;
பதிவிலும் விவரங்கள் சேர்த்துள்ளேன். மற்றவை சேந்தன் அருள்;
நன்றி இரவி.
Post a Comment